தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – முழு விளக்கம்

Share this page with friends

செய்தி வெளியீடு: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

2 ஜூலை 2021

கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 29.6.2021 அன்று அறிவித்துள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 5-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள போதிலும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும்  5-7-2021 முதல் 12-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது.

இதன் அடிப்படையில் வருகிற ஜூலை 5-ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வந்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

“அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படும். எனினும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை” என அரசு 2-7-2021 அன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனுமதி கிடைத்ததால் நம் இஷ்டத்திற்கு செயல்பட கூடாது. நமது தேவாலயத்தில்/திருச்சபையில்/ஜெப வீட்டில் வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும்.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends