Powerful Lessons to Learn from the Life of Joseph

யோசேப்பின் ஜீவியத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்

Share this page with friends

Powerful Lessons to Learn from the Life of Joseph

யோசேப்பின் ஜீவியத்தின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்

1) தகப்பன் இருதயத்துக்கு மிகவும் பிரியமானவன். (நாம் நமது பெற்றோர்க்கு பிரியமாய் ஜீவிக்கிறோமா ?) (பலவருண அங்கி. கிடைத்தது) – 37:3

2) கீழ்படிதல் காணபட்டது (தகப்பனார் அவனை சகோதரர் இடம் போக சொன்னவுடன் இதோ போகிறேன் என்றான். சகோதரர் என்னை பகைப்பதை அறிந்தும் என்னை அனுப்பலாமா என்று கூற வில்லை)

3) முறுமுறுப்பு அவனது வாழ்க்கையில் எங்கும் காணப்படவில்லை (சகோதரர்கள் அவனது சட்டைகளை கழற்றிய போதும், அவனை குழியில் இறக்கிய போதும் “உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்த எனக்கு ஏன் இப்படி செய்கிறிர்கள” என்று கூறவில்லை

4) கர்த்தர் அவனோடு இருந்தார் – 39:2

5) தேவ பயம் உள்ளவன் – 42:18

6) யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் போத்திபாரின் வீட்டை ஆசிர்வதித்தார் – 39:5 (உன் நிமித்தம் கர்த்தர் உன் வீட்டை ஆசிர்வதித்திருக்கிறாரா ?)

7) தாழ்மையுள்ளவன் (நான் அல்ல என்கிறான்) – ஆதி 41:16, 45:8

8) மற்றவர்களுக்கு உதவி செய்தான் (பார்வோனின் பிரதானிகளின் இருவருடைய சொப்பனத்திற்கு அர்த்தம் கூறினான்)

9) சகோதரர் மிது பாசம் உள்ளவன் (சகோதர்களை கண்ட போது 5 முறை அழுதான்) 42:24,:43:29,20, 45:1-3, 45:14, 45:15

10) பொற்றோர் மிதும் பாசம் உள்ளவன் (தன் தகப்பன் யாக்கோபை கண்ட போது அவன் கழுத்தை கட்டி கொண்டு வெகு நேரம் அழுதான் – 46:29

11) தீமைக்கு நன்மை செய்தான் – 50:18-21

12) சகோதர அன்புள்ளவன் – 42:24 43:30, 45:1,2

13) பாடுகளை பொறுமையாக சகித்தான் – 37:24

14) போத்திபார் மனைவி யோசேப்பின் மிது குற்றம் சாட்டிய போது அவன் வாய் திறக்கவில்லை – ஏசா 53:7

15) மற்றவர்களை குறை கூறவில்லை – (சிறையில் இருந்த போது போத்திபார் மனைவி தான் இதற்கு காரணம் அவளை குறை கூறவில்லை)

16) துன்பத்தில் இருந்தாலும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறினான் – 40:7

17) எல்லா இடத்திலும் தேவனை உயர்த்தினான் – 41:16

18) பரிசுத்தவானாக காணப்பட்டான் – 40:15

19) யோசேப்பு (எகிப்தின் அதிபதியாக இருக்கும் போது) தகப்பனை முதன் முதலாக பார்த்த போது அண்ணன்மார் செய்த செயலை தகப்பன் இடம் கூற வில்லை

20) மன்னிக்கிற சுபாவம் காணப்பட்டது (தன் சகோதர்களை மன்னித்தான்)

21) சகோதர்களை பழிவாங்க வில்லை (பழி வாங்க சகல அதிகாரம் இருந்து – எகிப்தின் அதிபதி)

22) பொறுமையுடன் காத்திருந்தான் (தான் கண்ட சொப்பனம் நிறைவேற 13 வருடம் காத்திருந்தான்)

23) சகோதரர்கள் செய்த தீங்கை மறந்தான்.

24) கனி தரும் திராட்சை செடி (கனி = நல்ல சுபாவங்கள்) – ஆதி 49:22-26

25) யோசேப்பு பாவத்துக்கு விலகி ஓடினான் – 39:7-13

👆👆மேற்கண்ட சுபாவங்கள் உங்களில் உண்டா ?


Share this page with friends