இயேசு கிறிஸ்து படம்: சமையலறையில் கிடைத்த 600 ஆண்டு பழைய ஓவியம்; 2200 கோடி ரூபாய்க்கு ஏலம்

சமைலயறையில் கிடைத்த ஓவியம் 24 மில்லியன் பவுண்டுகள் ஈட்டியது எப்படி?
பிரான்சில் ஒரு வயதான பெண்ணின் வீட்டு சமையலறையில் கிடைத்த ஓவியம், 24 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,200 கோடி) ஏலத்தில் போனது ஒரு புதிய சாதனையை ஏற்பத்தியுள்ளது.
நீண்ட நாட்களாக காணாமல் போயிருந்த இந்த ஓவியம், இயேசு கிறிஸ்துவை கேலி செய்வது போல மறுமலர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்த பிரபல ஓவியரான சிமாபு வரைந்த ஓவியமாகும்.
இவர் 13ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீவிரமாக இயங்கியவர். எனவே இந்த ஓவியம் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.
இந்த ஓவியத்துக்கு ஆறு மில்லியன் பவுண்டுகள் ஏலத்தில் கிடைக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
- தென்னாப்பிரிக்கா: பாறையில் கிடைத்த 73,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்
- காடுகள் முதல் வாழ்வியல் வரை – ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம்
ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி இந்த ஓவியத்துக்கு நான்கு மடங்கு அதிகமாக ஏலத்தில் கிடைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பிரான்சின் கோம்பின் நகரில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் தட்டுகளை சூடாக வைக்கும் இயந்திரத்துக்கு மேலாக இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக யாரின் கவனிப்பும் இன்றி தொங்கி கொண்டிருந்தது.
அந்த பகுதியில் பழைய பொருட்களை ஏலத்தில் விடுபவர் ஒருவர் இதை கவனித்து, வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் மேற்கூறிய ஓவியத்தை நிபுணர்களால் ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டார்.
இது மத அடையாளங்கள் கொண்ட ஒரு பழைய ஓவியமென்றும், இதற்கு பெரிய மதிப்பில்லை என்றும் வீட்டின் உரிமையாளர் கருதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you: www.bbc.com