தீர்க்கதரிசனம் இனி வரும் நாட்களில்

Share this page with friends

சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போக காரணம் சுயம் மற்றும் தேவையற்ற இடங்களில் தலை இடுவது தான்.. எனவே இனி வரும் நாட்களில்

  1. தீர்க்கதரிசனம் நிச்சயம் நிதானிக்க படவேண்டும் ஏனெனில் ஆவிக்குறியவன் சகலத்தையும் நிதானிப்பான். உணர்ச்சி மற்றும் ஆச்சரியமூட்டும் ஊழியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். கர்த்தரின் ஊழியம் நிச்சயம் நம்மை விசுவாசம் , நம்பிக்கை மற்றும் அன்பில் நடத்தும்.
  2. தீர்க்கதரிசனங்கள் நிச்சயம் வேத வசனத்தின் அடிப்படையில் சோதித்து அறியப்பட வேண்டும். இவிதமான தீர்க்கதரிசனங்கள் வேதத்திற்கு முரன்பாடாக இருந்தால் அவைகள் வஞ்சனையின் அடையாளம். NT இல் அரசியல் தீர்க்கதரிசனம் பார்ப்பது அரிது ஆனால் பொதுவான பஞ்சம் குறித்து அகபு சொல்லி இருக்கிறார்.
  3. தெய்வீக சுபாவத்தை கொண்டு ஆவியை பகுத்து அறியும் அறிவை உணர்த்தும் வரம் மற்றும் ஞானத்தை போதிக்கும் வரம் கொண்டும் பகுத்து அறிய வேண்டும். உதாரணமாக ஒருவன் இயேசு என்று சொன்ன உடன் அவன் ஆவிகுறியவன் தேவ பிள்ளை என்று ஒரு தீர்மானத்திற்கு வருவது எத்தனை முட்டாள்தனம். டிரம்ப் அப்படி இயேசு என்று சொல்லி விட்டு இங்கு வந்து மோடியுடன் யாகம் மற்றும் பூஜை செய்து அரசியல் செய்தது தவறு என்று தீர்க்கதரிசனம் சொன்ன ஒருவர் கூட உணர முடியவில்லை என்பது தான் வருத்தமான விஸ்யம். இந்தியாவில் கூட பர்திய Jesus party என்று தான் கிறிஸ்தவ மாநிலங்களில் ஒட்டு வாங்கினார்கள். கர்த்தருடைய நாமத்தை வீணில் பயன்படுத்தும் ஒருவருக்கு கர்த்தரின் சுபாவத்தை மீறி அவருக்கு ஆதரவாக தீர்க்கதரிசனம் சொன்னது எப்படி?
  4. சுவிசே ஊழியம் மற்றும் பக்தி விருத்தி ஊழியம் செய்வதற்கு தான் கர்த்தர் இந்த வரத்தை கொடுத்தாரே அன்றி தன்னிடம் பிறர் குறி கேட்பார்கள், தனது trp யை ஊழியத்தில் உயர்த்த சொல்லப்படும் இப்படிபட்ட தீர்க்கதரிசனங்கள் அப்படியே நடந்தாலும் அவைவகள் நிராகரிக்க பட வேண்டும். கர்த்தரின் இருதய விருப்பம் மற்றும் அவரது நோக்கத்திற்கு அப்பாற்பட்டு சொல்லப்படும் எந்த தீர்க்கதரிசனம் யார் சொன்னாலும் அவைகள் இப்படி கேலிகுள்ளாகும் என்று இனியாவது உணர வேண்டும். எனவே தீர்க்கதரிசிகள் இனியாவது தீர்க்கதரிசனம் உரைக்கும் போது அவைகளினால் சுவிசேஷ ஊழியத்திற்கு இந்த தீர்க்கதரிசனம் பயன் பெறுமா என்றும், அதினால் சபை பக்திவிருத்தி அடையுமா என்றும், ஆறுதல், அறிவு மற்றும் புத்தி உண்டாகுமா என்று அறிந்து தீர்க்கதரிசனம் சொன்னால் அதுவே அந்த ஊழியதிற்கும் கர்த்தருடைய நாமத்திர்க்கும் கணம் மகிமை கொண்டு வரும் என்று அறிந்து செயல்பட்டால் நல்லது.

செலின்


Share this page with friends