கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையில் பெலப்படுங்கள்

Share this page with friends

இன்றைக்கு அதிகமாக பேசப்படும் ஒரு வார்த்தை இந்த கிருபை. ஏனெனில் கர்த்தர் கிருபை உள்ளவர் என்றும், அவர் கிருபை என்றும் உள்ளது மற்றும் மாறாதது என்றும், கர்த்தரின் மாறாத சுபாவம் தான் கிருபை என்றும் வசனத்தின் அடிப்படையில் பார்க்கிறோம். ஏற்கனவே இந்த கிருபையை குறித்து ஒரு பதிவில் அவற்றை விளக்கி உள்ளேன்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த கிருபையை குறைவாக மதிப்பிட்டு, எளிதாக எடுத்து, அலட்சிய போக்குடன் செயல் பட்டு, எல்லாம் பார்த்து கொள்ளலாம் என்று கன்சாடையாக கொண்டு அற்பமாக எண்ணும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

கர்த்தர் ஆயிரம் தலைமுறை கிருபையை காக்கும் பயங்கரமான தேவன் என்று பார்க்கிறோம். அப்படியென்றால் இந்த கிருபையை சாதரணமாக எடுத்து கொள்ள முடியாது. வேதத்தில் எங்கு எல்லாம் இந்த கிருபையை பார்க்கிறோமோ அங்கு எல்லாம் கர்த்தருடைய பயங்கரமான சுபாவமும் வெளிப்பட்டு இருக்கிறது. உதாரணமாக நோவா கர்த்தருடைய கண்களில் தயவையும் கிருபையும் பெற்றார். அந்த கிருபையை பெற அவர் நீதிமான், தேவனுக்கு படப்படுகிற, மற்றும் கீழ்படிதல் போன்ற மற்ற குணநலன்கள் இருந்ததால் தான் அவர் அந்த கிருபைபையை பெற்றார். கிருபை பெறாத மற்ற மக்கள் வெள்ள பெருக்கு என்ற பயங்கரத்தால் அழிந்து போனார்கள். மோசேக்கு அந்த கிருபையை கொடுத்தார். காரணம் தேவனுடைய பார்வையில் அவர் சாந்த குணம் மற்றும் தேவனுடைய வீட்டில் உண்மை உள்ளவராக இருந்தார். யோசேப்பு அந்த கிருபையை பெற்றார் காரணம் பாவத்திற்கு விலகி ஓடி தன்னை காத்து கொண்டார். ஆபிரகாம் அந்த கிருபையை பெற்றார் காரணம் அவரது விசுவாசம் மற்றும் தேவனுடைய நண்பர் என்கிற அந்தஸ்தை பெற்றார்.

தாவீது அதிகமான கிருபைகளை பெற்றார். காரணம் துதிக்கிறவர், அபிசேகம் பண்ணப்பட்டவர் மேல் கையை போடாமல் இருந்தவர், தேவ சித்தம் செய்து தேவனுடைய இருதயதற்கு ஏற்றவர், பாவம் செய்த பிற்பாடு உள்ளம் உடைந்து, தன்னை தாழ்த்தி, கர்த்தருக்கு பயந்தவர். கிருபையினால் தேவ இரக்கம் பெற்றவர் என்று அடுக்கி கொண்டே போகலாம். மொத்தத்தில் இந்த கர்த்தரின் கிருபை தான் ஒவ்வொருவரையும் தெய்வீக சுபாவத்தில் நடத்தி அவர்களை அந்த அந்த காலகட்டத்தில் பாதுகாத்து வந்து இருக்கிறது. ஆனால் இந்த கிருபையை பெற்ற பின்னர் அந்த கிருபைக்கு ஏற்ற பரிசுத்தம் இல்லாததுதினால் லோத்து, சவுல் மற்றும் யூதாஸ் போன்றவர்கள் பெற்ற கிருபையை இழந்து தங்களை கெடுத்து கொண்டனர் என்றும் வேதத்தில் பார்க்க முடியும். எனவே பாவத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்தவர்கள் இந்த கிருபையினால் ஒரு நன்மையும் பெற முடியாது என்று சத்தியம் நமக்கு போதிக்கிறது. ஆனால் பாவம் செய்த தாவீது மனம் திரும்பி, அழுது புலம்பி அதின் விளைவுகளை சந்தித்து, கிருபையினால் இரக்கம் பெற்றார். மாறாத கிருபையும் பெற்றார். ஆனால் அவன் சந்ததி பாவம் செய்தால், பிரமாணத்தை மீறினால் அந்த கிருபைக்குள் மிலாரு என்கிற ஒரு தண்டனையை உறுதி படுத்தி கிருபையை வாக்கு பண்ணினார். எனவே இந்த கிருபையை குறித்த தவறான எண்ணத்தை கர்த்தர் மாற்றி அதின் சத்தியத்தை புரிய கர்த்தர் உதவி செய்வாராக.

அப்படி என்றால் கிறிஸ்துவின் கிருபையின் மகத்துவம் என்ன?

கிறிஸ்து தேவனுடைய ரூபமாக இருந்தும், தன்னை தாழ்த்தி, வெறுமையாக்கி, கீழ்படிந்து, பயபக்திக்கு உரியவராக வெளிப்பட்டார். அவர் கிருபையினால் நமக்காக பிதாவின் சித்தத்திற்கு கீழ்படிந்து நற்கிரியை செய்தார். அப்படி என்றால் அவரது கிருபையில் பரிசுத்த கிரியை இருக்கிறது. அப்படி என்றால் அவரது கிருபை பெற்ற நாமும் அவரது பரிசுத்த கிரியையில் பெருகுவோம். கிரியை இல்லாத விசுவாசம் செத்தது போல பரிசுத்தம் மற்றும் தெய்வீக பரிசுத்த சுபாவம் இல்லாத கிருபை விருதாவானது. ஏனெனில் அவரது கிருபையில்:

A. மகிமை, சத்தியம், பரிசுத்தம் மற்றும் நீதி நிறைந்து இருக்கிறது.

B. ஐசுவரியம் மற்றும் உன்னத வரங்களாகிய, கனிகளாகிய சமாதானம் என்னும்ஆசீர்வாதம் இருக்கிறது.

C. அவரது கிருபையில் இரட்ச்சிப்பு மற்றும் மீட்பு அதற்கு ஏற்ற இரக்கம் தயவு இருக்கிறது.

D. அவரது கிருபையில் கிறிஸ்துவின் ஞானம், அறிவு மற்றும் கிறிஸ்துவை பற்றும் அறிவு இருக்கிறது.

எனவே!

  1. இந்த கிருபையை மாயம், கசப்பு, வீணான தேவபக்தி கொண்டு போக்கடிக்க கூடாது.
  2. இந்த கிருபையை விருதாவாக அசதியாக எண்ண கூடாது. அற்பமான நிலையில் விளையாட்டாக எண்ணுதல் கூடாது. இதற்கு கிறிஸ்து இரத்தம் என்கிற பிராயச்சித்தம் செய்து நமக்கு இந்த பெரிதான கிருபையை தந்தார். இது எளிதில் கிடைப்பது அல்ல.
  3. பெற்ற கிருபையை இழந்து போக கூடாது. இதை யாருக்கும் விட்டு கொடுத்து இழந்தும் போக கூடாது.
  4. இந்த கிருபையில் அசுத்த பாவ இச்சைகளை கலக்க கூடாது. இந்த கிருபையை அசுத்த படுத்தி தீட்டு படுத்த கூடாது.

இந்த கிறிஸ்துவின் கிருபையை பெற என்ன செய்ய வேண்டும்?

A. இந்த கிருபைக்காக எப்போதும் விண்ணப்பம் பண்ணி காத்து இருந்து அந்த கிருபையை பெற வேண்டும். ஏனெனில் கர்த்தரின் சமூகத்தில், அவருக்கு பயந்து அவரது வசனத்திற்கு நடுங்கி கிருபாசனதண்டையில் தைரியமாக வர வேண்டும் ஏனெனில் அவரிடம் தான் நித்திய அதிகமான கிருபைகள் இருக்கிறது.

B. இந்த கிருபையை நம்ப வேண்டும். அதை விசுவாசித்து கிரியை செய்ய வேண்டும். ஏனெனில் பவுல் சொல்கிறார் அவருக்குள் இருந்த கிருபையை தான் அவரை பிரயாசப்பட வைக்கிறது என்றும். அவர் இருப்பதே அந்த கிருபையால் தான் என்று சொல்கிறார். எனவே நம்மை அந்த செயல்பட வைக்கும், தேவ சித்தம் செய்ய வைக்கும் அந்த கிருபையை நம்பி விசுவாசித்து செயல்பட வேண்டும். கிரியை இல்லாத கிருபை ஒன்றுக்கும் உதவாது. இந்த கிருபை நம்மை வீனரும் கனியற்றவர்களுமாக இருக்க விடாது.

C. அதிகமாக ஸ்தோத்திரம் செய்து தேவனை மகிமை படித்த வேண்டும். சங்கீதம் மற்றும் துதிகளினால் நிறைந்து இருக்க வேண்டும். இவைகள் பெருகினால் கிருபைகள் பெருகும்.

D. இந்த கிறிஸ்துவின் கிருபைகளை பெற கிறிஸ்துவின் சிந்தை அவசியமாகிறது. கிருபையின் சிந்தனை நமக்கு அதிக கிருபைகளை பெற்று தரும். கிறிஸ்து எப்படி கிருபையினால் நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்று சிந்தித்தால் நாம் அவரது கிருபையால் பெலப்படுவோம்.

கர்த்தர் அதிகமான கிருபைகளை தந்து நம்மை கனி கொடுக்க வைப்பாராக! அந்த கிருபையில் வளர்ந்து, அதற்கு ஒப்புக்கொடுத்து, அதில் பெருகுவோமாக!

செலின்.


Share this page with friends