உண்மைக்கு கிடைக்கும் பரிசுகள்

Share this page with friends

கர்த்தருக்கு உண்மையாய் …. இருந்தீர்களென்றால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:

 1. அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
  (உபாகமம் 28:2)
 2. கர்த்தருக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், பின்னர் நீ செய்கிற அனைத்திலும் நீ போகிற அனைத்து திட்டங்களிலும் வெற்றிபெற்றவன் ஆவாய்.
  (1 இராஜாக்கள் 2:3)
 3. உண்மையானவனைக் கர்த்தர் காக்கிறார்.
  (சங்கீதம் 31:23)
 4. உண்மையானவர்கள் அவரோடு வாசம்பண்ணும்படி அவர் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்.
  (சங்கீதம் 101:6)
 5. தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்,
  கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
  (சங்கீதம் 145:18)
 6. என் கட்டளைகளின்படி நடந்து,
  என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான், அவன் பிழைப்பான்.
  (எசேக்கியேல் 18:9)
 7. கொஞ்சத்திலே உண்மையாயிருந்தால் அநேகத்தின்மேல் அதிகாரியாக வைப்பார்.
  (மத்தேயு 25:21)
 8. மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை தருவார்.
  (வெளிப்படுத்தின விசேஷம் 2:10)

Share this page with friends