- 144
- 20250126
குடியரசு தினம் குறித்த முக்கிய வரலாறு
- 20250126
- 0
- 143
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று
வரலாறு
குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் (குதிரை வண்டியில்) முதல் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்ள தயாராகிறார்.ராஜ்பத், புது தில்லி, 1950.1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
- பொருளாதாரம்,
- அரசியல்,
- கலாச்சாரம்,
- ஆன்மீகம்
ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்.
“12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார் அந்த குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.
பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.
1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கொண்டாடும் முறை
தேசியத் தலைநகரில்
- நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார்.
- தலைநகர் தில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும்.
- கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.
மாநிலத் தலைநகரங்களில்
- மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.
- சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
குடியரசு நாள் கொண்டாட்டங்கள்
ஒளியூட்டப்பட்ட ராஷ்டிரபதி பவன்
ஒளியூட்டப்பட்ட ராஷ்டிரபதி பவன். மூவண்ணங்களுடனான ஊதுபைகளைக் காணலாம்.
சிறப்பு விருந்தினர்
குடியரசு நாள் அணிவகுப்பிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நாடுகள். இரண்டு முறை அழைக்கப்பட்ட முந்தைய யுகோசுலாவியா இந்த நிலப்படத்தில் காட்டப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார்.
தேசத்திற்காக ஜெபிக்க
- தேவன் தந்த இந்திய தேசத்தை நினைத்து கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
- தேசத்தை வழிநடத்தி செல்கிற தேச தலைவர்களுக்காக ஜெபிப்போம்
- தேசத்தில் உள்ள பாவம் சாபம் வியாதி அக்கிரமங்கள் மாற, அடிமைத்தனங்கள் மாற மூடநம்பிக்கைகள் மாற ஊக்கமாய் ஜெபிப்போம்
- தேசத்தில் சமாதானம், ஒற்றுமையும், ஆசிர்வாதமும் செழிப்பும் உண்டாகும் படியாக பாரத்தோடு ஜெபிப்போம்
76 வது இந்திய குடியரசு தின நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்
தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் ஊடகம்
Republic Day celebrations