பத்திரிக்கைச் செய்திகள் எழுந்துள்ள சில சந்தேகங்களை களைதல் சார்பு

Share this page with friends

பத்திரிக்கைச் செய்திகள் எழுந்துள்ள சில சந்தேகங்களை களைதல் சார்பு

  1. தமிழக முதல்வர் தனது (31.10.2020 நாளிட்ட செ.கு எண்:236 கொண்ட) செய்தி அறிக்கையின் குறிப்பெண் 7ன்படி “மதம் சார்ந்த விழாக்கள்/பொதுக்கூட்டங்கள் 100 நபர்களை வைத்து நடத்தலாம்” என்ற வகையில் அனுமதி அளித்திருந்தார்.

அதைத் தற்போது தனது (12.11.2020 தேதியிட்ட செ.கு. எண்:857 கொண்ட) செய்தி அறிக்கை மூலம் ரத்துச் செய்துள்ளார்.

  1. மற்றப்படி, சபையில் ஆராதனைகள் நடத்தும் அனுமதியை தனது (30.08.2020 தேதியிட்ட செ.கு எண்:182 கொண்ட) செய்தி அறிக்கை மூலம் ஏற்கெனவே வழங்கியிருந்தார். அதை அவர் ரத்து செய்யவில்லை.

எனவே, சபை ஆராதனைகளை 2020 செப்டம்பர் மாதமுதல் நாம் நடத்தி வருகிறபடியே (தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வழங்கின அரசாணை G.O.(Ms) No. 451 dated 31.08.2020ன் குறிப்பெண்கள் 1 மற்றும் 2c ஆகியவற்றில் காணும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி) தொடர்ந்து நடத்தலாம் என்பதாகும்.

திருவிழாக்கள், கன்வென்ஷன் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்பதாகும். நன்றி.

இவண்,
FGPC தேசிய தலைவர்.


குறிப்பு: கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்புகளை www.tn.gov.in>pressrelease என்ற இணைய முகவரியில் தேடி வாசித்தறியலாம்.Share this page with friends