தேவாலயங்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் – முழு விவரம்

தேவாலயங்கள் உட்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அனுமதி; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் – முழு விவரம்
தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் 5-7-2021 வரை நீட்டிப்பு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
கொரோனா பெருந்தொற்று பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது
ஊரடங்கு 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வகை மூன்றில் நான்கு மாவட்டங்கள் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் கூடுதல் தளர்வாக கோவில்கள், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வகை 1, வகை 2 ல் அமைக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வகை 3-ல் உள்ள தேவாலயங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் அரசு வெளியிட்டிருக்கும் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிகாட்டு விதிமுறைகளை அறிய கீழ உள்ள லிங்கினை பயன்படுத்தவும்.