மதுரையில் மதவெறியாட்டம் ஆடியவர்களை அதிரடியாக அடக்கிய காவல்துறை

Share this page with friends

மதுரை மாவட்டம் தெற்குவாசல் மேஸ்திரி வீதியில் கடந்த 16 ஆண்டுகள் இயங்கி வந்த ஏஜி சபையில் ஞாயிறு ஆராதனையின் போது அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுப்பட்ட மதவெறியர்களில் சம்பந்தப்பட்ட பத்து பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து முக்கியமான ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

பிஜேபி தெற்குவாசல் செயலாளர் ராஜாகன்னு மற்றும் கூட்டாளிகளை கைது செய்ய உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வலியுறுத்தல்.

மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியில் ஏஜி சபை தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் அனுமதி பெற்று இயங்கிவந்தது. கடந்த 16 ஆண்டுகள் எவ்வித பிரட்சனையுமின்றி ஆராதனைகள் நடந்து வந்தது. இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 30 ம் தேதி காலை அங்கு வழக்கம் போல் ஆராதனை ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அந்நேரத்தில் மதுரை தெற்குவாசல் பகுதி பிஜேபி செயலாளர் ராஜாகன்னு உட்பட பலர் ஆலய கட்டிடத்திற்குள் எவ்வித அனுமதியுமின்றி அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்தனர்.

போதகரையும் சபை மக்களையும் தகாத வார்த்தைகள் கூறி மிரட்டியதோடு, பெண்களையும் கொச்சைப்படுத்தி பேசியுள்ளனர். மேலும் சபைக்கு சொந்தமான உபகரணங்களையும் சேதப்படுத்தவும், அபகரிக்கவும் முயர்ச்சித்தனர். பின்னர் சம்பவம் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து மதத்தின் பேரில் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் 10 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, முக்கியமான 5 பேரை கைது செய்துள்ளனர்.

ஆலயம் அமைந்திருந்த இடத்தை சுற்றிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். அவர்களும் இந்த சம்பவத்தின் போது மதங்களை கடந்து ஆதரவு கரம் நீட்டினர்.

உரிய நேரத்தில் வழக்கு பதிவு செய்து, உடனடியாக கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட மதுரை மாநகர காவல்துறையையும், தமிழக அரசினையும் தமிழகமெங்குமுள்ள பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் பாராட்டி வருகின்றது.

சம்பவம் நடந்தபோது வேகமாக பகிர்ந்த நாம், சம்பவத்திற்கு பின் நடைபெற்ற கைது நடவடிக்கைகளையும் பகிர வேண்டாமா? நன்றிShare this page with friends

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 637

Warning: array_key_exists(): The first argument should be either a string or an integer in /var/www/wp-content/mu-plugins/gd-system-plugin/includes/class-cache.php on line 662