பிரசங்க குறிப்புகள்: வெறுத்துவிடுங்கள்

Share this page with friends

மத்தேயு 16:24
இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

1.தீமையை வெறுத்துவிடுங்கள்

சங்கீதம் 97:10
[10]கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
ரோமர் 12:9; ஆமோஸ் 5:15

2.வீண் சிந்தனைகளை வெறுத்துவிடுங்கள்

சங்கீதம் 119:113
வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.

3.வீண் மாயைகளை வெறுத்துவிடுங்கள்

சங்கீதம் 31:6
வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.

4.தீயோரின் வழிகளை வெறுத்துவிடுங்கள்

நீதிமொழிகள் 4:14-15
[14]துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
[15]அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

5.அந்தரங்க காரியங்களை வெறுத்துவிடுங்கள்

2 கொரிந்தியர் 4:2
[2]வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.

6.லெளகிக இச்சைகளை வெறுத்துவிடுங்கள்

தீத்து 2:12
[12]நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,

7.கறைப்பட்ட வஸ்திரங்களை வெறுத்துவிடுங்கள்

யூதா 1:23(20-25) [23]மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.

தியானத்துடன்
Pr.Chandra sekar.


Share this page with friends