பிரசங்க குறிப்பு: ஆவியானவர்

Share this page with friends

கர்த்தருடைய ஆவியானவர் என்னை கொண்டு பேசினார். அவருடைய வசனம் என் நாவில் இருந்தது. 2 சாமு : 23 : 2

இந்த குறிப்பில் ஆவியானவருடைய கிரியைகளைக் குறித்தும் ஆவியானவரின் செயல்பாடுகளைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.

1. ஆவியானவர் அவர் ஞானத்தின் ஆவியாய் இருக்கிறார். ஏசாயா : 11 : 2, ஏசாயா : 40 : 13 , 14

2. ஆவியானவர் தேவனுடைய காரியங்களை வெளிப்படுத்துகிறார். 1 கொரி : 10 : 13

3. ஆவியானவர் கிறிஸ்துவினுடைய காரியங்களை அவர் வெளிப்படுத்துகிறார். யோவா : 16 : 14

4. ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் வழி நடத்துகிறார். யோவா : 14 : 26, யோவா : 16 : 13

5. ஆவியானவர் ஊழியர்களை போதிக்க வல்லவர்களாக்குகிறார். 1 கொரி : 12 : 8

6. ஆவியானவர் உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு மறுமொழி கொடுக்க பரிசுத்தவான்களுக்கு போதிக்கிறார். மாற்கு : 13 : 11, லூக்கா : 12 : 12

7. ஆவியானவர் தெய்வீக வழிகளில் வழிநடத்துகிறார். ஏசா : 30 : 21, எசே : 36 : 27

8. ஆவியானவர் கிறிஸ்துவின் வார்த்தைகளை நினைவுக்கு கொண்டுவருகிறார். யோவா : 14 : 26

இந்த குறிப்பில் ஆவியானவருடைய செயல்பாடுகளைக் குறித்து அறிந்துக் கொண்டோம்.
ஆவியானவர் உங்களை வசனங்களை நினைவுபடுத்தி பேசவைக்கிறவர். உங்கள் ஊழியத்தில் ஆவியானவருடைய செயல்பாடுகளோடு ஊழியம் செய்கிறீர்களா ஆவியானவருடைய அபிஷேகம் ஊழியத்தில் செயல்படுகிறதா என்று ஆராய்ந்து பாருங்கள். ஆவியானவர் உங்கள் ஊழியத்தை நடத்துகிறார் என்ற உறுதி உங்களுக்குள் காணப்படுகிறதா உங்கள் ஊழியம் அபிஷேக ஊழியமாக இருப்பதாக , உங்கள் ஊழியத்தை ஆவியானவருக்கு முற்றிலும் அர்பனியுங்கள். அப்போது உங்கள் ஊழியம் ஆவியானவர் ஆளுகை ஊழியமாக மாறும். ஆவியானவர் உங்கள் ஊழியத்தில் கிரியை செய்வார்

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends