ஏன் எழுப்புதல் தாமதம் ஆகிறது?

Share this page with friends

இனி எழுப்புதல் வாரது என்றும், கடைசி காலத்தில் இப்படி தான் நடக்கும் என்றும், வருகைக்கு ஆயத்தம் ஆக வேண்டும் என்றும், யாரையும் யாரும் கட்டுபடுத்த முடியாது என்றும் பல வாதங்கள் இருந்தாலும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தம் ஆகவேண்டுமெனில் கூட ஒருவித ஆவிக்குரிய எழுப்புதல் இந்த காலகட்டத்தில் தேவை படுகிறது என்கிற நம்பிக்கையே எழுப்புதலின் வாஞ்சை.

எழுப்புதல் என்பது ஏதோ ஒருவித உணர்ச்சியின் அடிப்படையில் வருவது அல்ல அது மனம்திரும்புதலின் பரிசுத்ததின் அடிப்படையில் வருவது ஆகும். பாவ வெறுப்பு, சுவிசேஷ தாகம், பரிசுத்த வாழ்வின் எண்ணம், ஆத்தும பாரம், missionary வாஞ்சை, கிறிஸ்துவுக்கு வேண்டி வாழ்வும் வாழ்வு, அவருக்காக மரிக்கவும் தயராகும் வாழ்வு, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நம்பிக்கை, வேத வசன நெருக்கம் மற்றும் ஜெபவாழ்வில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றின் எழுச்சியை தான் எழுப்புதல் என்கிறோம். இந்த எழுச்சி தான் பிறரை கிறிஸ்துவின் நேராக இழுக்கும் வல்லமையை கொண்டு இருப்பதை வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம்.

இவைகள் இன்று ஏன் கிறிஸ்தவ வாழ்வில், நமது இந்தியாவில் நடைபெற வில்லை? தொடர்ந்து கவனிப்போம்.

A. Diluted gospel. கலப்பட சுவிசேஷம்.

இன்று சுவிசேஷத்தில் இருக்கும் ஒரு பெரிய ஏமாற்றமே கலப்படம் தான். கிறிஸ்து தாரித்திரியம் மாற்றும் ஐசுவரியவனாகவும், நோய் குணமாக்கும் மருத்துவராகவும், வேலை கொடுக்கும் company owner ஆகவும், கடன் பிரச்சனையை தீர்க்கும் வங்கி ஷேட் ஆகவும், பிரச்சனையை தீர்க்கும் நாட்டாமையாகவும் தான் project செய்ய படுகிறார். மேற்குறிப்பிட்ட இவைகளை செய்து கொடுக்க இன்று கிறிஸ்தவத்தை தாண்டி மற்றவர்களும் அதை தான் செய்கிறார்கள். அதையும் தாண்டி கிறிஸ்துவை பின் குறிக்கப்பட்ட விதத்தில் திரஷ்டாந்த படுத்த தவருகிறதினால் தான் எழுப்புதல் தாமதம் ஆகிறது.

  1. ரூபிக்கபட்ட அல்லது நீருபிக்கபட்ட கிறிஸ்துவை அறிவிக்க தவருகிரோம். அவர் சகல துரைத்தனம், வல்லமை, அதிகாரம், கர்தத்துவம், மகத்துவம் போன்றவற்றை வெற்றி பெற்று எல்லா நாமத்திற்கு மேலான அதிகாரம் என்பவர் என்பதை விட்டு விட்டு அவரை இந்த உலக மாம்ச காரியத்திற்கு மட்டும் பயன்படும் சுவிசேஷத்தை கொடுக்கிறோம். கிறிஸ்துவை வேத வாகியங்களின் படி நீருபிக்க வேண்டும். அதை செய்ய தவருகிறோம்.
  2. சிலுவை மரணத்தின் மூலம் அவர் சிந்தின இரத்தம் மூலம் வெளிப்பட்ட பாவ பரிகாரம், புதிய மார்க்கம், மெய்யான ஐக்கியம், சிலுவையின் உபதேசம், நித்தியஜீவனை கொடுக்கும் நம்பிக்கை போன்ற மெய்யானவற்றை விட்டு விடுகிறோம்.
  3. அவரது பூரண கிருபையின் உபதேசமான உயிர்த்தெழுதல் போன்ற வல்லமையான சத்தியங்களை இந்த உலக வாழ்விற்காக ஒப்பிட்டு பேசி நித்தியத்தை குறித்த உயிர்த்தெழுதலை விட்டு விடுகிறோம்.
  4. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, அவரது ஆயிரம் வருட ஆளுகை, அவரது வருகையின் அடையாளங்கள், நித்திய வாழ்வின் மகிமை, நியாயத்தீர்ப்பு, ஆக்கினை தீர்ப்பு, நரகம் போன்ற எதிர்கால நம்பிக்கையாக நாம் விசுவாசிக்கும் மெய்யான சத்தியங்களை புறம் தள்ளிவிட்டு இவுலக நிலையற்றவைகள் மேல் அதீத பற்று காட்டுகிறோம்.

இந்த சுவிசேஷத்தை அறிவிக்க ஜெபித்தார்கள், ஜெபிக்க வேண்டினார்கள், அறிவித்தார்கள், பாவத்தில், சாபத்தில் இருந்து விடுதலை பெற்றர்கள், நித்திய ஜீவனுக்கு உரிய சந்தோசம் அடைந்தார்கள், அற்புதம் நடந்தது, பிசாசுகள் ஓடினது, நோய் குணமாக மாறியது. ஆனால் இன்று சத்தியத்தை விட்டு விட்டு, கிறிஸ்துவின் நற்செய்தியை விட்டு விட்டு சுகம், சமாதானம் அறிவிக்கிறோம்.

எனவே என்றைக்கு பரிசுத்தம், மனம் திரும்புதல், நீதி, நியாயத்தீர்ப்புக்கு தப்புதல், வரப்போகும் நித்திய ராஜியத்தை சுதந்தரிதல் போன்றவற்றை அடைய கிறிஸ்து தான் ஒரே வழி, கிறிஸ்துவின் அன்பு தான் நிரந்தரம், கிறிஸ்துவின் நம்பிக்கை தான் சத்தியம், கிறிஸ்துவின் சுவிசேஷம் தான் நிச்சயம் என்று சுவிசேஷம் அறிவிக்கிறோமோ அன்று தான் எழுப்புதல் ஆரம்பிக்க துவங்கும்.

B. Visionless missionary movements. தரிசனம் இல்லாத மிஷனரி இயக்கங்கள்.

சீசர்களை உருவாக்க, குறைந்த பட்சம் விசுவாசிகளை உருவாக்க, நித்திய ஜீவனுக்கு உரியவர்களை சேர்த்து கொள்ள, சுவிசேஷம் அறிவிக்க அழைக்க பட்ட நாம், நமது ஸ்தாபனங்கள், நமது missionary இயக்கங்கள் இன்று செய்வதை பார்த்தால் நிச்சயம் எழுப்புதல் வரும் என்பது சந்தேகமே!

இன்றைய மிஷனரி இயக்கங்களில் இருக்கும் தரிசனம் என்ன?

கிறிஸ்துவின் வல்லமை, அவரது சுவிசேஷத்தின் மகிமை மேல் உள்ள நம்பிக்கை, பரிசுத்த ஆவியின் வல்லமை மற்றும் சத்திய உபதேசத்தின் மருரூவ வல்லமை போன்ற மகத்துவங்களை சமரசம் செய்து நேரடியாக சுவிசேஷம் அறிவிக்க தயங்கி, எதிர்ப்பு, மதவாதம் போன்றவற்றை காரணம் காட்டி மறைமுக சுவிசேஷம் அறிவிக்க opportunity உருவாக்கி அதை அறிவிக்கிறோம் என்று school, மருத்துவமனை, தொழிற்கல்வி, சமூக சேவை என்று இறங்கி விளையாடுகிறோம். சுவிசேஷம், சத்திய வசனம் மற்றும் பரிசுத்த ஆவி கொண்டு transform செய்ய முடியாது என்று உலக வழிகளில் ஊழியம் செய்ய missionary என்ற போர்வையில் அப்போஸ்தலர்கள் காட்டி தராத வழிகளில் இறங்கி இன்று மருத்துவர்கள், பொறியாளர்கள், செவிலியர்கள், துணி தைப்பவர்கள் என்று திறமையின் அடிப்படையில் அநேகரை உருவாக்கி பெருமை பட்டு கொள்கிறோம். போதா குறைக்கு ஒரு சில சாட்சிகளை கொண்டு தாங்கழை ஒரு பெரிய ஜாம்பவான்கள் போன்று மிகை படுத்தி மற்றவர்களை பொது மேடைகளில் போட்டு தாக்கும் தாக்குதல்கள் இருக்கிறதே அப்பப்பா… அப்போஸ்தலர்கள் ஒருபோதும் மறைமுக சுவிசேஷம் அறிவிக்கவில்லை அவர்கள் சூழ்நிலைகளை நேரடியாகவே சந்தித்து சுவிசேஷம் அறிவித்து சபையை ஏற்படுத்தினார்கள்

அன்று மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துவை ஏற்று கொண்டு மனம் திருந்தி அவரை போல வாழ தீர்மானம் எடுத்தவர்களின் வாழ்வாதாரம், அறிவு, எதிற்காலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தான் இந்த school மற்றும் universutikal அங்கு ஏற்படுத்த பட்டன. ஆனால் இங்கு சுவிசேஷத்தின் பெயரை சொல்லி அவைகளை நடத்தி சுய கோட்டை கட்டி கொண்டு வருகிறார்கள். ஒருவர் எதிர் அரசியலில் இருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டாலும் நாம் சொல்வது என்ன அவர் கிறிஸ்தவ ஸ்கூலில் படித்தார் என்று! அது போதுமே நமக்கு! அன்று பவுல் திறனுடைய வித்தியாசாலையில் இருந்து முழு ஆசியாவும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க மூன்று வருடம் பயன்படுத்தி வெற்றியும் கண்டார். காரணம் பவுலின் முழு நோக்கம் கிறிஸ்துவே!

Missionary இயக்கங்களுக்கு வரும் காணிக்கைகளை அதாவது பட்டனம் கிராமம் தோறும் அவர்களால் மிஷனரி ஊழியத்திற்கு என்று சேகரிக்கப்படும் வருமானம் கொண்டு சபைகள், மிஷனரிகள், ஊழியங்கள் தாங்க படுவதற்கு பதில் இன்றைய missionary இயக்கங்களில் பெரும்பாலும் தாங்கபடுகிறவர்கள் சமூக தொண்டு செய்கிறவர்கள் தான். அவர்கள் பெறும் பாதி கூலி கூட மிஷனரிகள் பெறுவதில்லை. சபை நடத்தும், மற்றும் சுவிசேஷம் அறிவிக்கும் மிஷனரிகள் இரண்டாம் தர மக்களாக நடத்தப்படுகின்றனர். எனக்கு தெரிந்து ஒருவர், பெரிய ஊழியர் என்று தன்னை காட்டும் ஒருவர் தனது secular collge graduationai grant celebration ஆக நடத்தி அவர் நடத்தி அதாவது ஒப்பணைக்காக நடத்தி வந்த பைபிள் college graduationai தனது ஆபீஸில் வைத்து நடத்தி அவர்களை அனுப்பி விட்டார். இன்றைக்கு மிஷனரி களுக்கு கொடுக்கும் உதவி, அவர்களது வாடகை வீடு போன்றவை எப்படி இருக்கிறது. Missionary ஸ்தாபனங்கள் நடத்தும் school, college மற்றும் University யில் வேலை செய்பவர்களை விட மிஷனரிகளை கீழ்த்தரமாக நடத்தும் எத்தனையோ ஸ்தாபனங்கள் இன்று இந்தியாவில் இருக்கிறது. சுவிசேஷ ஊழியம் மற்றும் சபை ஊழியத்தை ஒப்பனைக்காக வைத்து கொண்டு மற்ற கல்வி ஸ்தாபனங்கள் மூலம் தங்களை நிலை நாட்டி பிரபலம் அடந்தவர்கள் நினைத்தால் எத்தனையோ சபைகளை உருவாக்கி இருக்கலாம். ஆனால் கர்த்தருக்கு பயப்படும் சில அரிதான ஸ்தாபனங்கள் தான் இன்னும் தங்கள் missionary பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது ஒரு நம்பிக்கை கொடுக்கிறது. ஒரு missionary ஸ்தாபனம் எப்போது சுவிசேஷம் மற்றும் சபை ஊழியத்தில் இருந்து பின்வாங்கி கொள்கிறதோ, அப்போதே அது தனது தரிசனத்தை இழந்து விட்டது. சிலர் வேண்டும் என்றே நாங்கள் பாடுகள் நிந்தைகள், மற்றும் கஸ்ட்டம் அனுபவித்து விசுவாசத்தில் ஊழியம் செய்தோம் என்று தங்களுக்கு திராணி இருந்தும் மிஷனரிகளை தவிக்க விடுவாரும் உண்டு அவர்களும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

என்றைக்கு கிறிஸ்துவை அறியாத மக்கள் மத்தியில் சுவிசேஷம் மற்றும் சபை ஏற்படுத்தும் missionary ஊழியத்தை நேரடியாக கிறிஸ்துவின் சுவிசேஷம் மற்றும் அவரது ஆவியின் துணை கொண்டு பாடுகள், அவமானங்கள், மற்றும் நிந்தைகள் மத்தியிலும் அப்போஸ்தலர்கள் போன்று செய்ய முன்னுரிமை கொடுத்து மிஷனரிகளை இரட்டிப்பான கணத்திற்கு பாத்திறவாங்களாக எண்ணுகிறோமோ அன்று எழுப்புதல் தானாக வரும் என்பதில் எந்த ஐயப்பாடு இல்லை.

C. Churchless ministries and missionless churches. சபை தொடர்பற்ற ஊழியங்கள் மற்றும் ஊழியமற்ற சபைகள்.

இன்று சுதந்திர ஊழியர்கள் என்று சொல்லி நாங்கள் யாருக்கும் கட்டுபடாதவர்கள் என்று சொல்லி சபையை உதாசீனப்படுத்தி, சபையின் பக்தி விருத்தி ஊழியங்களை அற்பமாக எண்ணி, தங்களை மேன்மை படுத்தி, சபைக்கு விரோதமாக செயல்படும், தூண்டிவிடும் ஒரு வித போக்கும், சபை போதகர்கள், சபை காணிக்கைகளை நோக்கம் கொண்டு பொது மேடைகளில் போதகர்கள் மற்றும் சபைகளை மட்டம் தட்டி தாங்கள் தான் மெய்யான ஊழியர்கள், தங்கள் ஊழியங்களுக்கு காணிக்கை கொடுத்தால், எங்களோடு ஜெபித்தால், எங்களோடு இணைந்து இருந்தால் என்கிற கவர்ச்சி வார்த்தைகளை சொல்லி தங்களை முன்னுறுத்தி கிறிஸ்துவின் சபையையும் அதன் ஊழியர்களையும் பிரிக்கும் நூதன ஊழியங்கள் தான் இன்றைய எழுப்புதலின் தடை. கிறிஸ்துவின் சபையையும் கிறிஸ்துவோடு ஜனங்கள் ஐஐக்கியம் ஆகிறதையும் எந்த ஊழியன் அற்பமாக எண்ணுகிறான் என்று கவனித்தால் அங்கு தான் வஞ்சகம் ஆரம்பிப்பதை பார்க்க முடியும்.

ஆனால் அதே நேரத்தில் எண்ணிக்கை வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தி, தங்கள் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு ஊழியம் செய்யும் எந்த சபையும் தேவ திட்டத்தை நிறைவேற்றுவதில்லை. ஒரு சபை ஊழியத்தில் உபதேசக்கிறவர், தீர்க்கதரிசனம் உரைக்கிறவர், கண்காணிக்கிரவர்கள் போன்ற ஊழியங்கள் நடைபெற்று, பக்திவிருத்தி ஏற்பட்டு சீசர்களாக்கி அவர்களை missionary challnge செய்து எதற்காக அழைக்கபட்டர்கலோ அதற்காக உருவாக்கி, கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். இதை செய்யாத சபையும் எழுப்புதல் வருவதற்கு தடை தான். வெறும் எண்ணிக்கையை மையமாக கொண்டு எல்லா நிலைகளிலும் விசுவாசிகளை தரமுள்ளவர்களாக மாற்றாத சபையும் சபை அல்ல. ஒரு மிஷனரி அல்லது ஊழியன் கூட ஒரு சபையில் உருவாக்க படவில்லை எனில் அந்த சபை நோக்கம் இல்லாத சபையை போன்றதாகும். சபை வருமானத்தை சரியாக மிஷனரி மற்றும் மற்ற ஊழியங்கலுக்கு பயன்படுத்தாத சபையும் போதகணும் தங்களை மேய்க்கும் சுயநலவாதிகள் தான். பேசின பிரசங்கத்தை பேசி கொண்டும், கேட்ட பிரசங்கத்தை கேட்டு கொண்டும் இருந்து பிரதான நோக்கமாக இருக்கும் சுவிசேஷ ஊழியம் மற்றும் missionary ஊழியத்தை குறித்த கவலையற்ற தன்னல நிலையில் இருந்தால் நமது நிலையும் அந்த கேடு பரிதாபம் தான்.

The independent must be corporate only then the revival will burst out.

D. Immature preaching, premature preachers and disobedient believers பக்குவபடாத பிரசங்கங்கள் மற்றும் உருவாகாத பிரசங்கிகளும் கீழ்படியாத விசுவாசிகளும்.

சத்தியத்தை சத்தியமான நிலையில் பிரசங்கிக்க தயங்கும் பிரசங்கியார்கள், கர்த்தர் என்ன சொல்கிறார் என்பதை விட, மக்கள் எதை ஆமோதிப்பார்கள் என்பதின் அடிப்படையில் தான் அநேக பிரசங்கங்கள் இன்று இருக்கிறது. வேதத்தை பகுத்து போதிக்கும் போதகர்கள் மற்றும் சத்தியம் பேசும் போதகர்கள் அசட்டை செய்ய படுகின்றனர். சத்தியம் பேசும் தைரியம் போய் விட்டது. பிறரை காயப்படுத்த கூடாது என்று பிறரை மேற்பூச்சு பூசி பிரசங்கம் செய்தல் பெருகி விட்டது. Motivational preachers gain their momentum. பரிசுத்தம் இல்லாத பிரசங்கம் பெருகிவிட்ட நிலையில் கிறிஸ்துவை பிரசங்க செய்ய வெட்கம் அடைகிறோம். பரிசுத்த ஆவியானவர் கிரியைகளை உணர்சிகளோடு ஒப்பிட்டு அதின் சாராம்சத்தை விட்டு விடுகிறோம். வாக்குத்தங்கள், ஆசீர்வாதங்கள், ஊக்கப்டுத்துதல், போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி, பரிசுத்தம், விசுவாசம், நம்பிக்கை, தேவ சித்தம், நீதி, நியாய தீர்ப்பு கிறிஸ்துவின் வருகை, ஞனத்தை உணர்த்தி, அறிவை உணர்த்துதல் போன்றவற்றை பேசி கடிந்து கொள்ளுதல், சீர்படுத்துதல், உபதேசித்தல், படிபித்தல் போன்றவற்றை செய்ய தவறுகிரோம். நமது பிரசங்கங்கள் நித்தியத்தை, பரலோகராஜியத்தை, கிறிஸ்துவின் வருகையின் நம்பிக்கையை, பரிசுத்தத்தை, நியாயத்தீர்ப்பு மற்றும் மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை மறந்து விட செய்கிறது மாறாக இவுலகத்தின் மேல் அதிக நாட்டம் கொள்ள வைக்கிறது. அப்படி யாராவது அவைகளை குறித்து பேசினால் ஏலியன்ஸ் என்று அவர்களோ ஒதுக்கி வைத்து விடுகிறோம். மிஷனரி, தீர்க்கதரிசி, போதகர், சீசன், மேய்ப்பன், ஆபோஸ்தலன் என்று உருவாக வேண்டிய சபை விசுவாசிகளை இப்போது நமது atm machins ஆகவும், ரசிகர்களாகவும் வைத்து கொண்டு பெருமை கொள்கிறோம். நாங்கள் ஜெபித்தால் தான் விடுதலை, நாங்கள் அதை குறித்து சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறி விட்டது என்று தம்பட்டம் அடித்து, எல்லாவற்றுக்கும் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும் என்று எண்ணி எல்லாவற்றிலும் தலையிட்டு, தங்கள் அழைப்பில் நிற்காத, எல்லாரும் என் கட்டுபாட்டில் இருக்க வேண்டும் என்று தங்களை ஒரு பொருட்டாக எண்ணி, அதிகார மோகத்தில் இருநது கொண்டு தங்களை ஏமாற்றி, தேவனால் பரிசுத்த ஆவியால் நடத்த படாத எந்த நபர்களும் எழுப்புதலுக்கு எதிரிகளே.

மருபகுதியில் பார்த்தால், சபைக்கு அடங்கி கர்த்தரின் பலத்த கையில் அடங்கி இருக்க விருப்பம் இல்லாத மைக் பிடித்து ஸ்டேஜில் நிற்பது தான் ஊழியம் என்று எல்லா விசுவாசிகளுக்கு ஆசாரிய அழைப்பு, ராஜரீக அழைப்பு இருக்கிறது என்று சொல்லி, உலக வேசம் போட்டு சரியான கிட்டு மச்சி என்று கிட்டுக்காக ஊழியம் செய்ய வந்து இருக்கும் விசுவாசிகளை போன்ற போர்வையில் இருக்கும் கீரோக்களும், ஒரு பிரச்னை, அவமானம், பரியாசம், பாடு வந்தாலே ஊழியம் வேண்டாம் என்று சொல்லி கணம் புகழ் தேடும் நூதன சீடர்களும் தான் இன்றைய எழுப்புதல் வர தடை. தன் திறனை அடிப்படையாக கொண்டு பிறரை மதிக்காமல் தங்களை நடத்தும் ஊழியரை மதிக்காமல், ஊழியத்தை ஒரு இழிவான ஆதயத்திற்கு வேண்டி செய்யும் அற்ப ஜீவிகள், பதவி மோகம், உலக ஆசீர்வாதம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட so called பெயரிடப்பட்ட விசுவாசி என்று சொல்லும் ஊழியர்களும் தான் இன்றைய எழுப்புதலின் தடைகள்.

அப்படி என்றால் எழுப்புதல் வாராதா? வரும்! நாம் எதிர்பாராத இடத்தில் இருந்து, எதிர்பாராத கிராமம், எதிர்பாராத பட்டணம், எதிர்பாராத தீவுகளில் இருந்து எதிர்பாராத நபர்களிடம் இருந்து வரும்! யார் அவர்கள்?

கர்த்தரின் பலத்த கைக்குள், சபைக்குள் அடங்கி இருந்து, கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தை, குறைச்சல், பாடு சகிக்கும் மனப்பக்குவம் நிரைந்த, கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனது ஆதாயம், கிறிஸ்துவின் மேன்மை தான் எனது மேன்மை என்று எண்ணி, என்னால் தான் எழுப்புதல் என்று கருதாமல், நான் இன்னும் கிறிஸ்து விரும்பும் பரிசுத்தம் ஆக முடிய வில்லையே என்று ஏங்கும், கிறிஸ்துவின் ராஜியம் வர ஏங்கும், கிறிஸ்துவின் நிமித்தம் மரிக்கவும் தன்னை விட்டு கொடுத்து அவரை நேசித்து அவரை போல வாழ விட்டு கொடுத்து அவரது சமூகத்தில் இரவும் பகலும் அவரேயே நோக்கி பார்த்து ஆறுதல் வர காத்து இருக்கும் ஒரு கூட்டத்தின் மூலம், தனி நபர் மூலம் வரும்….அந்த நபராக நீங்களும் நானும் இருந்தால் பாக்கியசாலிகள் தான்.

செலின்


Share this page with friends