Today I am going to send you a Jew

நாம் பேசும் வார்த்தைகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும்

1) சுருக்கமான வார்த்தையாக இருக்க வேண்டும் (வளவள என்று பேச கூடாது) – பிரச 5:2

2) மற்றவர்களை பெலப்படுத்தும் வார்த்தைகளை பேச வேண்டும் – யோபு 4:4

3) நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் – எபேசி 4:29

4) மற்றவர்களுக்கு பிரயோஜனமான வார்த்தைகளை பேச வேண்டும் – எபேசி 4:29

5) ஜிவ வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு ஜிவனை (உயிரை) கொடுக்கும் வார்த்தை) – நீதி 10:11

6) இன்பமான வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு இன்பத்தை தரக்கூடிய வார்த்தைகளை) – ஆதி 49:21

7) கிருபை உள்ள வார்த்தைகளை பேச வேண்டும் – கொ 4:6

8) உப்பால் சாரம் ஏறிய வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு ருசி கொடுக்கும் வார்த்தை) – கொ 4:6

9) அறிவுள்ள வார்த்தைகளை பேச வேண்டும் – நீதி 15:2

10) மற்றவர்களுக்கு பக்தி விருத்தி உண்டாக்கும் வார்த்தைகளை பேச வேண்டும் – எபேசி 4:29

11) மற்றவர்கள் துக்கத்தை மாற்றும் வார்த்தைகளை பேச வேண்டும் – யோபு 16:5

12) மற்றவர்களை திடப்படுத்துகிற (தைரியப்படுத்துகிற) வார்த்தைகளை பேச வேண்டும் – யோபு 16:5

13) செம்மையான வார்த்தைகளை பேச வேண்டும் – யோபு 6:25

14) தேவனுக்கு பிரியமானதை பேச வேண்டும் (நாம் பேசும் பேச்சு தேவனுக்கு பிரியமானதாக இருக்க வேண்டும்) – சங் 19:14

15) நலமானதை பேச வேண்டும் – மத் 12:34

16) ஆரோக்கியமான வார்த்தைகளை பேச வேண்டும் – நீதி 15:14

17) நன்மையே பேச வேண்டும் – ஆதி 31:24

18) மெதுவான பதில் – நீதி 15:1