போப்பாண்டவரை சந்தித்த அறிஞர் அண்ணா

Share this page with friends

அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.. ஆனாலும் .. “அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்” என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.


போப்பாண்டவர் சொன்னார், “அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!” தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து “உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்” என்றார்.
“என்ன கேட்டாலும் தருவீர்களா” என்று கேட்டார் அண்ணா. “கேளுங்கள் தருகிறேன்” என்றார் போப்பாண்டவர்.


“போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்” என்று கேட்டார் அண்ணா.

சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.
போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார். ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், “யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே” என்று கேட்டார்.


“அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்” என்று சொன்னார் அன்னை இந்திரா.
நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, “நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று சொன்னார் அன்னை இந்திரா.


உடைந்து போன ரானடே, “நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்” என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.


அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர் தான் நம் அறிஞர் அண்ணா.

– முன்னாள் அமைச்சர் C பொன்னையன்
நினைவலைகள்

மக்கள் அதிகம் வாசித்தவை:

கிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது
வேளாங்கண்ணி பேராலய திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவிப்பு!
சாம்பல் புதன் மற்றும் லெந்து நாட்கள் பற்றிய உண்மைகள் Ash Wednesday
கன்னியாஸ்திரிகள் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்
பெரு நிறுவன கோட்பாடு சபைக்கு பொருந்துமா? Corporate concept in the Church?
ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ்!
தேவாலயம் திறக்க வேண்டும் ஸ்டேஷன் முன் போராட்டம்
கிறிஸ்தவர்களே உங்கள் ஒட்டுக்களை சிதறடித்து வீணாக்கி விடாதீர்கள்!
பாகிஸ்தானில் தொடரும் அவலம்; கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, மதம் மாற்றி திருமணம் செய்த 44 வயது நபர்.
கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில் - அலுவல் சாரா உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம் : திருப்பத்தூர் ...

Share this page with friends