அவனும் தெய்வமானான்

பிரசங்க குறிப்பு : கிருபை அன்பு ஐக்கியம்

Share this page with friends

பிரசங்க குறிப்பு : கிருபை அன்பு ஐக்கியம்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக, ஆமென் ” 2 கொரி : 13 : 14.

இந்த வசனத்தை எல்லோரும் அறிவோம். சபையிலே பாஸ்டர் இந்த வசனத்தை எப்போது சொல்வார் என்று அனைவரும் ஏக்கத்தோடு இருப்பார்கள் சபை முடிவின் போது இந்த வசனத்தை சொல்வார்கள். இதில் நாம் கிருபையைக் குறித்து கவனிக்கலாம். கிருபை இருந்தால்தான் நாம் தேவனை ஆராதிக்க முடியும். இயேசுவின் கிருபையைப்பற்றி நாம் சிந்திக்கலாம்.

1. நிர்மூலமாகாமல் காக்கும் கிருபை ( புலம்பல் : 3 : 22 )

2. விலகாத கிருபை ( ஏசாயா : 54 : 10 )

3. தேற்றும் கிருபை ( சங் : 119 : 76 )

4. தயவு கிடைக்கச்செய்யும் கிருபை ( ஆதி : 39 : 21 )

5. பலவீனத்தில் தாங்கும் கிருபை ( 2 கொரி : 12 : 9 )

6. ஊழியத்தில் கர்த்தருடைய தயவை பெற்று தரும் கிருபை ( யாத் : 33 : 19 )

7. தாங்குகிற கிருபை ( சங் : 94 : 18 )

இயேசுவின் கிருபை எப்படிப்பட்டது என்பதை இந்தக் குறிப்பில் கவனித்தோம். பவுல் நிருபத்தில் தேவன் எனக்களித்த கிருபை என்று பல இடங்களில்
எழுதியுள்ளான். கிறிஸ்துவின் கிருபையை நம்பி ஊழியம் செய்தவன் பவுல். பவுலுக்கு அளித்த அத்தனை கிருபைகளும் இயேசு உங்களுக்கும் கொடுப்பாராக. பவுலின் தேவன் நம்முடைய தேவன். கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக !

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends