மறுமணம்_பாவமல்ல

Share this page with friends

மறுமணம் என்பது மாபெரும் தவறல்ல
மாற்றான் கை பட்டதால் பெண் ஒன்றும் இழிவல்ல …

காமத்தில் மட்டும் தான் ஆண்களின் ..பங்கு..
நாங்கள் காலமும் செய்ய
இங்கு ஆயிரம் உண்டு

பெண்மை என்ற சொல் உடல் சார்ந்த ஒன்றுமில்லை
உள்ளன்பு உயர் தியாகம்
இவை இன்றி வேறில்லை

மகர் கொடுத்து பெண்ணெடுத்து மாடு போல நடத்துபவனை நெஞ்சை ஏறி மிதித்து
மீண்டு வந்தால் பாவமில்லை

நாங்கள்

கட்டிலினை அலங்கரிக்கும்
பொருளுமில்லை ..
நீங்கள் காமத்தில் விளையாடும் பொம்மை இல்லை

சமுதாயம் தூற்றும் என அஞ்சிக் கொண்டு சாகும் வரை
உரிமை இழக்க நாங்கள் ஒன்றும்
அடிமை இல்லை

உள்ளத்தின் உணர்ச்சிகளை
புரியாமல் வெறும் உடல்
தின்னும் மிருகத்தை கட்டிக் கொண்டு

பண்பாடு கலாச்சாரம் என்று
சொல்லிக்கொண்டு நாங்கள் ..படும் பாடை
சரி செய்யா சமுதாயமே….!

வந்து விட்டு உண்டு விட்டு
சென்று விடுவீர்.
எங்கள் வாழ்க்கை வீணாய் போய் விட்டால் நீயா தருவீர்?

காமத்தில் மட்டும் தான்
ஆண்களின் பங்கு.
நாங்கள் காலமும் செய்ய இங்கு ஆயிரம் உண்டு.

மெட்டி போட்டு
மேளம் தட்டி
மேடை மீது தாலி கட்டி
கையைப் பிடித்தவன் கயவன் என்றால்
நானா பொறுப்பு???

முதல் வாழ்க்கை முறிதல்
பாவமுமில்லை ….
அந்த பாவி தொட்ட உடல் என்பதால் கேவலமுமில்லை

மனம் பார்த்து மணம்
கொள்ளவன் ஆண்களின் கூட்டம். மறுமணம் ஆயினும் கை பிடிப்பவன் ஆண்டவன் தோற்றம்.

திருமணம் தோற்பதால் வாழ்க்கை ஒன்றும் இருளல்ல
மறுமணத்தை தேடும் பெண் மட்டமான பொருளல்ல

நாங்கள் வாழ்வில்
தடுக்கித் தான் போனோம்
தவறி ஒன்றும் போகவில்லை

தேற்றாவிடியிலும் பரவாயில்லை
தூற்றாமல் கடந்து செல்லுங்களேன்.


Share this page with friends