என்று எழுப்புதல் வரும்? எழுப்புதலின் அடையாளம் என்ன?

Share this page with friends

எழுப்புதல் எழுப்புதல் உண்டு., இல்லை இல்லை அப்படி ஒன்றும் இல்லை என்கிற முரண்பட்ட சிந்தைகளுக்கு இடையில் இஸ்ரவேலின் ஆறுதல் வர காத்து இருந்த அன்னா மற்றும் சிமியோன் போன்று ஆலயத்திலும், பரிசுத்த ஆவியின் உணர்விலும் காத்து காத்து இருப்பவர்கள் கண்கள் அந்த எழுப்புதலை நிச்சயம் காணும் என்பதில் ஐயமில்லை.

அப்படியென்றால் அடையாளம் என்ன?

A. ஒரு இனம் புரியாத ஜெப ஆவி, யாரும் தூண்டாமல், தானே பரிசுத்த ஆவியின் தூண்டுதலில் எழுந்து இரவு என்று இல்லாமல் பகல் என்று இல்லாமல் எப்போதும் தேவ சமூகத்தை வாஞ்சித்து ஒரு சின்ன பிள்ளையை போல கதறி சாப்பாட்டை மறந்து, சொந்த வேலையை மறந்து, குடும்பத்தை மறந்து, மொத்த உலகத்தை மறந்து தேவ சமூகமே கதி என்கிற ஒரு பிரேரணை என்று வருகிறதோ அப்போதே அறிந்து கொள்ளுங்கள் ஒரு கையளவு மேகம் வருகிறது அதை மழையாக்கி கொள்ளுங்கள். நெஹமியா, எலியா, தானியேல், எஸ்தர், புதிய ஏற்பாட்டு அன்னா, மேல் வீட்டு அனுபவம் எல்லாம் ஆரம்பத்தில் சிறிய இனம் புரியாத ஆர்வத்தில் ஆரம்பித்தது தான் ஆனால் முடிவோ எந்த ஒரு dynamic power செய்ய முடியாததை அது செய்து முடித்தது.

B. கையில் வேதத்தை எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை, கண்ணீர் பைபிளை நினைக்கிறது, உள்ளம் சம்மட்டி கொண்டு உடைப்பது போல உணர்வு, தனி மனித பாவ நிலை குறித்த அருவருப்பு, பாவ கதறல், ஐயோ நான் அதமானேன் என்று வேதமும் கையுமாக தன் நிலையில் கதரும் அனுபவம் வருவது போல தென்பட்டாலே குறித்து கொள்ளுங்கள் அந்த உணர்வு ஒரு அக்கினியை பற்ற வைக்காமல் விடாது…இந்த வசன பிரேரணை உங்களை சும்மா விடாது…..

C. ஐயோ என் நிலை பரிதாபம், இதுவரை பிறரை கடித்து குதறி வந்தேனே..இனி நான் என்ன செய்வேன், கர்த்தரை போல மறவில்லையே, பரிசுத்தம் இல்லையே, அசுத்த உதடு உள்ளவன், அசுத்த பார்வை உள்ளவன், தேவ சாயல் எண்ணில் இல்லையே, நான் என்னை அறுவருத்து, ரட்டிலும், சாம்பலிலும், புரட்டி எடுக்கிறேன்..என்று பாவி பாவி என்று கர்த்தரின் சமூகத்தில் கதறி கதறி மன்னிப்பு கேட்க வெண்டியவர்களிடம் கெஞ்சி ஒப்புவராவாகி, கடிதம் எழுதி எல்லாவற்றையும் சரி பண்ண இனம் புரியாத ஒரு பரிசுத்த பிரேரணை வருகிறது என்றால் எழும்புங்கள், கர்த்தர் பிரகாசிக்க தொடங்குகிறார், ஏனெனில் பரிசுத்தம் நிச்சயம் ஒரு அசைவு அசைக்காமல் விடாது…

C. என் ஜனம் இயேசுவை அறிய வேண்டும், ஆத்துமா அழிந்து போக கூடாதே, பாவிகள் கர்த்தருடைய கோபமுள்ள கையில் இருக்கிறார்களே என்கிற பதபதைப்பு, ஏக்கம், ஜனம் கூட்டம் கூட்டமாக நரகத்தில் விழுகிறார்ககளே என்கிற நடுக்கம், என்னை அனுப்பும் கர்த்தாவே, என்னை அனுப்பவும் கர்த்தாவே நான் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும்…என்கிற ஆன்மா உந்துதல் எங்கேயோ வருகிறதா..அதுதான் எழுப்புதல் கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள், சுவிசேஷ பிரேரணை தான் எழுப்புதலை கொளுத்தி விடும் அக்கினி தீ……

இதை எல்லாம் ஒரு காலத்தில் அனுபவித்தவர்கள், பாவ உணர்வில் கதரினவர்கள், வசனத்தில் மூழ்கி இருந்தவர்கள், ஜெபம் தான் கதி என, பரிசுத்த வாஞ்சை கொண்டு பாவி பாவி என்று கதறி, கடிதம் எழுதி எழுதி, போன் போட்டு போட்டு மன்னிப்பு கேட்டு, என்னை உடையும் உருவாக்கும் என்று கதறினவர்கள் நிச்சயம் இதை வாசிப்பீர்கள்…அதே அனுபவத்தை பெற்றவன் என்கிற நிலை தான் எனக்கும்…ஆனால் இன்று இல்லையே…..யாரையெல்லாம் கொண்டு உடைத்து பார்க்கிறார்…அவர் விரும்பும் பரிசுத்தம் உண்டாக உடைய வில்லையே….என்னை ஒரு விசை உயிர்ப்பிக்க மாட்டீரோ?….அப்படி இன்னும் கதறி கொண்டு இருக்கிறீர்களா?…. ஒரு கையளவு மேகம் தோன்றி விட்டது…வாருங்கள் புறப்படுவோம்…கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்கிற சத்தத்தோடு…..இப்படிபட்ட எழுப்புதலில் மரிப்போம்…அடுத்த தலைமுறை யாவது இந்த எழுப்புதலில் பிறக்கட்டும்….

செலின்


Share this page with friends