கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு பரப்பும் ருத்ர தாண்டவம் திரைப்படம் மற்றும் டிரைலர், தடை செய்ய மற்றும் இயக்குநர் மோகன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் மனு.

Share this page with friends

உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் ருத்ரதாண்டவம் திரைப்படத்தை தடை செய்ய தேசிய இணையதள குற்ற ஆவண காப்பகத்தில் புகார் மனு

கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு பரப்பும் ருத்ர தாண்டவம் திரைப்படம் மற்றும் டிரைலர் ,தடை செய்ய மற்றும் இயக்குநர் மோகன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் மனு.

இயக்குநர் மோகன் G. என்பவர் ருத்ர தாண்டவம் என்ற திரைபடத்தை இயக்கி உள்ளார். மேற்கண்ட திரைப்படத்தை gm Films/ 7G Films என்ற நிறுவனங்கள் தயாரித்து உள்ளன. ருத்ர தாண்டவம் திரைபடத்தின் டிரைலர் தற்போது இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. திரைப்படத்தின் டிரைலரில் நடிகர் ராதாரவி கிறிஸ்தவ மதம் குறித்தும் கிறிஸ்தவ மக்களின் மனது புண்படுத்தும் விதமான பேசிய வசன காட்சிகள் வருகிறது. கிறிஸ்தவ மதம் குறித்து தவறான கருத்துகள் மற்றும் மதப்பிரச்சனையை தூண்டும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 25ன் படி குடிமக்கள் அனைவரும் எவ்வித கட்டுப்பாடுமின்றி எந்த சமயத்தை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் முழு உரிமை உண்டு என்ற விதிக்கு எதிராக இந்த திரைப்பட வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆகவே அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் வாழும் தமிழகத்தில் தேவை இல்லாத மதப்பிரச்சனை, சாதி மோதல்களை தூண்டக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட மேற்படி ருத்ரதாண்டவம் திரைப்பட டிரெய்லர், மற்றும் திரைப்படம் வெளியீடு செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் மேற்படி கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு வசனங்களை இயக்கிய மேற்படி இயக்குநர் மோகன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.


Share this page with friends