திருநெல்வேலி செம்மண பூமியின் பழுப்பு நிற மக்களுக்காய் தன் வாழ்வை உதறிய தியாக செம்மல்

Share this page with friends

மர்காஷிஸ் கிபி 1852 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இங்கிலாந்தின் லாமிங்டனில் பிறந்தார்

இவர் நல்ல பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்தவர் இவரின் பெற்றோர் இவருக்கு உன் தேவனை முதன்மையாக நேசி உன்னைப் போல் பிறரையும் நேசி என்று சொல்லி வளர்த்தார்கள்

கடவுள் பக்தியுள்ள பெற்றோரின் துய்மை வாழ்வு அவரையும் துய்மையுள்ளவராக வளர்த்தியது

இவர் இங்கிலாந்து மருத்துவக் கல்லுரியில் மருத்துவப் படிப்பை முடித்து பின் இறையியல் கல்வியையும் முடித்திருந்தார்

அப்போது தென் தமிழகத்தின் #திருநெல்வேலி மாவட்டத்தில் #இடையன்குடி என்னும் கிராமத்தை மையமாக வைத்து கால்டுவெல் எனும் மிஷனெரி பணிகளை செய்துக்கொண்டிருந்தார்

ஒருமுறை இங்கிலாந்திற்கு சென்ற அவர் தென்தமிழகத்தின் நிலையையும் தேவைகளையும் பாரத்தோடு பகிர்ந்துகொண்ட போது அக்கூட்டத்திலிருந்த மருத்துவம் மற்றும் இறையியல் கற்ற மர்காஷிஸ் தன்னை ஒப்புக்கொடுத்தார்

தன் MRCS LRCP ன் இறுதியான்டை முடிக்காமலேயே கால்டுவேல் அவர்களோடு கப்பலேற தீர்மானித்தார்

நண்பர்களும் உறவினர்களும் கல்வியை முடித்துச் சான்றிதழைக் கையில் வாங்கிய பின் செல்லலாமே என அறிவுரை கூறியபோது என் வசதிபோல் செய்ய இது உலக வேலையல்ல என்று முழங்கினார் மர்காஷிஸ்

கப்பலேறி இந்தியக் கரை தொட்டார் வெறும் 22 வயதான இளைஞனாய்

கால்டுவெல்லின் பணித்தளமாம் இடையின்குடியில் சில காலம் தங்கி பின் சாண்பாத் என்னும் பணிதளத்தையும் பொறுப்பேற்கிறார்

1875ல் துவங்கிய அவரது பணியால் சாண்பத்து ஊரையும் அதன் பக்கத்து ஊர்களையும் புடமிட்டதின் விளைவு #நாசரேத் என்ற நூறு சதவீத கிறிஸ்தவ கிராமமாய் மாறியது

பள்ளி கல்லுரி செவிலியர் கல்லுரி என ஆசீர்வதிக்கப்பட்ட அந்த கிராம விசுவாசிகள் இன்று கிட்டதட்ட உலகின் எல்லா நாடுகளிலும் வளமோடு வாழ்கிறார்கள்

இதற்கு காரணம் இயேசுவின் சுவிஷேமும் மர்காஷிஸ் என்னும் மாமனிதனின் தன் மருத்துவ படிப்பை உதறி இங்கிலாந்தின் வளமிக்க மதிப்பு மிக்க அசாதாரனமான வாழ்வைத் துறந்து இந்த திருநெல்வேலி செம்மண பூமியின் பழுப்பு நிற மக்களுக்காய் தன் வாழ்வை உதறியது தான்

இப்படிபட்ட தியாகமுள்ள தேவ மனிதர்களை நம் பகுதிக்கு அனுப்பி தந்த தேவனை துதிப்போம் தேவனுக்கே மகிமை உன்டாவதாக ஆமேன்

II_தீமோத்தேயு 4:5

நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

kingtabernaclesimm


Share this page with friends