பிரசங்க குறிப்பு: உண்டு

Share this page with friends

எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறை வேற்றுவார். இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.

இந்தக் குறிப்பில் உண்டு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த செய்தியை கவனிக்கலாம். உண்டு என்றால் உறுதியை குறிக்கும் வார்த்தை உண்டு என்றால் உண்டு தான் அது நிச்சயமாய் நடக்கும் அல்லது நிறைவேறும். உண்டு என்ற வார்த்தையின் சத்தியத்தை கவனிக்கலாம். உண்டு என்பது உறுதியான நிச்சயங்கள் இது நடக்காமல் போகாது. இவை உறுதியானது.

  1. உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. யோவான் : 16 : 33

என்னிடத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்கு சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்
யோவா : 16 : 33
1 தெச : 3 : 3
அப் : 20 : 23 , 24 , 14 : 22
2 கொரி : 4 : 17
வெளி : 2 : 10

  1. இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு. சங் : 125 : 5

தங்கள் கோணலாக வழிகளுக்குச் சாய்கிற வர்களைக் கர்த்தர் அக்கிரமகாரரோடே போகப்பண்ணுவார் இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
சங் : 125 : 5
யோவா : 16 : 33
யோவா : 14 : 27 , 20 : 19

  1. நிச்சயமாகவே முடிவு உண்டு. நீதி : 23 : 18

நிச்சயமாகவே முடிவு உண்டு. உன் நம்பிக்கை வீண் போகாது.
நீதி : 23 : 18
எரே : 29 : 11

  1. கர்த்தரிடத்தில் மன்னிப்பு உண்டு. சங் : 130 : 4 , 7

உமக்கு பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
சங் : 130 : 4 , 7 , 32 : 5
ஏசாயா : 55 : 7
மத் : 18 : 21 , 23.

  1. பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. யோவா : 14 : 1 — 3

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்தில் விசுவாசமாயிருங்கள்.

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்கு சொல்லியிருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயுத்தம்பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயுத்தம்பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன்.
யோவா : 14 : 1 — 3

இவ்வுலகில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு அதன் மூலமாக நற்குணங்கள் உருவாகும். உங்களுக்கு சமாதானம் உண்டு, உங்களை வருத்திக் கொண்டிருக்கும் காரியங்களுக்கு ஒரு முடிவு உண்டு உங்களுக்கு பாவ மன்னிப்பாகிய மீட்பு உண்டு. உங்கள் அக்கிரமங்களுக்கு மன்னிப்பும் உண்டு. உங்களுக்காக தேவன் ஆயுத்தப்பண்ணிக் கொண்டிருக்கும் வாசஸ்தலங்களில் பிரவேசிக்கும் சிலாக்கியமும் உண்டு. அவைகள் நிச்சியமானவைகள் , உறுதியும் உண்மையுமானவைகள்

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends