பிரசங்க குறிப்பு: ஆடுகள்

Share this page with friends

என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்கு பின் செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் ஒருகாலும் கெட்டு போவதில்லை. ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதில்லை. யோவா : 10 : 27 , 28, சங் : 100 : 3 , 79 : 13, சங் : 95 : 7.

நாம் தேவனுடைய ஆடுகள். விசுவாசிகளை ஆடுகளுக்கு ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கிறது. நாம் எப்படிப்பட்ட ஆடுகள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நாம் காணமல் போன ஆடுகளா ? அல்லது மந்தையில் சேர்க்கப்பட்ட ஆடுகளா என்பதை கவனித்துக் பாருங்கள். இயேசுவே நமக்கு நல்ல மேய்ப்பர். நாம் அவரது மேய்ச்சலின் ஆடுகள். தேவன் நம்மை என் ஆடுகள் என்று உரிமையோடு அழைக்கிறார். அவருடைய ஆடுகள் எப்படியிருக்க வேண்டும்மென்பதை நாம் சிந்திக்கலாம். நாம் எப்படிப்பட்ட ஆடுகள் ?

  1. மீட்கப்பட்ட ஆடு. ஏசா : 53 : 5,6, சங் : 119 : 176, லூக்கா : 15 : 4-7 நீங்கள் காணமல் போன ஆடா ? அல்லது மீட்கப்பட்ட ஆடா சிந்தித்து பாருங்கள் மீட்கப்பட்டிருந்தால் மிகுந்த சந்தோஷம் உண்டு.
  2. தொழுவத்தில் உள்ள ஆடு. யோவா : 10 : 16, எசே : 34 : 14 — 16, ஏசா : 65 : 10 தொழுவம் என்பது தேவனது சபைக்கு அடையாளம். வாரம் ஒரு சபைக்கு சென்றால் ஆசீர்வாதமில்லை. எரே : 50 : 6,7
  3. மேய்ப்பனை உடைய ஆடு. சங் : 77 : 20, யோவா : 21 : 16, அப் : 20 : 28, எபி : 13 : 17
  4. மேய்ச்சலை அடையும் ஆடு சங் : 23 : 2, மீகா : 7 : 14, மல்கி : 4 : 2 , 3, யோவா : 10 : 27 , 4 நாம் மேய்ச்சலின் ஆடுகள்.
  5. பெருகுகிற ஆடு சங் : 144 : 13, யோபு : 39 : 1, உன் : 4 : 1 ஆடுகள் பெருகுவதை போல என் ஜனங்கள் பெருகவேண்டும். ஆதி : 1 : 28 , 9 : 1 , 7, யாத் : 1 : 7 , 12, உபா : 1 : 10 , 11
  6. பிரயோஜனமுள்ள ஆடு. நீதி : 27 : 26 , 27, 1 கொரி : 9 : 7, பிலேமோன் : 11 நீங்களும் நானும் தேவனுடைய பார்வையில் பிரயோஜனமுள்ள ஆடுகள்.
  7. ஓநாய்களுக்குள்ளே செல்கிற ஆடுகள் மத் : 10 : 16-26, அப் : 8 : 32.

நாம் எப்படிப்பட்ட ஆடுகளாயிருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நீங்களும் நானும் அவருடைய மந்தையில் சேர்க்கப் பட்ட ஆடுகள் என்பதை மறந்து போய்விடக் கூடாது. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காக்கக்கடவர்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends