பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்

Share this page with friends

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கொலோசையர் 3:2

மாறுகண் (வெவ்வேறு அளவிலான கண்கள்) கனவா மீன் வகை சமுத்திரத்தின் அந்தி மண்டலத்தில் வாழ்கிறது. அங்கு சூரிய ஒளி ஆழமான நீர் வழியாக குறைவாக ஊடுருவுகிறது. கணவாயின் புனைப்பெயர் அதன் இருவேறுபட்ட கண்களை குறிக்கிறது. இடது கண் காலப்போக்கில் வலது கண்ணை விட கணிசமாக பெரிதாகிறது – கிட்டத்தட்ட இரு மடங்கு பெரியது. முதுகெலும்பில்லாத உயிரிகளை படிக்கும் விஞ்ஞானிகள் கணவாய் அதன் சிறிய வலது கண்ணை இருண்ட ஆழத்தை நோக்கிப் பார்க்க பயன்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர் பெரிய இடது கண் சூரிய ஒளியை நோக்கி மேல்நோக்கி பார்க்கிறது.

நாம் தற்போதைய உலகில் வாழ்வதன் அர்த்தம் என்ன என்பது பற்றியும் “நாம் கிறிஸ்துவுடனே எழுந்ததுண்டானால்” எதிர்காலத்தின் நிச்சயம் என்ன என்பதையும் பற்றிய ஒரு சித்தரிப்பாக கணவாய் இருக்கிறது (கொலோ. 3:1). பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்தில் “மேலானவைகளையே நாடுங்கள்” என்று அவர் வலியுறுத்துகிறார். ஏனென்றால் நம் வாழ்க்கை “கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.” (வச. 2-3)

பூமியில் வசிப்பவர்கள் பரலோகத்தில் நம் வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருப்பதால் நம்முடைய தற்போதைய எதார்த்தத்தில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை குறித்து பார்க்கப் பயிற்சி அளிக்கிறோம். ஆனால் கணவாயின் இடதுகண் காலப்போக்கில் வளர்ந்து பெரியதாகவும் அதிக உணர் திறன் கொண்டதாகவும் உருவாகிறது. அதேபோல ஆவிக்குரிய உலகில் தேவன் செயல்படும் வழிகளைப் பற்றிய விழிப்புணர்வில் நாமும் வளர்கிறோம். இயேசுவில் உயிரோடு இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் நாம் “மேலே” பார்க்கும் போது நம் கண்கள் அதை மேலும் மேலும் பார்க்கத் தொடங்கும்.

பரலோக விஷயங்களில் உங்கள் மனதை அமைத்துக்கொள்ளுங்கள்.

நேசிக்கிற கடவுளே, என் மனத்தையும் என் இருதயத்தையும் உமக்கு உரிய காரியங்களில் நிலைப்படுத்த எனக்கு உதவும்.


Share this page with friends