சேலத்தில் மதத்தின் பெயரால் அராஜகம் – தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

Share this page with friends

சேலம் மாவத்தில் ஊழியம் செய்து வரும் போதகர் ஒருவரை சுவிசேஷ எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சிலர் அத்துமீறி பேசியதோடு நிர்வாணப்படுத்தியும் அவரது மனைவி நிறை மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அடித்து மிரட்டியுள்ள சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், 15 ஜூன் 2021

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ஒமேகா திருச்சபையின் போதகர் ஐீவானந்தன். இவரது மனைவி ஜெனிபர். இவர் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார். பிரசவத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் இவர்கள் இருந்த இடத்திற்கு சிலர் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர்.

கனத்திற்குரிய போதகரை அடித்து நிர்வாணப்படுத்தியதோடு. அவரது நிறை மாத கற்பிணி பெண் ஜெனிபரை ஆயுதங்கள் காட்டி மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பம் காவல் துறையின் உதவியை நாடியியுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண் ஜெனிபர் பேசி வெளியிட்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிகழ்விற்கு சிறுபான்மை மக்கள் நல கட்சியின் நிறுவன தலைவர் முனைவர். சாம் ஏசுதாஸ் உட்பட, பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரியப்படுத்தி வருகிறது. மேலும் இந்த நிகழ்விற்கு காரணமானவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்த செய்தியை வீடியோவாக காண..


Share this page with friends