பிரசங்க குறிப்பு: ஆரோக்கிய வாழ்வு

Share this page with friends

பிரசங்க குறிப்பு: ஆரோக்கிய வாழ்வு

நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி , உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர்சொல்லுகிறார்எரே : 30 : 17

இந்த காலக்கட்டத்தில் மிக சிறந்த வாழ்வு ஆரோக்கிய வாழ்வு.ஆனால் இப்போது கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாயிருக்கிறார்கள்.
ஆரோக்கியத்தை இழந்து பலர் மரித்து போய்விட்டார்கள். இன்று அவசியமான ஒன்று ஆரோக்கியம். ஜனங்கள் COVID – 19 இதிலிருந்து தப்பி  ஆரோக்கியமாக வாழ விரும்புகிறார்கள். அதுபோல ஆரோக்கியதிற்கு தடுப்பு மருந்துகளையும் தடுப்பு ஊசிகளையும் ஜனங்களுக்கு விழிப்புணர்வு தரப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு தேவனுடைய வார்த்தைசரீரத்திற்கு மாத்திரம் அல்ல , ஆத்துமாவிற்கும் ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது.ஆரோக்கிய வாழ்விற்கு நல்மருந்தான தேவவார்த்தையை நாம் சிந்திக்கலாம்.

ஆரோக்கியத்திற்கான நல்மருந்து

வேதபாடம் :
தீமோத்தேயு & தீத்துவின் நிருபம்

  1. தேவனை விசுவாசித்து வாழ்வது ஆரோக்கியமானது தீத்து : 1 : 14
  1. தேவனுடைய ஆலோசனையை கேட்டு வாழ்வது ஆரோக்கியமானது – தீத்து : 1 : 9
  1. தேவனுடைய வசனத்தின்படி வாழ்வது ஆரோக்கியமானது  – 1 தீமோ : 6 : 3
  1. தேவனுடைய உபதேசத்திற்கு கீழ்படிந்து வாழ்வது ஆரோக்கியமானது 1 தீமோ : 1 : 12
  1. தேவ பக்தியோடு வாழ்வது முதிர்வயதிலும் ஆரோக்கியமானது
    தீத்து : 2 : 2
  1. தேவ தயவில் வாழ்வது குறைவற்ற ஆரோக்கியமானது
    தீத்து : 2 : 8

இந்த ஆரோக்கிய மருந்தாயிருக்கிற இந்த வசனங்களை அசட்டை செய்வது ஆத்துமாவிற்கு அபாயகரமானது

1 தீமோ : 6 : 3 , 4
2 தீமோ : 4 : 3 , 4

இந்த நாட்களில் ஆரோக்கியமான வாழ்வுக்கு நாம் செய்ய வேண்டியவைகளைக் குறித்து இந்த குறிப்பில் நாம் சிந்தித்தோம். இவை தொற்று வியாதி போன்றவை வருவதற்கு முன்பாகவும் ,
இனியும் வாழவேண்டிய ஆரோக்கியமான வாழ்வு. தொடர்ந்து நமக்கு எல்லா வியாதிகளையும் அழித்துநமக்கு ஆரோக்கியம் வரபண்ணுவார். பொல்லாப்பு உனக்கு நேரிடாது , வாதை உன் கூடாரத்தை அனுகாது. கர்த்தருக்கு மகிமை
உண்டாவதாக.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends