பிரசங்க குறிப்பு : திறப்பில் நின்றவர்கள்

Share this page with friends

நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலேநிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாகஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். எசே : 22 ; 30

வேதத்திலே திறப்பிலே நின்றவர்கள் யார் யாரென்றும் , திறப்பிலே நின்றதன் நோக்கத்தையும் இந்த குறிப்பில் அறிந்துக் கொள்வோம். திறப்பிலே நின்றவர்கள் தேவனுக்காகவும் , தேசத்திற்காகவும் , திறப்பினிலே நின்று பெரிய காரியங்களை செய்தவர்கள். நாமும் இவர்களைப்போல திறப்பிலே நின்று பெரிய காரியங்களை செய்வோம். திறப்பிலே நின்றவர்கள் யாரென்று இந்தக் குறிப்பில் கவனிக்கலாம்.

 1. அழிந்துபோகிற ஆத்துமாக்களுக்காக திறப்பிலே நின்ற ஆபிரகாம் ஆதி : 18 : 22 , 23
 2. தேவனுடைய உக்கிர கோபத்தை தனிக்கவும் , தேசத்திற்காக தேவனிடத்தில் கெஞ்சிபரிந்துபேசின மோசே. யாத் : 32 : 12 , 14, சங் : 106 : 23
 3. தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட தரிசனத்திற்காக திறப்பிலே நின்ற. யோசுவா : 4 : 19. 28
 4. கிராமங்கள் பாழாய் போகாதபடிக்கு எழும்பி திறப்பிலே நின்ற தெபொராள் நியாயா : 5 : 7
 5. சபைகளில் சோர்ந்து காணப்படுகிறவரை பராக்கிரமசாலிகளாக உற்சாகப்படுத்தி எழும்பி திறப்பிலே நின்ற கிதியோன் நியா : 4 : 12 – 14
 6. ஜனங்களுக்காக தேவனிடத்தில் பரிந்து பேசி ஜெபிக்காமல் இருந்தால் பாவம் என்று திறப்பிலே நின்ற சாமுவேல். 1 சாமு : 12 : 23
 7. கர்த்தரே தெய்வம் என்று எழுப்புதலுக் காக திறப்பிலே நின் எலியா. 1 இராஜா : 18 : 36 , 37
 8. இரட்டிப்பான வல்ல மையோடு எழும்பி நின்ற எலிசா. 2 இராஜா : 6 : 12
 9. தேசத்தை கட்டி எழுப்ப திறப்பிலே நின்ற நெகேமியா. தெற்கே : 2 : 20
 10. தன்னுடைய இனத்தின் அழிவை சகிக்கமாட்டாமல் திறப்பிலேநின்ற எஸ்தர் எஸ் : 8 : 6
 11. யாரை நான் அனுப்புவேன் யார் என் காரியமாக போவார் என்ற தேவ சத்தத்தை கேட்டு திறப்பிலே நின்று என்னை அனுப்பும் என்ற ஏசாய்யா. ஏசாயா : 6 : 8
 12. இரவும் பகலும் கண்ணீர்விட்டு திறப்பிலே நின்று அழுத எரோமிய. எரோ : 9 : 1
 13. தேவனுடைய சுவிசேஷத்தை அறிவிப்பதில் வைராக்கியமாக திறப்பிலே நின்ற ஸ்தேவான. அப் : 7 : 55-60
 14. சபைகளை ஸ்தாபித்து ஐந்துவித ஊழியத்தை செய்து சபைகளுக்காக திறப்பிலே நின்ற பவுல். அப் : 9 : 6 , 13 : 1
 15. ஊழியர்களைக் குறித்து தேவ சித்தத்தை அறிந்து முன்னறிவிக்கிற வல்லமையான திறப்பிலே நின்ற அகபு அப் : 11 : 28

வேதத்திலே திறப்பிலே நின்றவர்கள் யார் யாரென்பவர்களைக் குறித்தும் திறப்பிலே நின்ற நோக்கத்தைக் குறித்தும் இந்தக் குறிப்பில் சிந்தித்தோம் நாமும் இவர்களைப் போல தேசத்திற்காகவும் தேசங்களில் உள்ள ஊழியங்களுக்காகவும் ஜனங்களுக்காகவும் திறப்பிலே நின்று ஜெப வீரர்களாக வீராங்கனைகளாக காணப்படுவோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends