ARMY

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்

Share this page with friends

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

திருச்சி; ஜன 16, 2021

இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) சேர்க்கையின்படி, இளநிலை அலுவலர் தகுதியில் மதபோதகர் பணியில் இளைஞர்களை சேர்க்கவும் பணி இடங்களை நிரப்புவதற்கான சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பண்டிட் (171), கிரந்தி, மவுலவி. பத்ரே ஆகிய பதவிகளுக்கு 194 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு படித்திருப்பதுடன் சம்பந்தப்பட்ட மதம் தொடர்பான மொழி படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். 25 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை, உடல் தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-2-2021. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு

http://www.joinindianarmy.nic.in/default.aspx என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

நன்றி: வேலைவாய்ப்பு செய்திகள்


Share this page with friends