உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

Share this page with friends

உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

5 டிசம்பர் 2021, 01:51 GMT
ரோபோ பட மூலாதாரம், GETTY IMAGES

அதைப் பற்றிய சில சுவாரசியமான அம்சங்கள்:

வெர்மான்ட் பல்கலைக்கழகம், டஃப்ட் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் விஸ் இன்ஸ்டிட்டியூட் ஃபார் பயலாஜிகலி இன்ஸ்பைர்டு இன்ஜினியரிங் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் சேர்ந்து முற்றிலும் புதுவகையான உயிரியல் மறு உற்பத்தி முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையைப் பயன்படுத்தி, முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகளை உருவாக்கியுள்ளார்கள்.

  1. தவளை செல்களில் இருந்து ஜெனோபோட் என்று அழைக்கப்படும் உயிருள்ள ரோபோட்டுகளை உருவாக்கி 2020ல் அறிவித்த விஞ்ஞானிகள் குழுதான், இப்போது இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகளை உருவாக்கியுள்ளது
  2. இந்த இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகள் கணினி உதவியால் வடிவமைக்கப்பட்டு, பிறகு பொருத்தப்பட்டவை.
  3. சிறு தட்டு ஒன்றில் நீந்திச் சென்று, நூற்றுக்கணக்கான தனித்தனி செல்களை ஒன்று திரட்டி தங்கள் வாய் பகுதியில் புதிய குழந்தை ரோபோட்டுகளை இவை உருவாக்குகின்றன.
  4. இந்த குழந்தை ரோபோட்டுகள் சில நாள்களில் வெளியே வந்து தாய் ஜெனோபோட்டுகள் போலவே நகரவும் செயல்படவும் தொடங்குகின்றன.
  5. தவளையின் கருவில் உள்ள ஸ்டெம் செல்லை எடுத்து இவற்றை முதலில் விஞ்ஞானிகள் உருவாக்கினர்.
  6. தடுப்பூசி மாதிரிகளை உருவாக்கவும், சேதமடைந்த மனித உயிரணுக்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தவுமே முதலில் விஞ்ஞானிகள் உயிருள்ள ரோபோட்டுகளை உருவாக்கினார்கள்.
  7. ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அகலமுள்ள ஜெனோபோட்டுகள் முன்பே தாமாக நீந்திச்செல்லவும், நகரவும், தங்களைத் தாங்களே குணப்படுத்திக்கொள்ளவும் கூடியதாக இருந்தன.
  8. இப்போது புதிய கண்டுபிடிப்பில் இந்த ஜெனோபோட்டுகள் இனப்பெருக்கம் செய்யக் கூடியவையாக உருவாக்கப்பட்டுள்ளன.
  9. தவளையின் ஜெனோம் இந்த ஜெனோபோட்டுகளில் இருந்தாலும் இவை தலைப்பிரட்டையாக மாறாது. தவளை இனப்பெருக்கம் செய்வது போல அல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இதுவரை அறிவியல் அறிந்த எந்த விலங்குகளோ, தாவரங்களோ இப்படி இனப்பெருக்கம் செய்வதில்லை என்கிறார் ஆராய்ச்சியின் தலைமை ஆய்வாளர் சாம் கிரீக்மேன்.
  10. முதலில் உருவாக்கப்படும் தாய் ஜெனோபோட் 3 ஆயிரம் செல்களால் ஆனது.

இனப்பெருக்க ரோபோவும் வேதாகம தீர்க்கதரிசன நிறைவேறுதலும்:

பரிசுத்த வேதாகமம் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் சொன்ன அடையாளங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருகிறது.

வெளி 13 மேலும் அந்த மிருகத்தின் உருவம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் உருவத்தை வணங்காத எல்லோரையும் கொலைசெய்வதற்காகவும், மிருகத்தின் உருவத்திற்கு சுவாசத்தைக் கொடுக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது .

அது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது.

இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை; அந்த மிருகத்தின் எண்ணைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கவேண்டும்; அது மனிதனுடைய எண்ணாக இருக்கிறது; அதினுடைய எண் அறுநூற்று அறுபத்தி ஆறு.


மக்கள் அதிகம் வாசித்தவை:

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கிறிஸ்தவர்கள் சார்பில் சேகரிக்கப்பட்ட 1.50 கோடி நிதியை  தமிழக முத...
மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து
கேரளாவில் உள்ள காலடியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் புதிய தயாரிப்புகளை இலவசமாக வழங்கி வருகிறது
அமேசான் கிறிஸ்துமஸ் விற்பனை 2020 தொடங்கியது: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களுக்கு ஆஃபர்
100 நாடுகளில் படமாகும் இயேசுவின் 12 சீடர்கள்
வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி இல்லை: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? முழு விபரம்
கிறிஸ்தவ இலக்கிய நாயகனுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் நிறுவனம் சர்வதேச விருது
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் முக்கிய தகவல்
தி பெந்தெகோஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்த இரு பிரபல போதகர்கள் விபத்தில் பலி
தட்டியும் திறக்காத பேராலய கதவு; புதிய பிஷப் காத்திருப்பு போராட்டம்!

Share this page with friends