செழிப்பான வாழ்க்கை

Share this page with friends

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங் களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார். நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும் வற்றாத நீருற்றைப் போலவும் இருப்பாய். (ஏசாயா 58 : 11) (சங் 66 : 12 , 65 , 9) (1 நாளாக 4 : 40)

மேல் சொல்லப்பட்ட வாக்குத்தத்தம் செழிப்பான வாழ்க்கைக்கு அடையாளமாய் சொல்லப்பட்டிருக்கிறிது. நீ நீர்பாய்சாசலான தோட்டத்தைப் போல இருப்பாய் என்பது செழிப்பான வாழ்க்கை என்பது அடையாளம். ஒரு தோட்டத்தில் நீர்பாய்ச்சல் அதிகமாக இருக்கும்போது அங்கே செழிப்பு அதிகமாயிருக்கும். நீர்பாய்ச்சலான தோட்டத்தைப்போல செழிப்பாக இருக்க வேண்டுமானால் நாம்
என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் கவனிக்கலாம்.

  1. நீர்பாய்ச்சலான தோட்டத்தின் செழிப்பான வாழ்க்கைக்கு கர்த்தர் மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் (நீதி 28 : 25) (எரே 17 : 7) (2 இராஜா 18 : 5) எசேக்கியாவின் வாழ்க்கை செழிப்பாக இருந்தது அவன் கர்த்தரையே அதிகமாக நம்பினான் (2 நாளா 32 : 27, 28,29)
  2. நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தின் செழிப்பான வாழ்க்கைக்கு கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்படவேண்டும். (சங் 92 : 13)
    (சங் 122 : 1 , 84 : 10) தேவாலயத்தை வாஞ்சித்து அதில் நிலைத்திருக்க வேண்டும்.
  3. நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தின் செழிப்பான வாழ்க்கைக்கு கர்த்தருடைய வேதத்தில் பிரியமாக இருக்கவேண்டும். (சங் 1 : 3) (சங் 119 : 97) செழிப்பான நீர்ப்பாய்ச்சலான தோட்டமாய் மாற வேதத்தில் பிரியமாக இருங்கள்.

உங்களுக்கு செழிப்பான நீர்பாய்ச்சலான தோட்டத்தைப் போல இருக்க முதலாவலது கர்த்தரை நம்புங்கள். இரண்டாவது கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்படுங்கள். மூன்றாவது கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருங்கள். இப்படி செய்தால் உங்கள் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.

அமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends