Act 8:14.

சிதறி போனவர்கள் எங்கும் சுற்று திரிந்து சுவிசேஷம் அறிவித்தார்கள்! சபைக்கு மிகுந்த துன்பம் வந்தது. சபை சிதறினது! இது தேவ சித்தம் தானா? என்று இந்த பதிவில் தியானிக்க கர்த்தர் உதவி செய்வாராக!

பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் பிள்ளைகளுக்கு யாராவது விரோதமாக வந்தால் அப்படி விரோதமாக வருகிறவர்கள் தான் சிதறடிக்க படுவார்கள் என்று கர்த்தரின் வாக்கு கொடுக்க பட்டுள்ளது. அப்படி எனில் கர்த்தருடைய பிள்ளைகள் அதுவும் புதிய ஏற்பாட்டில் சபையை சிதரடிப்பது தேவ சித்தம் தானா?

ஆனால் வேதத்தில் நாம் பார்க்கும் போது கர்த்தருடைய பிள்ளைகள் கூட சிதறடிக்க பட்டுள்ளனர்! ஏன்? எதினால்?

  1. விக்கிரகங்களை வழிபட்டு கர்த்தருக்கு கோபம் மூட்டின படியால் நதிக்கு அப்பால் சிதர்டித்தார். I ராஜா 14:15
  2. கர்த்தரின் கட்டளையை மீறி செயல் பட்டதினால். நேகே 1:8
  3. யுத்தங்களில் ஜனம் பிரியபட்ட போது சிதறி போனார்கள். சங் 68:30, II நாள 18:16
  4. மேய்ப்பர்கள் வெட்டப்பட்ட போது, மேய்ப்பர்கள் கர்த்தரை தேடாமல் தங்களை மேய்த்து, ஜனத்தை பராமரிக்காமல் இருந்த போது, சகரி 10:2, 13:7, எரே 10:21, 23:1,2, 25:34, யோவா 10:12, மத் 26:31, எசே 34:6

இப்படி சிதறடித்ததினால் என்ன பயன்!

A. கர்த்தர் என்று அறிந்து கொண்டார்கள் ஏசே 12:15

B. தேசத்தில் அசுத்தங்களை ஓய பண்ணினார் எசே 22:15

C. கர்த்தர் நியாயம் தீர்த்தார் எசே 36:19

D. மீதியான ஒரு கூட்டத்தை தேசத்தில் பரிசுத்தமாக வைத்தார் எசே 6:8

ஆனாலும் முழுவதும் அவர்களை கைவிடாமல் அவர்களோடு இருப்பேன் என்றும், (எசே 11:16), அவர்களை எந்த தேசத்தில் சிதரடித்தாரோ அங்கு இருந்து கொண்டு வந்து எருசலேமில் குடி இருக்க பண்ணுவேன் என்றும் எசே 11:17, 28:25, அவர்கள் கர்த்தரை பணிந்து கொள்வார்கள் என்றும், அவரகள் குமாரத்திகள் காணிக்கை கொண்டு வருவார்கள் என்றும் செப் 3:10 சொல்லி அவர்களை திரும்ப சொந்த நாட்டிற்கு கொண்டும் வந்தார்.

ஆனால் புதிய ஏற்பாட்டு சபை சிதறடிக்க பட்டது நியாயம் தானா?

இயேசு கிறிஸ்து சொன்னார் அவரோடு சேர்க்காதவன் சிதறடிக்கிரான். அப்படி என்றால் ஏன் சபை சிதறடிக்க பட்டது? சபைக்குள் இருந்த கேடுகள் என்ன? அதே அப்போஸ்தலர் புத்தகத்திலிருந்து ஐந்தாவது அதிகாரத்தை வாசித்தால் தங்களை பெரியவர்கள் என்று அறிவித்த இரண்டு கூட்டத்தினர் சிதறடிக்க பட்டத்தை நாம் வாசிக்க முடியும்!

ஒன்று: தேயுதாஸ் என்பவன் தன்னை ஒரு பொருட்டாக எண்ணி செத்து போக அவன் பக்தர்களும் சிதறி போனார்கள். Act 5:36

இரண்டு: கலிலெயனாகிய யூதாஸ் அவனும் மரித்து போக அவன் பக்தர்கள் சிதறி போனார்கள். Act 5:37

இதே சிதரடிப்பு சம்பவம் சபையிலும் நடந்தது ஏன்? அது நடை பெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

A. சோதிக்கிறவனுக்கு இடம் கொடுத்த அனன்னியா மற்றும் சப்பீரால். Act 5:1-

எல்லாரும் பொதுவாக அனுபவித்து வந்த போது, யாரும் தனக்குரியது என்று சொல்லாத போது, இவர்கள் தங்களுக்கு என்று ஒரு பகுதியை எடுத்து வைத்து வஞ்சனை செய்த அந்த நிமிடமே வஞ்சக சிதரடிக்கிறவன் உள்ளே நுழைந்து விட்டான். அவர்கள் நியாயத்தீர்ப்பு அடைந்தாலும் குறுகிய காலத்தில் தானே சபை சிதறடிக்க பட்டது.

அவர்கள்

  1. சாத்தானால் இருதயம் நிறைய விட்டு கொடுத்தார்கள்
  2. கேடான எண்ணத்தால் நிரைந்தார்கள்
  3. பொய் சொன்னார்கள்
  4. பரிசுத்த ஆவிக்கு விரோதமாக அவரை சோதிக்க ஒருமன பட்டார்கள்.

எப்பொழுது கர்த்தருடைய காரியங்களை நாம் நமக்கு என்று (நான் & எனக்கு) உரிமை பாராட்டுகிறோமோ அப்போது புரிந்து கொள்ள வேண்டும் சிதறடிப்பு நடக்கிறது. பாபேல் கோபுரம் கட்டும் பொது ஏற்பட்ட அதே சம்பவம் இங்கு நடக்கிறது. தங்கள் பெயர் பிரஸ்தானம், தங்கள் மகிமை, தங்கள் சுயம், தங்கள் பெருமை என்று எப்போது பாபேல் கோபுரம் கட்டினார்களோ அப்போதே சிதரடிக்கிரவன் உள்ளே நுழைந்து விட்டான். கர்த்தருடைய மகிமை, கர்த்தருடைய விடுதலை, கர்த்தருடைய ஆசீர்வாதம் மற்றும் கர்த்தரின் சபையை எப்போது நமது சுய காரியங்களுக்கு வேண்டி எடுத்து நம்மை ஒரு பொருட்டாக எண்ணுகிறோமோ அப்போது சிதரடிப்பு நிச்சயம் நடக்கும்.

Solution:

எனவே சகரியா தீர்க்கதரிசி தரிசிப்பது போல, சிதறடிக்க செய்கிற அந்த நான்கு கொப்புகளாகிய

  1. பெருமை- அகந்தை, மெட்டிமையின் எண்ணம்,
  2. சுயநலம் மற்றும் சுய தம்பட்டம்
  3. கர்த்தருடைய காரியங்களை அபகரித்தல் மற்றும் வஞ்சனை
  4. பொய் பித்தலாட்டம் மற்றும் மாயம் போன்றவைகளை நம்மை விட்டு அகற்றி நாகூம் தீர்க்கதரிசி சொல்வது போல அரண்களை காத்து, வழிகளை காவல் பண்ணி, அரயை கட்டிகொண்டு, பெலனை தரித்து கொள்ள வேண்டும். ஏனெனில் சிதரடிக்கிறவன் நமக்கு முன்பாக நிற்கிறான். நமக்கு ஒரு யுத்தம் உண்டு என்று பவுல் சொல்கிறார். சர்வாயுத வர்க்கத்தை தரித்து கொண்டு பிசாசின் தந்திரங்களை அறிந்து கொள்ளவும் எதிர்க்கவும் திராணி உள்ளவர்களாக மாறுவோம் ஏனெனில் அவனது தந்திரங்களை நாம் அறியாதவர்கள் அல்லவே!

B. விசாரணை மற்றும் நிர்வாகம் சரியில்லை என்று முறுமுறுத்த கிரேக்க விசுவாசிகள். Act 6:1

வனாந்தரத்தில் எப்போது எல்லாம் இஸ்ரேல் ஜனங்கள் முறுமுறுத்தார்களோ அப்போது எல்லாம் கோபாக்கினை வெளிப்பட்டது. நம்மை நடத்துகிறவர்கள், நம்மை விசாரிக்க ஏற்படுத்த பட்டவர்கள், நமக்காக பரிந்து பேசுகிறவர்கள், நமக்காக விண்ணப்பம் பண்ணுகிறவர்கள் பேரில் ஏதாவது குறைபாடு இருந்தால் சற்றே சகிக்க வேண்டும், என் பெலவீனத்தை சற்றே சகித்தால் நல்லது என்று கொருந்து சபைக்கு பவுல் எழுதுகிறார். நிர்வாக குறைபாடுகளை வைத்து முறுமுறுத்து கொண்டு இருந்தால் அதில் கர்த்தர் பிரிய படுவதில்லை, மாறாக சகிக்க வேண்டும், மன்னிக்க வேண்டும், பொறுமை காக்க வேண்டும். ஆரோனின் அழைப்பை குறித்து முருமுறுத்த கொராகின் புத்திரர் பூமி பிளந்து விழுங்க பட்டார்களாம். மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தவர்கள் வனாந்தரத்தில் அழிக்கப்பட்டனர், ஏன் மூர்முறுத்த மீரியாமையே கர்த்தர் அழித்து போட்டார். கூடாரத்தில் முறுமுருத்த ஜனங்களும் அழிக்க பட்டனர்.

Solutions:

இயேசு கிறிஸ்துவை பாருங்கள். ஐந்து அப்பம், ரெண்டு மீன் தான் கையில் இருக்கிறது. பதட்ட படவில்லை! மாறாக பிதாவிடம் கொடுத்து ஷோத்திரம் செலுத்தி அதை பரிமாற சொல்கிறார். முடிவு, மீதி எடுத்தார்கள். எனவே குறைவுகளில் துதி செலுத்தி கர்த்தரை மகிமை படுத்துங்கள், பிசாசு ஓடி போவான். மீதி எடுக்க கர்த்தர் உதவி செய்வார். துதி ஆராதனை இல்லாத இடத்தில் பிசாசு நுழைந்து விடுவான். எனவே உங்கள் சபை, குடும்பம் மற்றும் வீடுகள் கர்த்தரை துதிக்கும் துதினால் நிரம்பட்டும்.

எல்லா சுழலிலும் மனரம்மியமாக இருக்க கற்று கொள்ளுங்கள். இப்படி தான் வாழ்வேன் என்று அடம் பிடிக்காதீர்கள். ஏனெனில் அதே எருசலேமில் தான் ஒரு பஞ்சம் பிற்காலத்தில் ஏற்பட்டது. எனவே வஞ்சனை இல்லாமல் பகர்ந்து கொடுங்கள்.

உங்களை நடத்துகிறவர்களை சகித்து கொள்ளுங்கள். அவர்கள் குறைகள், அவர்கள் பேலவீனங்களை மன்னித்து ஏற்று கொள்ளுங்கள். அவர்கள் ஊழியம் உங்களுக்கு பிரயோஜனப்பட அவர்களுக்கு அடங்கி இருங்கள். ஏனெனில் அவர்களை விசாரிக்க ஏற்படுத்தின ஸ்தேவான், ஃபிலிப் பின்னாட்களில் அந்த பணிவிடையை செய்ய முடியவில்லை கர்த்தர் அவர்களை சுவிசேஷ ஊழியத்திற்காக வெளியே கொண்டு போய்விட்டார்.

உலகத்தாரிடம் உங்கள் வழக்குகளை தொடுக்காதீர்கள். கர்த்தரின் சபைக்கு, கர்த்தரின் ஊழியத்திற்கு அடுத்த காரியங்களை கர்த்தரின் சமூகத்தில் வைத்து தீர்வு காணுங்கள். நாம் உலகத்தை நியாயம் தீர்ப்போம் என்று அறிந்து கொண்டு உங்களை நடதுகிறவர்கள் துக்கத்தோடு அதை செய்யாமல் உற்சாகமாக செய்ய இடம் கொடுங்கள். சபை நிர்வாக குறைபாடுகள் சபைகுள்ளே தீர்க்க படவேண்டும். சாட்சி உள்ள, ஞானம் உள்ள, அபிசேகம் நிறைந்த, உண்மையுள்ள சிரியவர்களை ஏற்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்யுங்கள்.

C. தேவதிட்டத்தை அல்லது தேவ தரிசனத்தை மட்டுப்படுத்தின அப்போஸ்தலர்கள். Act 6:4

கர்த்தருடைய பெரிய திட்டம் உலகமெங்கும் போய் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும். பரிசுத்த ஆவியை பெறும் மட்டும் எருசலேமில் காத்திருக்க சொன்னார். யூதேயா, சாமாரியா மற்றும் உலகமெங்கும் சாட்சியாக மாறவேண்டும் அதுதான் தேவ திட்டம். பூமியின் கடைசி பரியந்தம் சுவிசேஷம் அறிவித்து, சீசராக்கி, சபை ஸ்தாபிக்க வேண்டும் அதுதான் பிரதான கட்டளை. அதற்கு தான் எல்லாவற்றையும் விற்க வைத்து ஒரு கூட்டத்தை கர்த்தர் சேர்த்தார். எல்லா all provisions are made but they never seemed to be bothered about the great commission of Jesus Christ. பேதுரு சொல்வதை கவனியுங்கள். நாங்கள் ஜெபிப்பதிலும், போதிப்பதிலும் தரித்து இருக்க வேண்டும் என்று சொல்கிறாரே தவிர உலகமெங்கும் போய் சுவிசேஷம் அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லாமல் எருசலேமில் சுற்றி சுற்று வருகிறார்கள். கொர்நெல்வு வீட்டிற்கு போக கூட வெளிப்படையான தேவ தரிசனம் பெற்று தான் போக வேண்டி இருந்தது. அதினால் என்னமோ கர்த்தர் ஸ்தேவான் ஃபிலிப் போன்றவர்களை சுவிசேஷ ஊழியத்திற்காக வல்லமையான நிலையில் பயன் படுத்தி பின்னாளில் பவுலை கர்த்தர் தெரிந்து எடுத்தார் போல. Philip, பவுல் மற்றும் Barnaba போன்றவர்கள் சுவிசேஷம் அறிவித்த போது ஏற்பட்ட அற்புத அடையாளங்களை அப்போஸ்தலர்கள் கேள்வி பட்டு தான் அங்கு போனார்களே தவிர அவர்களாகவே ஒரு தரிசன திட்டத்தை ஏற்படுத்தினதாக பைபிள் சொல்ல வில்லை மாறாக அவர்கள் எருசலேமில் இருந்து விட்டார்கள் என்று குறிப்பிடுகிறது.

எந்த ஒரு சபை எண்ணிக்கையில் திருப்திப்பட்டு, அதற்காக மட்டும் ஜெபித்து, அவர்களுக்காக மட்டும் உபதேசித்து, கிறிஸ்துவின் பிரதான கட்டளையை நிறைவேற்ற திட்டமிடாத, தரிசனம் பெறாத, எந்த ஊழியமும் நிலைத்து இருப்பதில்லை. Missionary தாகம் இல்லாத சபை பிசாசின் தாலாட்டின் பிடியில் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமில்லை. எனவே.

Solutions:

மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை குறித்து அலற வேண்டும் என்று வசனம் சொல்கிறது. காணாமல் போன ஆடுகளை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

ஆடுகளை நன்றாக அறிந்து, விசாரித்து, நசல் கொண்டவைகளை திடபடுத்தி, பெலவீன ஆடுகளை பெலப்படுத்தி அவைகளை கிறிஸ்துவில் வளர பண்ண வேண்டும்.

. Great commission ஐ நிறைவேற்ற திட்டம் வகுத்து, தரிசனம் கொடுத்து ஊழிய வாஞ்சையை missionary தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

சகறியா தீர்க்கதரிசி சொல்வது போல விசுவாசிகளில் ஊழிய அழைப்பு உள்ள நான்கு தொழிலாளிகளை போன்ற அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், மெய்ப்பர் மற்றும் போதகர் மேலும் சுவிசேகற்களை அறிந்து, வரங்களை கண்டு பிடித்து அவர்களை உலகமெங்கும் அனுப்பி விட வேண்டும்.

D. சரீர பிறகாரமான அல்லது உலக பிரகாரமான காரியங்களை நிறைவேற்ற தன்னை விற்று போட்ட நிக்கோலா மதஸ்தர்.

பணிவிடை பந்தி விசாரிப்பு ஊழியம் செய்ய ஏற்படுத்த பட்ட இந்த நிக்கோலசு பின்னாளில் அதில் அதீத கவனம் செலுத்தி ஜீவனை விட ஆகாரம் தான் முக்கியம், சரீரம் தான் முக்கியம், சரீரம் இருந்தால் தான் ஆவி செயல்பட முடியும் என்று உலகத்தின் அல்லது சரீரத்தின் காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆவிக்குரிய காரியங்களான தேவ ராஜியம், ஆவிக்குறிய வரங்கள், கனிகள் நியாய தீர்ப்பு, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, வரப்போகிற நித்திய ராஜியம் போன்றவற்றை நிராகரித்து புசிப்போம் குடிப்போம் என்று இவ்வுலக காரியங்களுக்கு அதீக முக்கியத்துவம் கொடுத்து ஆவிக்குரிய காரியங்களை ஊதாசீனம் செய்ததாக கூறப்படுகிறது. அப்படியே பிற்காலத்தில் இந்த உபதேசம் எபேசு மற்றும் பர்கமு சபையிலும் பரவி அந்த சபைகளை அது கெடுத்து போட்டது. எனவே தான் அந்த சபைகள் ஆவியானவரின் கடிந்து கொள்ளுதலுக்கு உள்ளாயின.

Solution:

சபைகளில் கிறிஸ்துவின் வருகை, நமது நம்பிக்கையாக இருக்கும் உயிர்த்தெழுதல், ஆயிர வருட அரசாட்சி, நித்திய ராஜியம், நியாதீர்ப்பு போன்ற ஆவிக்குரிய வருங்காரியங்களை குறித்து பேசி, பக்தி விருத்தி, பரிசுத்தம், சுத்திகரிப்பு, ஆயத்தம், பிசாசின் கிரியைகளை அழிக்க திராணி, போன்ற காரியங்களில் அதிக கவனம் செலுத்தி வரப்போகிற காரியங்களுக்கு வேண்டி அதிக கவனம் செலுத்த வேண்டும். வெறும் உலக காரியங்களை, மாம்சீக காரியங்களுக்கு மட்டும் தீனி போட்டு சபையை நடத்தினால் நம்மை போல பரிதவிக்க பட்டவர்கள் யாரும் இல்லை.

எனவே சோதிக்க படுகிற எவனும் தான் தேவனால் சோதிக்க படுகிறேன் என்று சொல்லாமல் இருக்க எச்சரிக்கை தேவை. சரியான தேவ திட்டத்தில் அன்றைய சபை இயங்கி இருந்தால் அப்படி பட்ட சோதனை வர வேண்டிய அவசியம் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் கிருபை உள்ள கர்த்தர் சிதறி திரிந்தவற்களை கொண்டு சுவிசேஷம் அறிவிக்க வைத்து பின்னாட்களில் அவர்களை அதே பேதுரு கொண்டு அவர்களுக்கு நீருபமும் எழுதி பேதுருவின் (I Peter 1:1) கையாலே தேவ திட்டத்தை புரஜாதிகள் மத்தியில் நிறைவேற்றின பவுலை பாராட்டவும் வைத்தார். எந்த சபை தேவ திட்டத்தில் இயங்குகிறதோ அங்கு சிதறடிக்கிறவனுக்கு வேலை இல்லை. ஆனாலும் அதே சபையை தேவ திட்டத்தில் கொண்டு வர கர்த்தர் சிதர்டிக்கிறவனை அனுப்பி தேவ திட்டத்தில் கொண்டு வந்து தமது மகிமையை வெளிப்படுத்துகிறார்.

இதுவே நமது சபைகள் சிந்திக்க வேண்டிய காலம். செயல்பட வேண்டிய நேரம். ஆதி சபையே சிதறி போனாது என்றால் நாம் எம்மாத்திரம்! எனவே அரண்களை காத்து கொள்வோம். சாத்தானின் தந்திரங்களை அழிப்போம்..கர்த்தர் சீக்கிரம் வருகிறார். பூமியை நீதியோடும் நிதானத்தோட்டும் நியாயம் தீர்க்க வருகிறார்.

செலின்.