வீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு

Share this page with friends

தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசன்னா.

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரசன்னா அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதேபோல பண்டிகை காலங்களில் தனது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் புகைப்படங்களை பிரசன்னா பதிவிடுவது வழக்கம்தான். ஆனால், நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தனது வீட்டில் அலங்கரிக்கப்பட்ட விநாயகரின் புகைப்படத்தை நடிகர் பிரசன்னா பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

நேற்று கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் தங்களது வீட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்கள். அந்த வகையில் நடிகர் பிரசன்னாவும் தனது சமூக வலைத்தளத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் வீட்டில் இருந்த விநாயகருக்கு கிறிஸ்துமஸ் தாத்தாவை போல அலங்காரம் செய்து இருந்தார் பிரசன்னா.

இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிகப்படியான விமர்சனங்கள் வரவே அந்த புகைப்படத்தை உடனடியாக நடிகர் பிரசன்னா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கினார்.

https://mobile.twitter.com/Prasanna_actor/status/1342736978253508611?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1342737461324070914%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fd-22237678672377540803.ampproject.net%2F2011252111003%2Fframe.html

https://mobile.twitter.com/Roshanbunny/status/1342762481500864513?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1342762481500864513%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-22237678672377540803.ampproject.net%2F2011252111003%2Fframe.html


Share this page with friends