பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்; ஜோசப் கல்லூரி செயலாளர் வலியுறுத்தல்

Share this page with friends

பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும், இல்லையேல் மாணவர்கள் கல்வியின் மேல் நம்பிக்கை இழக்க நேரிடும்


திருநாவலூர் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி, கமலா கல்வியியல் கல்லூரி செயலாளர் மற்றும் சென்னை மகதாலனே பெண்கள் மேல்நிலை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஜெயராஜ் தமிழக அரசுக்கு கோரிக்கை.

பிளஸ் டூ தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும், இல்லையேல் மாணவர்கள் கல்வியின் மேல் நம்பிக்கை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று தெரிவித்தார்
கொரோன உலக வரலாற்றை முற்றிலுமாக மாற்றிப் போட்டது. மனிதனுடைய நடைமுறைகளை வாழ்க்கை தத்துவங்களை முற்றிலுமாக சிதைத்துப் போட்டது. கொரோனக்கு பிறகு ஒரு புதிய உலகம் தான் இருக்கும் நிலை உள்ளது

நம்முடைய கல்வி நடைமுறையில் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், செல்போன் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களுக்கு நாம் போதித்துக் கொண்டு வந்தோம் ஆனால் இன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், அவர்களுக்கு வருகைப் பதிவு அவசியம் இல்லை என்றும், செல் போனில் ஆன்லைன் வாயிலாக கற்பிக்கலாம் என்று நம்முடைய கல்வியல் பழக்கத்தை முற்றிலுமாய் மாற்ற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு மாணவனுக்கு அவர்களுடைய கற்றல் தரம் கண்டுபிடிப்பதற்கு தேர்வு முறைதான் சிறந்தது. முதலாம் வகுப்பு முதல் ¹¹ வகுப்பு மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தாலும், பிளஸ் டூ வில் மட்டுமாவது தேர்வு நடத்திடவேண்டும்
பள்ளி கல்லூரிகளில் பயில்வது என்பது கல்வியை மட்டுமல்ல மாணவ⁻மாணவியர்கள் வாழ்க்கை நடைமுறைகள, நற்பண்புகள், சமூக மதிப்புகள்,
நல்லோழுக்கம், வாழ்க்கை தத்துவம், ஆளுமை திறன், சமூக தொடர்பு
போன்றவற்றை கற்றுக்கொள்வது முக்கிய பங்காகும். இவைகளெல்லாம் ஆன்லைன் வகுப்பில் கற்றுக் கொள்ள முடியாத அவல நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக கல்வியின் தரம் நிச்சயம் குறைகிறது. மேலும் பிளஸ் டூ தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி என்று அறிவுக்கும் நிலை ஏற்பட்டால், அது நிச்சயம் பரிதாபம் தான்

கலை அறிவியல் கல்லூரியின் கல்வி.

இன்றைய கொரோன காலத்தில் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கல்லூரிக்கு வராமலேயே ஆன்லைன் பாடங்களை மற்றும் பெற்றுக்கொண்டு தேர்வை, புத்தகத்தைப் பார்த்து எழுதும் நிலை உள்ளது. சரியாக சொல்லவேண்டும் என்றால் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து விடைத்தாளை பெற்றுக்கொண்டு புத்தகத்தை பார்த்து எழுதி கொண்டு வந்து சமர்பிக்கிறார்கள். இந்த விடைத்தாள் திருத்தப்பட்டு

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இவ்வாறாக இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது ஒருவேளை மூன்றாம் ஆண்டும் இந்த கொரோன தொடருமானால் இதே வடிவில் பல்கலைக்கழக தேர்வு நடைபெறும் என்றால், மூன்றாம் ஆண்டிலும் மாணவர்கள் அனைவரும் புத்தகத்தைப் பார்த்து எழுதி தேர்ச்சி அடைந்து இருப்பார்கள் இந்த மாணவர்களின் தரம் எப்படி இருக்கும் ? இவர்களுக்கு கல்வியின் தரத்தின் மேல் நிச்ச்யம் நம்பிக்கை இருக்காது. கிராமப்புர மாணவர்கள் படிப்பை விட்டு விடும் அவலம் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இது தான் கலை அறிவியல் கல்லூரி கல்வியின் பரிதாப நிலை. இந்த நிலை பள்ளி கல்விக்கு வரக்கூடாது அகவே தான் நிச்சயம் பிளஸ் டூ தேர்வு வேண்டும் என்று கூறுகிறோம்

கல்வியல் கல்லூரியின் கல்வி.

கல்வியல் கல்லூரி கல்விக்கும் இதே நிலைதான். இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது. முதலாம் ஆண்டு அனைவரும் தேர்ச்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத இருக்கிறார்கள். அனைவரும் புத்தகத்தை பார்த்து எழுதி தேர்ச்சி அடைவார்கள். இவர்கள் தான் பள்ளிகளில் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள். இந்த கல்வியின் தரம் எப்படி இருக்கும் என்று சற்று நாம் யோசித்துப் பார்க்க கடமைப் பட்டவர்களாக இருக்கிறோம். இந்த நிலை பள்ளி கல்விக்கு வரக்கூடாது எனவேதான் நிச்சயம் பிளஸ் டூ தேர்வு வேண்டும் என்று கூறுகிறோம்

கல்லுரிகளில் சேர்க்கை முடிவதற்க்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. ஆகவே ஒரு மாதம் காலம் கூட நாம் காத்திருந்து, கொரோன தாக்கம் குறையுமானால் தேர்வுகளை நடத்துவது தான் சிறந்ததாக இருக்கும். அப்பொழுது தான் தரமான இளைய சமுதாயத்தை ஏற்படுத்த முடியும். எனவே தயவுகூர்ந்து தமிழக அரசு பிளஸ் டூ தேர்வை நிச்சயம் நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

மக்கள் அதிகம் வாசித்தவை:

இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து
பரிசுத்த வேதாகம எழுத்தாளர்களை அறிந்து கொள்ளுங்கள்
தேர்தல் நேரத்தில் மீண்டும் தலைதூக்கிய சரக்கு பெட்டக துறைமுக பிரச்சினை - குமரியில் கிறிஸ்தவ ஆலயங்கள் ...
2021 இல் பொருளாதாரத்தில் அசீர்வதிக்கபடுவது எப்படி?
உலகின் மிக பெரிய சபையின் போதகர் பால் யாங்கி சோ கர்த்தருடைய ராஜ்யத்தில் பிரவேசித்தார் - முழுமையான விப...
ஓடிக்கொண்டிருந்தவனுக்குள்ளே ஓர் சத்தம்! வித்யா'வின் பார்வை
இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்
கர்த்தர் தேற்றுவார்
800 ஆண்டுகளுக்குப் பின் வானில் தோன்றும் அரிய கிறிஸ்துமஸ் நட்சத்திரம்
காரைக்குடி அருகே மானகிரியில் தேவாலயம் முன்பாக கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்.

Share this page with friends