ஆமானின் வீழ்ச்சிக்கு காரணங்கள் (அல்லது) ஆமானிடம் காணப்பட்ட கெட்ட / தீய சுபாவங்கள்

Share this page with friends

1) மற்றவர்கள் தன்னை கனம் பண்ண வேண்டும் என்று எதிர்பார்த்தான் →(எஸ்தர் 3:5) அநேக தேவபிள்ளைகளிடம் இன்றைய நாட்களில் இந்த காரியம் காணப்படுவதை காணலாம். கனம் பண்ணுவதில் ஒருவருக்கொருவர் முந்தி கொள்ளுங்கள் (ரோ 12:10). இதை ஒரு பெரிய பிரச்சனையாக ஆமான் எடுத்து இருக்க கூடாது. ஆமானின் அழிவுக்கு இந்த காரியம் அஸ்திவாரமாக (foundation) அமைந்தது. கடைசி நாட்களில் மனுஷர் தற்பிரியராக (தன்னை பிரியப்படுத்துகிறவர்களாக) இருப்பார்கள் (2 தீமோ 3:2). வெளி 13:15 ல் மிருகத்தின் ஆவி தன்னை வணங்க எதிர்பார்க்கும்.

2) மூர்க்கம் நிறைந்ததவனாக காணப்பட்டான்→(எஸ்தர் 3:5) நாம் அன்பு நிறைந்தவர்களாக மாற வேண்டும். மூர்க்கம் நிறைந்தவர்களாக மாறக் கூடாது. சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும் … உங்களை வீட்டு நீங்கக்கடவது (எபேசு 4:31)

3) மற்றவர்கள் பேச்சை கேட்டான் (எஸ்தர் 3:4) அதனால்தான் பிரசங்கி 7:21 “சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனிக்காதே” என்று கூறுகிறது.

4) மற்றவர்களை அழிக்க நினைத்தான் (எஸ்தர் 3:6) அழிப்பது பிசாசின் வேலை (யோ 10:10)

5) மற்றவர்களை பற்றி ராஜாவிடம் குறை சொன்னான் (எஸ்தர் 3:8) ஒருவரை பற்றி மற்றவர்களிடம் குறை சொல்லக் கூடாது. “ஒருவருக்கொருவர் விரோதமாக முறையிடாதீர்கள்” (யாக் 5:9). “நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து பட்சித்திர்களானால் அழிவிர்கள்” (கலா 5:15). “கர்த்தாவே யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான் … தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறவனே” (சங் 15:1-3)

6) குடிக்கும் பழக்கம் இருந்தது (எஸ்தர் 3:15) “யாருக்கு வேதனை, சண்டைகள். மதுபானம் இருக்கும் இடத்தில் தங்கித் தரிப்பவர்களுக்கும் தானே” (நீதி 23:29,30)

7) விருந்துக்கு போனான் (எஸ் 5:8,9) தேவ பிள்ளைகளுக்கு treat, get-together கூடாது. “ஒரு நாள் வாழ்வை இன்பமாக எண்ணக் கூடாது 2 பேது 2:13”. “அநித்தியமான பாவ சந்தோஷங்கள் தேவ பிள்ளைகளுக்கு கூடாது – (எபி 11:25)

8) உக்கிரம் நிறைந்தவனாக மாறினான் (எஸ்தர் 5:9) உக்கிரகம் = கோபத்தின் உச்சக்கட்டம். உடைத்தல், அழிப்பது இதன் விளைவு. “நீங்கள் கோபம் கொண்டாலும் பாவம் செய்யாமலிருங்கள் – சங் 4:4”

9) தன் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசினான் (எஸ்தர் 5:11) “மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரை குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். (2 கொரி 10:17) மற்றவர்கள் இடம் பேசும் போது, சபையில் சாட்சி சொல்லும் போது குடும்பத்தை குறித்து பெருமையாக பேசக்கூடாது. “பெருமை பேசும் நாவை கர்த்தர் அறுத்துப் போடுவார்” (சங் 12:3). பெருமை பிசாசின் சரக்கு.

10) மனைவி பேச்சை கேட்டான் (எஸ்தர் 5:14) மனைவி பேச்சை கேட்பது தவறு என்று கூறவில்லை. மனைவி சொல்வது வேதவசனத்தின்படி சரியா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆமானின் மனைவி சிரேஷ் அவனுக்கு தீய ஆலோசனை கொடுத்தாள் (தூக்கு மரம் செய்ய சொன்னாள்). ஆகாப் தன் மனைவி யேசபேல் பேச்சை கேட்டு பொல்லாப்பானதை செய்ததாக 1 இராஜ 21:25 ல் வாசிக்கிறோம்.

11) தனக்கு நேரிட்டதை மனைவியிடம் கூறினான் (எஸ்தர் 6:13) எல்லாவற்றையும் மனைவியிடம் கூற கூடாது. குடும்பத்திலும் கூற கூடாது. ஆபிரகாம் தேவன் ஈசாக்கை பலியிட சொன்னதை மனைவியிடம், ஈசாக்கிடம் சொல்லவில்லை. சொல்ல வேண்டியதை மட்டும் குடும்பத்தில் சொல்ல வேண்டும். ஆமானின் மனைவி இவன் கோபத்தை அடக்கி இருக்கலாம். திருத்தி இருக்கலாம். எஸ்தர் 5:14 ல் தூக்கு மேடை செய்ய சொல்லுகிறாள்.

12) பெருமை காணப்பட்டது (எஸ்தர் 6:6) ராஜா தன்னைத்தான் கனம் பண்ணுவார் என்ற பெருமை அவனிடம் காணப்பட்டது.

13) தவறுதலாக யூகிக்கும் பழக்கம் (கற்பனை செய்தல்) இருந்தது (எஸ்தர் 6:6) இராஜா தன்னை கனப்படுத்துவார் என்று நினைத்தான். சிம்சோனும் கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியாமல் கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்று நினைத்து தன் கண்களை இழந்தான்.

14) விதைத்தை அறுத்தான் (யோபு 4:8) மற்றவர்களுக்கு உண்டு பண்ணின தூக்கு மரத்தில் தானே தூக்கிலிடப்பட்டான். “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” – கலா 6:7


Share this page with friends