மதுபான கடைகளினால் இவ்வளவு ஆபத்தா? உஷாருடன் ஜெபிக்க அறைகூவல்

Share this page with friends

மதுபான கடைகளினால் இவ்வளவு ஆபத்தா? உஷாருடன் ஜெபிக்க அறைகூவல்

புள்ளி விபரங்கள்:
# மது அருந்துபவர்கள்: 16 கோடி
# முரட்டு குடிகாரர்கள்: 2.08 கோடி
# பெண் குடிபோதையாளர்கள்: 9.4 லட்சம்

மதுபான அடிமைத்தனம் காரணமாக
* ஒரு நாளுக்கு 15 இறப்புகள் நிகழ்கிறது
* 1 லட்சம் சாலை விபத்துகள் நடக்கிறது
* 30,000 புற்று நோயாளிகளாகின்றனர்
* 80% பெண்கள் விதவைகளாகுகின்றனர்
* 40% கொலைகள் நடக்கிறது
* 60 வகையான நோய்கள் ஏற்படுகின்றன.

ஜெபக் குறிப்புகள்:
1) குடி பழக்கத்தி‌ற்கு அடிமையானவர்கள், அதில் இருந்து விடுதலை பெற; குடி வெறியின் ஆவி இயேசுவின் நாமத்தில் சுட்டெரிக்கப்பட ஜெபிப்போம்.

2) மது அருந்துதல் பல்வேறு உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை மக்கள் அறிய; அடிமையானவர்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் ஆலோசனை கொடுப்பதன் மூலம் மறுவாழ்வு பெற ஜெபிப்போம்.

3) மது பழக்கம் காரணமாக அதிகரித்து வரும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, விபத்துக்கள், விதவைகள் மற்றும் கொலைகள் முடிவுக்கு வர ஜெபிப்போம்.

4) மதுபான கடைகளை திறந்து வருவாய் ஈட்டும் நிலை மாறி முதலமைச்சர் தலைமையில் அரசு அதிகாரிகள் திட்டமிட்டு பூரண மதுவிலக்கை அறிவிக்க ஜெபிப்போம்.

நம் ஜெபங்களுக்கு தேவன் நிச்சயம் பதில் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும் இந்த பதிவினை பகிர்ந்து கொண்டு ஜெபிக்க கூறுங்கள். நன்றி


தொடர்புடைய பதிவுகள்

படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
வாக்களித்த எங்களுக்கு ஏமாற்றம் தந்து விடாதீர்கள் !

Share this page with friends