ஸ்டான் பாதிரியார் கைது: கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு.

Share this page with friends

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஸ்டான் சுவாமி கைதுக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன குரல் எழுப்பினர்.

தமிழ்நாட்டிலிருந்து  ஆதிவாசி மக்களுக்குப் பணி செய்ய ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்று அவர்களின்  உரிமைகளுக்காக 40 ஆண்டுகளாகப் போராடி வருகிற மனித உரிமைக் காப்பாளர் ஸ்டான் சுவாமி.  

ஆதிவாசிகளின் நிலங்களைத்  திருடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போராடியவர்.

இவர்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை நீக்கி. இவரையும் இவரைப்போல் சிறையிலுள்ள 15 மனித உரிமைக் காப்பாளர்களையும் விடுதலை செய்யவும் அவர்களுக்கு நீதி கிடைக்கக் கோரி கொடைக்கானல் உகார்த்தே நகர் அற்புத குழந்தை யேசு தேவாலயத்தில் கண்டன எதிர்ப்பு குரல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் செண்பகனுர் திருஇருதய கல்லூரியைச் சேர்ந்த அருட்தந்தையர்கள் அமல்ராஜ், ஜெரி, சுவாமி, பங்குத்  தந்தை பீட்டர், அருட்சகோதரிகள் மற்றும் 50−க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் ஆகியோர் மெழுகுதிரி ஏந்தி கண்டன குரல் எழுப்பினர்.

மேலும் கரம் இணைவோம், நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் என கண்டன குரல் எழுப்பினர்.

(18th Oct 2020) நன்றி: தினமணி


Share this page with friends