விற்பனைக்கு வந்த நிஜ கிறிஸ்துமஸ் மரம்..!
கிறிஸ்துமஸ் என்றாலே தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்து அதில் வண்ண வண்ண விளக்குகள் எறிய விடப்பட்டுவது வழக்கம் செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களை வாங்கி தேவாலயங்கள் மற்றும் இல்லங்களில் வைக்கிறார்கள் . இதனை கருத்தில் கொண்டும் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலும் தோட்டக்கலைத்துறை சார்பில் சேப்பாக்கம் தோட்டக்கலைத் துறை இயக்குனர் அலுவலகம், தேனாம்பேட்டை செம்மொழிப் பூங்கா, மாதவரம் தோட்டக்கலை செயல் விளக்க பூங்கா, ஆகிய இடங்களில் நிஜ கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
3 அடி மற்றும் 2 அடி உயரத்தில் கிடைக்ககூடிய இந்த நிஜ கிறிஸ்துமஸ் மரங்களில் வண்ண விளக்குகளை பொருத்தி அழகுக்காக வைக்கலாம். இந்த மரத்தை வாங்கினால் மூன்று ஆண்டுகளுக்கு வீட்டின் உள்ளேயே தொட்டியில் வைத்து அழகு பொருளாக பயன்படுத்தலாம், பின்னர் வீட்டில் காலி இடங்களில் நட்டு வைத்தால் சிறிய அளவிலான கிறிஸ்துமஸ் மரம் நாளடைவில் பெரிய மரமாக வளரும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையிலும் தோட்டக்கலைத்துறை எடுத்துள்ள முயற்சி பாராட்டுக் குறியது.
பதிவு: டிசம்பர் 19, 2019
நன்றி: தந்தி டிவி