பிலாத்து இயேசுவிடம் கேட்ட கேள்விகள் – தவக்கால சிந்தனைக்கு

Share this page with friends

1) நீ யூதருடைய ராஜாவா?
லூக்கா 23:3. பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.
யோவான் 18:37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான்.

இயேசுவின் பதில்
லூக்கா 23:3. அவர்(இயேசு) அவனுக்குப் (பிலாத்துவிற்குப்) பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். யோவான் 18:37 இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான், சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன், சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

2) நீ கலிலேயனா?
லூக்கா 23:5, 6, 7 5 அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள். 6 கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து, 7 அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
லூக்கா 23:7

3) நீ என்ன செய்தாய்?
யோவான் 18:35 பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.

ஏன் கேட்டார்? 33 அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து,இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். யோவான் 18:33

34 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். யோவான் 18:34

இயேசுவின் பதில் யோவான் 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே, இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

4) நீ எங்கேயிருந்து வந்தவன்?
யோவான் 19:9 மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான்.

இயேசு கிறிஸ்துவின் பதில்
யோவான் 19:9 அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

5) நீ என்னோடே பேசுகிறதில்லையா? எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா?
யோவான் 19:10 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.

இயேசுகிறிஸ்துவின் பதில்
யோவான் 19:11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது, ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.


Share this page with friends