பிரசங்க குறிப்பு மாற்றுகிறவர்

அவைகளை ஒரு சால்வையைப் போல் மாற்றுவீர். அப்பொழுது மாறிப்போம். நீரோ மாறாதவராயிருக்கிறீர் சங் : 102 : 26 , 27
தேவனால் எதையும் மாற்றமுடியும். நான் கர்த்தர் , நான் மாறாதவர். தேவனால் கூடாதது எதுவுமில்லை. தேவன் நம் வாழ்வில் மாற்றும் காரியங்களைக் குறித்து சிந்திக்கலாம்.
- துக்கத்தை சந்தோஷமாக ” மாற்றுகிறவர் “
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள். உலகமோ சந்தோஷப்படும். நீங்கள் துக்கபடுவீர்கள். ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
யோவா : 16 : 20, 2 கொரி : 7 : 10
- வறண்ட நிலத்தை நீருற்றுகளாகவும் ” மாற்றுகிறவர் “
அவர் அவாந்திரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீருற்றுகளாகவும் மாற்றி , சங் : 107 : 35
- சாபத்தை ஆசீர்வாதாமாக ” மாற்றுகிறவர் “
உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்பு கூர்ந்தபடியினால் ,உன்சாபத்தை ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார். உபாக : 23 : 5 கலா : 3 : 13
- வியாதிப்படுக்கையை ” மாற்றுகிறவர் “
படுக்கையின் மேல் கிடக்கிற அவனை படுக்கை முழுவதையும் மாற்றிபோடுவீர். சங் : 41 : 3
- தீமையை நன்மையாக ” மாற்றுகிறவர் “
யோசேப்பு அவர்களைநோக்கி, நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்ததீர்கள். தேவனோ இப்பொழுது நடந்து வருகிறபடியே அதை நன்மையாக முடியப் பண்ணினார் ( மாற்றினார் ) ஆதி : 50 : 19 , 20. எஸ்தர் 9 : 1
- புலம்பலை ஆனந்தகளிப்பாக ” மாற்றுவார் “
என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாறப்பண்ணினார். சங் : 30 : 11 ஆதி : 26 : 12 — 30 ஈசாக்கு
- நமது அற்பமான சரீரத்தை மகிமையின் சரீரமாக ” மாற்றுவார் “
அவர் தம்முடைய வல்லமையான செயலின்படியே நம்முடை அற்பமான சரீரத்தை தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக
மறுரூபப்படுத்துவார். பிலி : 3 : 21 வெளி : 7 : 16 , 17
நம்முடைய தேவன் மாற்றுகிற தேவன். அனால் அவர் மாறாதவர். நம்முடைய எந்தெந்த காரியங்களை மாற்றுகிறார் என்பதை நாம் சிந்தித்தோம். தேவனால் சகலத்தையும் மாற்றமுடியும். கர்த்தர் மாற்றுகிறவர் என்பதை இப்பொழுது அறிந்துக்கொள்ளுங்கள்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur