corona awareness images

கொரானா வியாதி பற்றி 12 ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கதரிசனம்

Share this page with friends

corona awareness images

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வியாதி பற்றி 12 ஆண்டுகளுக்கு முன்னரே நூல் ஒன்றில் தீர்க்கதரிசனமாக எழுதி நம்மை வியப்பின் எல்லைக்கு கொண்டு சென்றுள்ளார் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர்.

குருவி இருக்க பனம்பழம் விழுந்தது என்பது போல இது எதேச்சையான ஒன்று என இதை கூற முடியாது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்..

2020 ல் கொரானா வெடிக்கும் எனவும் அதன் கோர கரங்கள் உலகத்தையே சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை மரணத்திற்கு நேராய் அனுப்பும் எனவும் 12 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு எழுத்தாளர் தீர்க்கதரிசனமாக கூறி இருக்கிறார் என்றால் அதை நம்ப முடிகிறதா…

ஆனால் அதை நம்பும் கட்டாயத்திற்கு நம்மை தள்ளி விடுகிறார் 2013 ல் மறைந்த பிரபல அமெரிக்க எழுத்தாளர் சில்வியா பிரவுன். 2008 ல் இவர் எழுதிய End of Days: Predictions and Prophecies about the End of the World என்ற நூலின் 312 ஆவது பக்கம் இன்று திகிலாய் எழும்பியுள்ள கொரானாவை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது.

இதன் தமிழாக்கம் இது தான்… 2020 வாக்கில் நிமோனியா போன்ற ஒரு நோய் உலகம் முழுதும் பரவும்…நுரையீரல்களையும் சுவாச குழாய்களையும் பாதித்து அது பலருக்கு எமனாக முடியும். எந்த மருந்தாலும் அதை கட்டுப்படுத்தவோ, ஒழிக்கவோ முடியாது..

அதே சமயம் அதில் ஆறுதல் தரக்கூடிய ஒரு விஷயமும் இருக்கிறது. அதாவது எந்த வேகத்தில் இந்த நோய் பரவுமோ, அதே வேகத்தில் அது மறைந்து விடும் என்பது தான் அது.

இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரலாய் கொடி கட்டிப் பறக்கிறது. இதைப் படிப்பவர்கள். கேட்பவர்கள் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் மூழ்கி உள்ளனர். ஆம் தீர்க்கதரிசனம் உரைத்தவர் மறைந்து போனாலும் தீர்க்கதரிசனம் கொடுத்தவர் நம் தேவனல்லவா? கடைசி கால அடையாளங்களை தேவன் தம்முடைய ஊழியர்களுக்கு வெளிப்படுத்தி கண்முன்னே நிறைவேற்றி வருகிறார்.


Share this page with friends