யோனத்தானும், தாவீதும் உயிர் நண்பர்களாக இருந்தார்கள். அவன் தன்னைப் போலவே தாவீதையும் நேசித்தான்.

சவுல் அன்று முதல் தாவீதை தன்னோடு வைத்துக் கொண்டான். யோனத்தான் தாவீதை அதிகம் நேசித்து, தன் சால்வை, வஸ்திரம், பட்டயம், வில் எல்லாவற்றையும் தாவீதுக்குக் கொடுத்தான்.

தாவீதும் எந்த இடத்திற்கு போனாலும் ஞானமாய் காரியங்களை செய்து வந்தான். எனவே அவனை அதிகாரியாக்கினான்.

தாவீது பெலிஸ்தனைக் கொன்று வெற்றியோடு, திரும்பி வரும் போதும், சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று பாடினார்கள்.

அதைக் கேட்டதும் சவுல் தாவீதின் மேல் எரிச்சல் அடைந்து தாவீதை பொறாமையோடு பார்க்க ஆரம்பித்தான்.

அன்று முதல் தாவீதை நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தான். தாவீதை சுவரோடு சேர்த்து குத்திப் போட ஈட்டியை அவன் மேல் எறிந்தான்.

ஆனால் அவன் அதுக்கு தப்புவிக்கப்பட்டான். கர்த்தர் தாவீதோடு இருக்கிறார் என்பதை சவுல் கண்டு, தாவீதுக்கு பயந்து அவனை தன்னைவிட்டு விலக்கி, ஆயிரம் பேருக்கு அதிபதியாக வைத்தான்.

தாவீது எல்லாவற்றிலும் புத்திமானாய் நடந்து கொண்டதால் கர்த்தர் அவனோடு கூட இருந்தார் (1 சாமுவேல் 18:1-8).

அன்பான நண்பர்களே! தாவீதோடு கர்த்தர் இருந்ததினால் தான் சவுல் அவனுக்கு விரோதமாய் எழும்பின போதும், கர்த்தர் அவன் கைக்கு நீங்கலாக்கி பாதுகாத்தார்.

இன்றும் உங்களுக்கு விரோதமாக பொறாமைப்பட்டு யார் எழும்பினாலும் கர்த்தர் உங்களோடு இருந்தால் எல்லா தீங்கிற்கும் உங்களை விலக்கிக் காப்பார்! ஆமென்

நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். (#ஆமோஸ் 5:14)