துக்கம்! – (SORROW, GRIEF)

Share this page with friends

துக்கம்!(SORROW, GRIEF) என்பது, மனதில் ஏற்படும் சொல்லமுடியாத ஒரு வேதனையாகும்.

தற்காலத்தில் துக்கம் என்பது மனுஷனுடைய கவலையைப் பிரதிபலிக்கும் மனோபாவமாக இருக்கிறது. பொதுவாக ஒருவர் மரித்துப் போனால் அவரை நினைத்து ஆழ்ந்த வேதனையோடு துக்கப்படுகிறோம். வேதாகமத்தில் மரணத்திற்கான துக்கத்தோடு வேறுபல சம்பவங்களிலும் மனுஷர் துக்கப்பட்டிருக்கிறார்கள். சத்துரு கொடுக்கும் பிரச்சனையினால் துக்கம் உண்டாகிறது (சங் 6:7;31.10).

ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்” (நீதி 10.1). இங்கே சஞ்சலம் என்பது துக்கம்! வேதாகமத்தில் துக்கத்திற்கான
காரணம், விவரிக்கப்பட்டிருக்கிறது.

துக்கம் ஓர் தடைக்கல்!:

1 சாமு 25:31-ஆவது வசனத்தில் “துக்கம்” என்பதற்கு “தடைக்கல்” என்பது பொருள். உண்மையாகவே நம் வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறாதபடி, துக்கம் ஓர் தடைக்கல்லாக நிற்கும்!

தேவனை மறந்தால்.

ஏசா 17:10-11 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் துக்கம் மனுஷன் தேவனைமறந்ததினால் உண்டாயிருக்கிறது.

தேவனுக்கும் துக்கம் உண்டு!

மனுஷனுடைய பாவத்தின் நிமித்தம் தேவனும் துக்கப்பட்டிருக்கிறார் (ஆதி 6:6-7; ஏசா 63.10)

மனுஷருக்கு துக்கம் வருமளவுக்கு, சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் ஒரு நம்பிக்கை உண்டாயிருக்கிறது. காரணம், வேதம் சொல்கிறது…. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; (ஏசா 53:4) – இந்த வசனம் உண்மையானால், எந்தவொரு துக்கமும் நம்மை ஆளுகை செய்யமுடியாது! செய்யக்கூடாது!

இயேசு சுமந்துவிட்ட எதையும் நாம் சுமக்கவேண்டியது அவசியமில்லையே! அப்படியானால், நாம் கிறிஸ்துவுக்குள் எந்த வகையான துக்கத்தையும் வென்றவர்கள்! சந்தோஷ வாழ்வுக்கு பாத்திரர்கள்! பரலோகத்தால் நடத்தப்படும் பாக்கியவான்களுக்கும், பூலோக துக்கத்துக்கும் துளியும் சம்மந்தமில்லை! ஆமென்!


Share this page with friends