1. மற்ற மதங்களில் மிருக மற்றும் பட்சி அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும், அதே நேரத்தில் சொல்லப்பட்ட மனித அவதாரங்கள் வில்லு, ஈட்டி, பட்டயம், அம்பு, கொம்பு கொண்ட கற்பனைக்கு ஒவ்வாத, நிஜத்தில் எதிர்பார்க்க முடியாத பயமுறுத்தும் அவதார சிக்கல்கள் மற்றும் ஒன்றுக்கு ஒன்று அவதார முரண்பாடுகள் கொண்ட ஆவதாரங்களாகவே சித்தரிக்கப்படுகிறது.

ஆனால் கிறிஸ்துவின் அவதாரம் எளிமையாக அதே நேரத்தில் வல்லமை உள்ளவராக எந்த பயமுறுத்தும் தோற்றம் இல்லாதவராக வந்து நமக்குள்ளே வாசம் செய்து தம்மை மனித குல இரச்சகராக வெளிப்படுத்தினார். மனித இரச்சிப்பு மனித தன்மையில் வெளிப்படுத்த பட வேண்டும்.

2. மற்ற மதத்தில் வீரம், போர், மிரட்டுதல், வசைபாடுதல், பயமுருதுத்தல், தந்திரங்கள், மந்திரங்கள், பிறரை காயப்படுத்தி கொல்லுதல், ஒரு சாராரை சார்ந்து வரம்பு மீறி செயல்பட்டு தான் தங்களை அவதாரமாக வெளிப்படுத்தினார்கள். இங்கு அவதார குணநலன்களில் இருக்கும் சிக்கல்கள் தான் அதிகம்

ஆனால் கிறிஸ்துவின் மார்க்கமோ, சாந்தமுடியவராக, நன்மை செய்கிரவராக, சுகம் கொடுக்கிறவராக, மன்னிக்கிறவராக, நற்போதனை கொடுக்கிறவறாக சுற்றி திரிந்து தம்மை வெளிப்படுத்தினார்.

3. மற்ற மதத்தில் ஒரு சாராரை சார்ந்து நின்று அவர்கள் வளர்ச்சி, அவர்கள் உயர்வு, அவர்கள் முக்கியமானவர்கள் என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, மற்றவர்களை பகைத்து, கொலைவெரியை தூண்டி விட்டு, சமூக நல்லிணக்கத்தை கெடுத்து, பிறரை எப்போதும் ஒரு பகையாளியை போன்று மிகைப்படுத்தி தங்களை ஒரு ஜாம்பவானாக காட்டுவதற்கு வெளிபடுத்த பட்ட சமூகத்திற்கு ஒத்து வராத, நல்லிணக்க கண்ணியத்தை கொண்டிராத அவதாரங்கள் தான் அதிகம். அப்படி அவர்களோடு இணைந்து நிற்றால் அடிமையை போல பாவிக்கும் வீம்புகார ஆவதாரங்கள் தான் அதிகம். இங்கு அவதார நோக்கங்களே சரியில்லை

ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் எல்லாருக்கும் ஒளியாக வெளிச்சம் கொடுக்க, எல்லாரும் ரச்சிக்க பட எல்லாருக்கும் வாழ்வியல் மாதிரியாக வாழ்ந்து உலகில் மையப்பகுதியில் சமாதானம் சந்தோசம் எளிமையை, தாழ்மை என்னும் எதார்த்தத்தை புரிய வைக்க வந்தவர் தான் எம்பெருமான் இயேசு கிறிஸ்து.

4. மற்ற மதத்தில் தங்களை ஜாம்பவான்கள் என்று நீருபிப்பத்தற்கு பலிகள், பூஜைகள், நரபலிகள், யாகங்கள், மந்திரங்கள், தந்திரங்கள் செய்து பிற இரத்தம் சிந்தி தங்களை ஸ்தாபிக்க பிறரை அல்லது பிற உயிர்களை தங்களுக்கு தேவையான பட்சத்தில் கொன்று தங்கள் சுயநலத்தை மையமாக கொண்டு வாழும் சுயநல ஆவதாரங்கல் தான் எறாளம். இங்கு வழிபாட்டு ஏற்றத்தாழ்வுகள் அதிகம். அவர்கள் புத்தகங்களும் அவைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது.

ஆனால் கிறிஸ்துவின் மார்க்கமோ தன்னை தான் வெறுமையாக மாற்றி, சுய நலத்தை வெறுத்து, அவமானம், பாரியாசம் தாங்கி, அன்பின் அடிப்படையில், சாமதனம் செய்து தனது சொந்த இரத்தத்தை சிந்தி முழு உலக மாந்தரை மீட்கும் பாவ பரிகாரி ஆகி எல்லார் பாவத்தை சுமந்து தீர்த்த சர்வ வல்லமை படைத்தவர் தான் இந்த இயேசு கிறிஸ்து.

5. மற்ற மதங்களில் மதம் என்கிற பதத்தின் அடிப்படையில் மத மாற்றம் என்கிற பெயரில் வற்புறுத்தி, வலுக்கட்டாயமாக, துன்புறுத்தி, பிறரை கொன்று குவித்த, பட்டய பயிற்சி, வாள் பயிற்சி, இராணுவ மிரட்டல்கள், சிந்திக்க விடாமல், மனரீதியாக தாக்குதல்கள் கொடுத்து, தார்மீக சிந்தனை, பொதுநலம் இல்லாத வழிகளில் தான் மதம் மாற்றம் நடக்கிறது. இங்கு மத பிரச்சாரமே வன்முறையில் இருக்கும் பொழுது மனமாற்றம் எப்படி எதிர்பார்க்க முடியும்

ஆனால் கிறிஸ்து மார்க்கத்தில் விசுவாசம், நம்பிக்கை, அறிவு, அன்பின் அடிப்படையில் சுவிசேஷம் அறிவித்து, இங்கு இருக்கும் நற்காரியங்கள் அறிவித்து, எம்மிடம் உள்ளதை கொடுத்து கிறிஸ்துவை வெளிப்படுத்தும் அற்புதமான ஒரு மார்க்கம் தான் இந்த கிறிஸ்தவ மார்க்கம். அதனால் தான் கிறிஸ்தவம் போகும் இடத்தில் அன்பு இல்லாதார் அன்பு பெறுகிறார்கள், வாழ்வில் நம்பிக்கை பெறுகிறார்கள், பிறரோடு சமாதானம் செய்கின்றார்கள், தொண்டு செய்கிறார்கள், கல்வி, அறிவியல், மருத்துவம், தொழில், விவசாயம் போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனெனில் இங்கு மனித மனமாற்றம் முக்கியம்

6. மற்ற மதத்தில் பாரம்பரியங்கள், வழிபாட்டு ஆச்சாரங்கள், வெளிதோற்ற சுத்திகரிப்பு, சிலை வழிபாடு, சிலை மற்றும் கோபுர அபிசேசகம், என்று சொல்லி உயிருள்ள மனிதனை விட, மனிதனுக்கு பயன்படும் அத்தியாவசிய பொருட்களை விரயம் செய்யும் அற்ப ஆராதனைகள் தான் ஏறாளம். குறிப்பிட இடம், குறிப்பிட்ட மந்திரம், குறிப்பிட ஜாதி என்று சொல்லி வீணான ஆராதனைகள் தான் ஏராளம். இங்கு ஆராதனை குழப்பங்கள் அதிகம்

ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் ஆவியோடும், உண்மையோடும், சத்தியத்தொட்டும் ஆரத்திக்கும் ஆராதனை தான் வலியுறுத்த ஓடுகிறது. அன்பின் அடிப்படை தான் இங்கு ஆராதனையில் இருக்கும் பக்தி. பரிசுத்தம் தான் இங்கு அடிப்படை. இங்கு இருந்து கிறிஸ்துவின் நாமத்தில் யார் கூப்பிட்டாலும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சேவிகொடுக்கும் ஒரே கர்த்தர் தான் இந்த இயேசு கிறிஸ்து. இவர் மாம்சமான எல்லாருக்கும் கர்த்தர் தான்

7. மற்ற மார்க்கத்தில் மரணத்திற்கு பின்னர் ஏற்றத்தாழ்வு உள்ள வாழ்வு அறிவிக்கப்படுகிறது. கிரியைகள் தான் அவர்களை உயர்த்துகிறது என்று கற்பிக்க படுகிறது. சமநிலை யற்ற நம்பிக்கை, தெளிவு இல்லாத மரணத்திற்கு பின்னர் உள்ள நம்பிக்கை, இங்கு உள்ள பல தெய்வங்களில் உள்ள எதிர்கால திட்டமின்மை, எப்படி மரணத்திற்கு பின்னர் இருப்போம் என்கிற தெளிவின்மை நம்பிக்கையற்ற ஒரு எதிர்கால வாழ்வையே அளிக்கிறது.

ஆனால் கிறிஸ்தவ மார்க்கம் நமக்கு கிறிஸ்துவை போல இருப்போம், அவரோடு ஆளுகை செய்வோம், பாவமில்லாத ஒரு ஆளுகை, சாமாதனம் உள்ள ஒரு வாழ்வு, கண்ணீர் கவலை இல்லாத ஒரு வாழ்வு, மற்றும் மரணத்திற்கு பின்னர் ஒரு நியாயத்தீர்ப்பு, பூமியில் செய்த எல்லா கிரியைகளுக்கும் ஒரு நித்திய தீர்ப்பு உண்டு என்கிற வாழ்வை ஜாக்கிரதை ஏற்படுத்தும், நம்பிக்கை கொடுக்கும் ஒரு நல்ல நம்பிக்கையை கொடுக்கிறது. அவர் வாழ்வதால் நாமும் வாழ்கிறோம் என்கிற நம்பிக்கை தான் இங்கு பிரதானம்.

இயேசுவை போல யாரும் இங்கு இல்லையே! அவர் ஆயிரங்களில் பதினாயிரங்களில் சிறந்தவர். அவர் பரிசுத்தர். அவர் சர்வ வல்லமை உள்ளவர். அவர் சீக்கிரம் ஆளுகை செய்ய பூமியை நிதானத்தோடு நியாயம் தீர்க்க வருகிறார். கிறிஸ்தவம் என்றும் தனித்தே நிற்கும் காரணம் இது விலையேற பெற்ற தங்கம் இது களிமண்ணில் கலப்பது இல்லை.

செலின்