ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக – யாத் 20-8

Share this page with friends

கோவையில் ஒரு பெரிய கிறிஸ்தவ மளிகை கடை உண்டு. அதற்கு அநேக branches உண்டு. அந்த கடைக்கு அழகான கிறிஸ்தவ பெயரும் உண்டு. கடையில் பொருள் வாங்கினால் computer bill கொடுப்பார்கள். Bill ன் கீழே தினசரி வேத வசனம் இருக்கும். அந்த கடையின் கல்லா பெட்டியின் மேல் இயேசுவின் கிறிஸ்துவின் படம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு காணப்படும். அதன் அருகில் ஆசிர்வாத வேதவசன board தொங்க விடப்பட்டு இருக்கும். முதலாளி table மேல் பெரிய Bible கூட உண்டு. ஆனால் ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருப்பதை ஆலயத்துக்கு சென்று வரும் போது அடியேன் கவனிப்பேன். ஞாயிறு அன்று ஆலயத்துக்கு கூட செல்லாமல் வியாபாரம் செய்கிறார்களே என்று அடியேன் நினைப்பது உண்டு. இதற்கான காரணம்:-

1) துணிகரம்: கடைசி நாட்களில் மனுஷர் துணிகரமுள்ளவர்களாக இருப்பார்கள் (2 தீமோ 3:4) என்பது எவ்வளவு உண்மை.

2) தேவபயம் இல்லாமை: நானோ தேவனுக்கு பயத்தினால் இப்படி செய்யவில்லை (நெகேமியா 5:15) என்கிறான் நெகேமியா

3) தற்பிரியம்: கடைசி நாட்களில் மனுஷர் தற்பிரியராக இருப்பார்கள் (2 தீமோ 3:2) தற்பிரியம் = தங்களை பிரியப்படுத்துதல். நாம் எப்போதும் தேவனை பிரியப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் (2 தீமோ 3:4)

கிறிஸ்தவர்கள் அதிகமாக பணத்தை சம்பாதிப்பதற்கு என்ன காரியம் உண்டோ, அனைத்தையும் துணிந்து செய்து வருகிறார்கள். கடந்த வருடம் சனிக்கிழமை ஒரு விசுவாசியை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தேன். Brother நாளைக்கு ஆராதனைக்கு எப்போது செல்வீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் காலை 6.30 மணிக்கு செல்வேன், 8.00 மணிக்கு முடிந்து விடும். அதன் பிறகு எனது சொந்த வேலைகளை கவனிப்பேன் என்று கூறினார். காலை 6.30, 8.00 & 10.00 & மாலை 6.00 என்று 4 service நடைபெறுவதாக கூறினார். இன்றைய ஊழியர்கள் ஒய்வு நாளின் முக்கியத்துவத்தை குறித்து சபையில் போதிப்பது கிடையாது. (நான் செல்லும் சபையின் போதகர் ஓய்வு நாளின் முக்கியத்துவத்தை பிரசங்கத்தில் அடிக்கடி போதிப்பார்) இன்றைக்கு அநேக கிறிஸ்தவ குடும்பங்களில் திருமணம் பேசுவது, நிச்சயம் பண்ணுவது Sunday நடைபெறுகிறது.

ஒய்வு நாளில் விறகு பொறுக்கியவன் கல்லெறிந்து கொல்லப்பட்டான்- எண் 15:32-36 என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப் பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், ஏசாயா 58:13 அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன், கர்த்தருடைய வாய் இதை சொல்லிற்று ஏசாயா 58:14

மேலே உள்ள வசனங்கள் தேவனுடைய பிள்ளைகள் ஓய்வு நாளில் சொந்த பேச்சை கூட பேசக் கூடாது என்று தெளிவாக கூறுகிறது. ஆறுநாளும் வேலை செய்ய வேண்டும், ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வு நாள், அதில் ஒரு வேலையும் செய்ய வேண்டாம், அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.
லேவி 23:3

Seventh day Adventist காரர்கள் ஓய்வு நாளுக்கான சாப்பாட்டை ஒரு நாள் முன்னாடியே (புளியோதரை, லெமன்) ஆயத்தம் செய்து விடுவார்கள். ஒய்வு நாள் அன்று வீட்டில் சமையல் கூட செய்ய மாட்டார்கள். அதுமட்டுமல்ல சில கிறிஸ்தவ குடும்பங்களில் Sunday பிளளைகளை படிக்ககூட அனுமதிக்க மாட்டார்கள். பரிசுத்த ஒய்வு நாளில் உங்கள் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற முற்படாதிருங்கள். ஒய்வு நாளில் திருமண நிகழ்ச்சிக்கு செல்லுதல், நண்பர்கள் வீடுகளுக்கு செல்லுதல், களியாட்டுகளில் ஈடுபடுதல் போன்றவற்றை தவிர்க்கவும். இந்த நாளை கர்த்தருக்கென்று பிரித்து வைத்து கர்த்தருக்குள் மகிழ்ந்து இருங்கள். சில தேசத்தாருக்கு வெள்ளிக்கிழமை விடுப்பு நாளாகவும், ஒய்வு நாளாகவும் அமைந்துள்ளது.

ஒய்வு நாளின் பெயர்கள்
1) கர்த்தர் உண்டு பண்ணின நாள் – சங் 118-24
2) மனமகிழ்ச்சியின் நாள் – ஏசா 58-13
3) மகிமையுள்ள நாள் – ஏசா 58-13
4) பரிசுத்த நாள் – ஏசா 58-13

ஒய்வு நாளை கடைபிடித்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) கர்த்தரில் மனமகிழ்ச்சியாக இருப்போம் – ஏசா 58-14
2) உயர்ந்த இடங்களில் (வேலையில் promotion) குடியிருக்க செய்வார் – ஏசா 58-14
3) யாக்கோபின் சுதந்திரத்தால் ( ஐசுவரியம்) நம்மை ஆசிர்வதிப்பார் – ஏசா 58-14


Share this page with friends