கர்த்தருக்கு பிரியமான கோரேஸ்

கர்த்தருக்கு பிரியமான கோரேஸ்

கர்த்தருக்கு பிரியமான கோரேஸ் ஏசாயா 44: 28, 45: 1 – 4

யார் இந்த கோரேஸ்?

இவன் பெர்சியா ராஜ்யத்தை ஸ்தாபித்த ராஜா. இவன் யூதன் அல்ல. கர்த்தர் இவனை குறித்து கோரேஸ் என் மேய்ப்பன் என்கிறார். 2 . எருசலேம் ஆலயத்தை கட்ட , கர்த்தருக்கு பிரியமானதை எல்லாம் நிறைவேற்றுவான் என கர்த்தரால் நம்பப்பட்டவன். 3. கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவன். 4. புறஜாதியான கோரேஸின் வலது கையை பிடித்து, கர்த்தர் அவனோடு பேசுகிறார். 5. அவனுக்கு வாக்குதத்தங்கள் கொடுக்கிறார். 1. கோணலானவைகளை செவ்வையாக்குவேன். 2. வெண்கல கதவுகளை உடைப்பேன். 3. இருப்பு தாழ்ப்பாழ்களை முறிப்பேன். 4. அந்தகாரத்திலிருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்திலிருக்கிற புதையல்களையும் உனக்கு கொடுப்பேன். 5. நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.

இன்று புறஜாதியாராகிய நம்மையும் தாயின் வயிற்றிலிருந்து தெரிந்தெடுத்து, பெயர் சொல்லி கோரேஸை போல அழைத்தார் அல்லவா? அப்படியானால் அவனுக்கு கொடுத்த இந்த வாக்குதத்தங்களை, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள நாம் பாத்திரவான்களா என்பதை சிந்திப்போம்.

கர்த்தருடைய ஆடுகளாகிய, எண்ணற்ற அழிந்து போகிற ஆத்துமாக்களுக்கு கர்த்தரை பற்றியும், சுவிசேஷத்தின் நற்செய்தியையும் கூறி, அவர்களுக்காக ஜெபித்து அவர்களை மேய்க்கிற கர்த்தருடைய மேய்ப்பர்களாக செயல்படுகிறோமா?

ஆத்துமாக்களை கர்த்தருடைய ஆலயங்களாக கட்டி எழுப்ப, அவருக்கு பிரியமானதை நிறைவேற்றுகிறோமா?

கர்த்தரால் அபிஷேகம் பெற்றிருக்கிறோமா?

கோரேஸிடம் பேசின கர்த்தர் நம்மோடு பேசுகிறாரா? இந்த நெருக்ங்கமான உறவு கர்த்தரோடு நமக்கு உண்டா?

ஆசீர்வாதத்தின் வாக்குதத்தங்களை பெற்றுக்கொள்ள நாம் பாத்திரவான்களா?

இல்லையெனில் என்னையும் கோரேஸை போல ஆத்துமாக்களாகிய ஆலயங்களை கட்ட அபிஷேகியும். என்னோடு பேசும், ஆசீர்வதியும் என ஜெபிப்போம். ஆமேன். அல்லேலூயா.

Dr. Padmini Selvyn