சகோ.மோகன் சி லாசரஸ் அவர்களது உடல்நிலை தொடர்பான வதந்தியும் அதற்கான விளக்கமும்

Share this page with friends

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் அமைந்துள்ள இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோ. மோகன் சி லாசரஸ் மற்றும் திருமதி ஜாய்ஸ் லாசரஸ் ஆகிய இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்திகள் முற்றிலும் தவறானது என்று சகோ. மோகன் சி லாசரஸ் அவர்கள் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

ஜெபிக்கலாம் வாங்க நேரலை நிகழ்ச்சி

ஊரடங்கு ஆரம்பமானது முதல் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலம் சகோ. மோகன் சி லாசரஸ் அவர்கள் ஆன்லைன் மூலம் நேரலையில் ஜெபிக்கலாம் வாங்க என்னும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்திவந்தார். மேலும் வாக் வித் காட் என்னும் அதிகாலை தியான நிகழ்ச்சி, திறப்பின் வாசல் ஜெபம், குடும்ப ஆசீர்வாத நேரம் உட்பட வழக்கமான தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளில் சகோ. மோகன் சி லாசரஸ் அவர்கள் தேவ வார்த்தையை பகிர்ந்து கொண்டிருக்கிார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிமை ஆகிய இரு தினங்கள் நடந்த ஜெபிக்கலாம் வாங்க என்ற நிகழ்ச்சி சத்தியம் தொலைக்காட்சி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நேரலை செய்யப்பட்டிருந்தது. இந்த நேரலையில் சகோ. மோகன் சி லாசரஸ் அவர்களது சரீரம் பாதிக்கப்பட்டிருப்பதை அவரது நடவடிகைகளை கொண்டு பலர் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் சற்றும் உண்மை தன்மையை ஆராயாமல் சகோ. மோகன் சி லாசரஸ் அவர்களது உடல் நலம் தொடர்பான பொய்யான வதந்தி ஜெபம் பண்ணுங்கள் என்று தலைப்பிட்டு சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவந்தது. இது மக்களிடைய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வதந்தியாக பரவி வந்த செய்தி

செய்தியறிந்து சகோ. மோகன் சி லாசரஸ் அவர்கள் சத்தியம் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் “தான் சுகமாக இருப்பதாகவும், தொடர்ந்தேற்றியான ஊழியங்களினால் சற்று சரீரம் பாதிக்கப்பட்டுள்ளது. உங்களது அன்பிற்காக ஜெபங்களுக்காக நன்றி. தொடந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.” என்று கூறியுள்ளார்.

அன்பானவர்களே, சமூக வலைதளங்களில் உங்களுக்கு கிடைக்கும் எல்லா செய்திகயைும் நம்பி பிறருக்கு பகிர வேண்டாம். உண்மை தன்மையை ஆராயந்து செயல்படுங்கள்.

வீடியோவை காண..


Share this page with friends