ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்

Share this page with friends

ஞாயிறு ஆராதனையின் ஆசீர்வாதத்திற்காக நடைமுறை ஆலோசனைகள்:

✅ஆராதனைக்கு தடை வராதபடிக்கு பார்த்துக்கொள்ளுங்கள்

✅ஒரு வேளை வெளியூருக்கு சென்றிருப்பீர்களானால் இன்று மாலையே வீடு திரும்பி விடுங்கள்

✅இரவு நேரத்தோடு ஜெபித்து விட்டு உறங்கச் செல்லுங்கள்

✅உடல்நலத்தை சீக்கிரத்தில் பாதிக்கக்கூடிய எந்த கடின ஆகாரத்தையும் புசிக்காதிருங்கள்

✅காலையில் எழுந்து ஜெபித்து நேரத்தோடு ஆயத்தமாகுங்கள்

✅வீட்டில் வீண் வார்த்தைகளுக்கு இடம் கொடாமல் பக்தியை காத்துக்கொள்ளுங்கள்

✅வீட்டுச் சண்டை ஊர்ச் சண்டை உலகத்துச் சண்டையின் மூலமாக பிசாசு உங்கள் ஆராதனையை தடைசெய்யப் பார்ப்பான் எனவே அவைகளை விட்டு விலகுங்கள்

✅ஆராதனைக்கு வரமுடியாதபடி வருகிற வேலைகள், முக்கிய அலுவல்கள் வெளியூர் பிரயாணங்களை நீங்களே திட்டமிட்டு தள்ளி வையுங்கள்

✅தேவனை விட எதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து விடாதீர்கள்

✅பிரயாணச் செலவுக்கும், கர்த்தரைக் கனப்படுத்தும் காணிக்கை, தசமபாகத்தை இன்றே ஆயத்தம் செய்து வைத்து விடுங்கள். கடைசி நேரப் பிரச்சனைக்கும் ஆலயத்தில் வந்த பின் பையைத் தேடுவதற்கும் இடங்கொடாதிருங்கள் (நாளை பணம் எடுக்கும் மிஷினில் பணம் இல்லாமல் போகலாம்)

✅ஆலயத்திற்கு வரும்போது ஒரு புதிய நபரை அழைத்துக்கொண்டு வாருங்கள்

✅ஆராதனைக்கு வரும் வழியில் யாரையும் சந்திக்க திட்டமிடாதிருங்கள் அப்படிச் செய்தால் சரியான நேரத்தில் ஆராதனைக்கு வரமுடியாத சூழ்நிலை உங்களுக்கு ஏற்படக்கூடும்

✅மதிய ஆகாரத்தைக் குறித்து கவலைப்பட்டு அதிலேயே மூழ்கிவிடாதிருங்கள்.

✅ஆலயத்தின் தூரம் அறிந்து முன் கூட்டியே வீட்டிலிருந்து புறப்படுங்கள். உங்கள் வண்டிக்கு எரிபொருளை இன்றைக்கே நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நாளை எரிபொருள் கிடைக்காமலோ அல்லது கூட்டம் அதிகமாகவோ இருக்கக் கூடும்.

✅கூடுமானவரை ஆரம்ப ஜெபத்திற்கே வந்து விடப் பிரயாசம் எடுங்கள் அது சபையோர் முன்பாக நமது மதிப்பைக் கூட்டும். தேவனையும் கனம்பண்ணுவதாக அமையும்.

✅ஆலயத்திற்கு வந்த பின் உங்கள் மொபைலை ஆப் செய்து விடுங்கள் தேவையற்ற அழைப்புகளுக்கு இடம் கொடாதிருங்கள்.

✅பாடல்களைக் கேட்டு வாய்விட்டு மனதார ஆராதியுங்கள். அமைதியாகவோ ஆராதிக்காமலோ இருந்து விடாதிருங்கள்

✅சாட்சி சொல்லவோ, ஜெபிக்கவோ வெட்கப்படாதிருங்கள் அவரை மகிமைப்படுத்துகிறவர்களை தேவனும் மகிமைப்படுத்துகிறார் என்பதை மறவாதிருங்கள்.

✅பிரசங்கத்தை குறிப்பெடுத்துப் பழகுங்கள் அது உங்களை ஆவிக்குரியவர்களாகவும் தேவனுக்குள் வளருகிறவர்களாகவும் மாற்றும்.

✅ஆராதனை முடிந்த உடன் ஓடி விடாதிருங்கள். சிலரோடு கைகொடுத்துப் பேசி மற்றவர்களை உற்சாகப்படுத்திப் பழகுங்கள்

✅தேவ செய்தியை வாழ்க்கையில் கைக்கொள்ள தீர்மானத்தோடு செல்லுங்கள். கர்த்தர் உங்களோடிருந்து உங்களை ஆசீர்வதிப்பார்.


Share this page with friends