பிரசங்க குறிப்பு: பிராதன ஆசாரியர்

Share this page with friends

இப்படியிருக்க பரம அழைப்புக்கு பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கை பண்ணுகிற அப்போஸ்தலரும் பிராதன ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவை கவனித்துக் பாருங்கள். எபி : 3 : 1

இந்த வேத வசனத்தில் கிறிஸ்து இயேசுவை கவனித்துக் பாருங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்து இயேசுவை நாம் ஒவ்வொரு நாளும் அவரை கவனித்துப் பார்த்து அவரிடத்தில் நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு யார் ? அவர்தான் நமக்கு கொடுக்கப்பட்ட பிராதன ஆசாரியர் அந்த பிராதன ஆசாரியர் எப்படிப்பட்ட பிரதான ஆசாரியர் என்பதை இந்தக் குறிப்பில் அறிந்துக் கொள்வோம்.

  1. கிறிஸ்து இயேசு பிராதன ஆசாரியர். எபி : 3 : 1
  2. கிறிஸ்து இயேசு இரக்கமுள்ள உண்மையுள்ள பிராதன ஆசாரியர். எபி : 2 : 17
  3. கிறிஸ்து இயேசு பாவமில்லாத பிரதான ஆசாரியர். எபி : 7 : 26
  4. கிறிஸ்து இயேசு பாவமில்லாத பரிதபிக்கிற பிராதன ஆசாரியர். எபி : 4 : 15
  5. கிறிஸ்து இயேசு பரிந்து பேசுகிற பிராதன ஆசாரியர். எபி : 7 : 25
  6. கிறிஸ்து இயேசு மகா பிரதான ஆசாரியர். எபி : 4 : 14
  7. கிறிஸ்து இயேசு நித்திய பிரதான ஆசாரியர். எபி : 6 : 20
  8. கிறிஸ்து இயேசு ஒரே தரம் பலியான பிரதான ஆசாரியர். எபி : 7 : 28
  9. கிறிஸ்து இயேசு உயர்த்தப்பட்ட பிரதான ஆசாரியர். எபி : 5 : 5

கிறிஸ்து இயேசுவை கவனித்துக் பாருங்கள். அவர் நமக்கு பிராதன ஆசாரியர். அவர் நமக்கு எப்படிப்பட்ட பிரதான ஆசாரியர் என்பதை இந்தக் குறிப்பில் தெரிந்துக் கொண்டோம் கிறிஸ்து இயேசுவை கவனித்துப்பார்த்து அவரைக் குறித்து வெளிப்பாட்டை அறிந்து கொள்வது நமக்கு நலம் பயக்கும். கிறிஸ்து இயேசு எப்படிப்பட்டவர் என்ற வெளிப்பாட்டை அறிந்து அவரை ஜனங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் அதுதான் ஊழியம். அவர்கள்தான் கிறிஸ்துவின் ஊழியர்கள். கிறிஸ்து இயேசுவை கவனித்து பார்த்து அந்த பிரதான ஆசாரியரை ஜனங்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அவரை அறிகின்ற அறிவில் ஜனங்கள் வளரவேண்டும். இவரே நமக்கு கொடுக்கப்பட்ட பிரதான ஆசாரியர்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends