கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை
திருச்சி, 16 ஜூன் 2021
திருச்சி கிறிஸ்தவ சுயாதீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை ஐ. சி. எப். பேராயம் சார்பில் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் பாஸ்டர் A. ராஜன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரிய C. அருள் வரவேற்புரை ஆற்றினார். இதில் மாநில செயலாளர், S.V.ஜான் சாமுவேல். தஞ்சை H.டேனியல் ராஜரூபன். A.சகாய ராஜ். M. ஜோசப், அமல் ராஜ், மனோஜான் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் S. ஜான் டோமினிக் நன்றி கூறினார்.
தீர்மான விபரம்
1) தமிழக முதலவராக பதவி ஏற்று கொரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க மருத்துவ உதவிகள், நிவாரண உதவிகள் வழங்கி சிறப்பாக பணியாற்றி வரும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பேரவை சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
2) சேலம் மாவட்டம், தம்மம்பட்டி கிறிஸ்தவ திருச்சபை போதகர் ஜீவானந்தம் அவரது காப்பிணி மனைவி ஜெனிபர் இருவரையும் கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்திய சமூக வன்முறையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்.
3) கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த 100 கிறிஸ்தவ திருச்சபை போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க தமிழக அரசையும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் கருணை அடிப்படையில் உதவிடும்படி பேரவை சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.
என ஐ.சி.எப் பேராய/தலைவர் ஜான்றர். முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.