சாராள் என்ற தாயே (வித்யா’வின் விண் பார்வை)

Share this page with friends

சாராள் என்ற தாயே
அன்றொரு நாள் நீ நகைத்’தாய்
நகைப்பு என்று அர்த்தம் கொள்ளும்
ஈசாக்கைப் பெற்றெடுத்’தாய்

கர்ப்பம் செத்துப்போனதைக்கூட
எண்ணாமல்,
உன்னையே கண்ணாடியில்
பார்க்காமல்,
வயதைக் கணக்குப் போடாமல்
கண்ணாடி ஏதும்
அணியாமல்,
கணவனைக் குறை சொல்லி
கோபித்துக்கொண்டு
தாய்வீட்டுக்குப் போகாமல்,
சமாளித்’தாய்

தொண்ணூறாவது வயதில்
வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட
குமாரனைப் பெற்றெடுத்’தாய்

முதிர் வயதிலும்
நீ கடினமாய் உழைத்’தாய்
தூதர்களுக்கு விருந்து வைத்தபோது
அத்தனை சீக்கிரம் எப்படி சமைத்’தாய்?

 இன்றைய தாய்க்குலம்
அம்மா மெஸ் -ஐ தேடுகிறது !
அம்மா உணவகத்தை நாடுகிறது

உன் கணவனை, அதாவது
ஆபிரகாமை,
ஆண்டவனே
என்று அழைத்’தாய்

(சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி,
அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்)
.(1 பேதுரு 3:6)

இதற்கெல்லாம் எங்கே படித்’தாய்?

இக்காலத்து சாராள்களைப் பார்த்து,
எம்மா தாயே,
உன் புருஷன் எங்கே? என்று கேட்டால்
அவனா,  U.S. ல இருக்கான்
Software ல இருக்கான்

என்னம்மா இது?

எவனெவன் தலைக்கோ
கனம்  கொடுக்கிற நீ

உனக்கு தலையாய் இருக்கிற
புருஷனையோ
அவன் இவன் என்று சொல்லுறீயே
என்று கேட்டால்

இப்பெல்லாம் அப்படிதான்
உங்க காலம் மாறி இல்ல…

வேதாகம சாராளே,

விசுவாச வீரர் பட்டியலில்
இடம்பிடித்தவளே


வீரப்பெண்மணியே

புருஷனை ஆண்டவனே என்று
அழைத்தவளே


எழுந்து வா

எங்கள் தாய்குலங்களுக்கு சொல்லித்தா

வயதானாலும் உழைத்துக்கொண்டே இரு என்று
சுறுசுறுப்பைப் பற்றி சொல்லித்தா


இரவில் நெடுநேரம் உன் புருஷனோடே
வாதம் பண்ணாதே என்று சொல்லித்தா

வலைத்தளத்தில் வழுக்கி விழுந்து
வாழ்க்கையை தொலைத்துவிடாதே  என்றும் 
சொல்லித்தா

செவ்வானம் தோன்றும் முன்பே
இருட்டோடே எழுந்துவிடு
அழகாய் உதிக்கும் ஆதவனை,
அதாவது சூரியனைக் கண்டுவிடு

அதற்கு முன்
நீதியின் சூரியனிடம்
மண்டியிட்டு உன்னை அர்பணித்துவிடு
என்றும் சொல்லித்தா

அப்பொழுது நீதியின் சூரியன்
உன்மேல் உதிக்கும்
அதின் செட்டைகளின் கீழ்
ஆரோக்கியம் இருக்கும்
நீ வெளியே புறப்பட்டுப் போய்
கொழுத்த கன்று போல வளருவாய்
என்பதை சொல்லிவிட்டுப்போ

நீ தாயோ
தாயாகப் போகிறாயோ

எனக்கு தெரியாது

உனக்கொரு தாயை
அறிமுகப்படுத்துகிறேன்

அவர் பெயர் சர்வவல்லவர் அதாவது
யெல்ஷ’தாய்
என்று பெயர்

யெல்ஷதாய் என்பதற்கு
தாயைப் போன்ற தேவன்
என்று பொருள்.
(ஆதியாகமம் 17:1)  

அவர் தாயுமானவர் அல்ல
தாயிலும் மேலானவர்

Video:

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவத்தண்ணீர் ஊழியங்கள், மதுரை -14


Share this page with friends