ஆண்கள் மேலே ஆண்களும் பெண்கள் மேலே பெண்களும் ஈர்க்கப்பட்டு பிணைக்கப் படுவது சரிதானா?

இன்று உலகில் நடக்கும் காரியங்களை பார்க்கும் போது நாம் கடைசிக் காலத்தில் அதாவது உலக மதங்களின் அடிப்படையில் கலியுகத்தில் வாழ்ந்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெல்ஜியத்தில் Antwerp zoo வில் வேலை பார்த்து வரும் ஒரு பெண் அலுவலருக்கும் அதே zoo வில் அடைக்கப் பட்ட ஒரு கொரில்லா குரங்குக்கும் ஏற்ப்பட்ட விகற்பமான காதல் உணர்ச்சி அந்த பெண் அலுவலரையே வேலையை விட்டு தூக்க செய்தது.
இந்த கடைசிக் காலத்தில் உள்ள மனிதர்களின் உறவுகளின் taste கொஞ்சம் வித்தியாசமாகவே காணப்படுகிறது. மிருகங்களோடு அதீத பாசம் அது பின்னர் தவறான உணர்ச்சியில் போய் விடுகிறது.
வயது குறைந்தவர்களிடம் வயதானவர்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு, நடுத்தர வயதினர் அதாவது adult எதிர்பாலர் மீது வாலிபர்களுக்கு ஏற்படும் அதீத ஈர்ப்பு, adult வயதினருக்கு வாலிபர்கள் மீது ஏற்படும் அதீத ஈர்ப்பு, திருமணம் ஆனவர்களுக்கு பிற திருமணம் ஆனவர்கள் மீது ஏற்படும் ஈர்ப்பு, ஆண்கள் மீது ஆண்களுக்கும், பெண்கள் மீது பெண்களுக்கு என்றும் அதீத உணர்ச்சிகளின் ஈர்ப்பு என்று எல்லா ஈற்ப்புகளும் நியாயப் படுத்தப் பட்டு அவைகள், சட்டங்களாகவும் மாற்றப்பட்டு அப்படிப்பட்ட உறவுகளை புனிதமாகவும் அதே நேரத்தில் பாரம்பரியமாக போற்றப்பட்டு வரும் நேர்த்தியான உண்மையான திருமண உறவுகள் குற்றப்படுத்தப்பட்டு அவமதிக்கப் படும் காலக்கட்டங்களில் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்பதை யாரும் மறுக்க இயலாது. மேற்ச்சொல்லப்பட்ட அனைத்தும் தவறு என்று அறிந்து இருந்தும் புனிதம் என்று போற்றப்படும் ஒரு காலத்தில் வாழ்ந்து வருகின்றோம்.
ஏன் இப்படிப்பட்ட காரியங்கள் இந்த உலகில் நடைபெற வேண்டும்? இவைகளுக்கு பரிகாரம் என்ன என்பதை தொடர்ந்து கவனிக்க கர்த்தர் கிருபை தருவாராக?
காரணங்கள் மற்றும் பரிகாரங்கள் என்ன?
A. இது தெய்வீக அறிவில் உள்ள அறியாமையின் குறைபாடு (It is an ignorance of divine knowledge about God)
தேவன் பரிசுத்தர் என்று மனசாட்சியில் அறிந்து இருந்தும், அவரை பரிசுத்த தேவன் என்று அறிந்தும் நாவினால் அறிக்கை செய்யாமல் அவரை ஸ்தோத்திரம் செய்து மகிமைப் படுத்தாமல் வீணானவைகளை பின்பற்றி மனம் போன வாழ்வை வாழ பரிசுத்த தெய்வத்தை புறம் தள்ளி அசுத்தத்தில் பிரியப் பட்டு தனிமையை போக்கிறோம் என்று வாழ்வின் அற்ப சந்தோசம் அடைய தங்களுக்கு இஷ்டம் போல வாழ்வதற்கு உரிய கற்பனை கதைகள், கற்பனை உருவங்கள், கற்பனை உறவுக் கதைகள் மற்றும் புராணங்கள் கொண்டு தன்னிச்சையான வாழ்வை வாழும் சிந்தையில் வீணானவர்களின் அறியாமை தான் இதற்கு காரணம். முடிவில் தேவன் அவர்களை அந்த அசுத்த சிந்தைகளுக்கு விட்டுக் கொடுத்து அதினால் வரும் இச்சை ரோகங்களுக்கு ஒப்புக் கொடுத்தார் என்று சத்திய வேதம் நமக்கு கற்றுத் தருகிறது. பரிசுத்த கர்த்தரை அறிகிற அறிவு தான் ஒருவரை பரிசுத்த காரியங்களை செய்ய தூண்டும். அந்த அறிவில் கேடு வந்தால் அது மொத்தத்தையும் கெடுத்து விடும்.
பரிகாரம்
நம்மை தேவன் தம்முடைய சாயலில் உருவாக்கி ஆணும் பெண்ணுமாக அவரவருக்கு உரிய சுபாவம், அமைப்பு, உணர்வு போன்ற நிலைகளை கொண்டே சிருஷ்டித்தார் என்கிற எண்ணத்தில் வர வேண்டும் ஏனெனில் அவரே ஆதாமுக்கு ஏவாளை உருவாக்கி கொடுத்து அவனை இந்த உலகில் குடும்பம் மற்றும் தோட்டத்தை பண்படுத்தும் வேலையையும் அதோடு சேர்த்து அவன் தீர்மானம் எடுக்க கட்டளை கொடுத்தார். திருமணம் தாம்பத்தியம் போன்ற உறவு சார்ந்த ஒரு அமைப்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் கர்த்தரே ஏற்படுத்தினார். எனவே நமது தனிமையை போக்க நமக்கு ஏற்ற துணையை அவரே ஏற்படுத்துவார் என்கிற எண்ணத்தில் சிருஸ்டிகரை அறிகிற அறிவில் வர வேண்டும். என் தனிமையை மிருகம் அல்லது தன்னை சார்ந்த நபரால் அனுபவிக்க கர்த்தர் கொடுத்த கட்டளையை மீறி நமக்கு நாமே திட்டம் வைத்து செயல்பட்டால் அதன் முடிவு கடினமே. என்ன வேண்டுமென்றாலும் இந்த உலகில் செய்யலாம் ஆனால் எல்லாவற்றையும் கர்த்தர் நியாயத்தில் கொண்டு வருவார் என்கிற எண்ணத்தில் சிருஸ்டிகரை நினைத்தால் அதுவே வாழ்வின் இறுதியில் நன்மையை கொண்டு வரும்.
B. இது அறநெறி தத்துவங்களின் முரண்பாடு (It is a result of moral and ethical conflict)
தெய்வீக சாயலில் தெய்வீக அறநெறியும் கலந்தே இருக்கும். தெய்வம் பரிசுத்தர் என்றால் அதை விசுவாசிப்பவரிடம் அதே பரிசுத்த அறநெறியும் செயல்பட வேண்டும். அதேப் போல கர்த்தர் நீதியுள்ளவர், அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், உண்மை உள்ளவர், உடன்படிக்கையை காப்பவர், நல்ல பக்தியுள்ள சந்ததியை உருவாக்கும் சிருஸ்டிகர்த்தர், ஞானமுள்ளவர், வல்லமையுள்ளவர், என்று நாம் அறிந்து விசுவாசித்தால் நம்மில் அந்த அறநெறி கொள்கைகளும் பிணைந்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவைகளை அவரே எழுதிக் கொடுத்த வசனங்களின் அடிப்படையில் நாம் அறிந்து கொண்டு அவரது பரிசுத்த வார்த்தைகளின் வழியாக நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். அவைகளை வெறுத்து, அவைகளின் கட்டுப்பாடுகளை அற்பமாக அல்லது கொடூரமாக எண்ணி, நாங்கள் அவைகளை நம்ப மாட்டோம், அவைகள் எங்கள் சுகபோக வாழ்வை தடுக்கிறது, எங்கள் ஆசைகள் விருப்பங்களுக்கு ஒத்துப் போகவில்லை, நாங்கள் தானாக இந்த உலகில் வந்தவர்கள், எங்களுக்கு உரிய வாழ்வை எங்களுக்கு இசைந்த வழியில் நாங்களே அமைத்துக் கொள்வோம் என்கிற எண்ணங்களில் வெளிப்பட்ட தெய்வமற்ற தத்துவங்களின் பிரதிபலிப்பே இவைகளுக்கு பெரும் காரணம். பிதா தமது குமாரனாகிய கிறிஸ்துவை வெளிப்படுத்தி நமக்கு பரிகாரம் செய்தார். அதை ஒரு தோல்வியாக கருது கிறிஸ்துவை அற்பமாக எண்ணும் எண்ணமும் இதற்கு ஒர் எடுத்துக்காட்டு.
பரிகாரம்
அவர் எழுதிக் கொடுத்த வார்த்தைகளுக்கு திரும்ப வேண்டும். கிறிஸ்துவை நோக்கி பார்க்க வேண்டும். நமது உறவுகள் எப்படி இருக்க வேண்டும், நாம் யாரோடு திருமணம் செய்ய வேண்டும்? நமது sexual உணர்வு, குடும்ப உணர்வு, எப்படி இருக்க வேண்டும் என்று அறிய வசனத்திர்க்கு திரும்ப வேண்டும். அவரது வார்த்தையில் சொல்லப்பட்ட பரிசுத்தம், நீதி, அன்பு மற்றும் இரக்கம் சார்ந்த அறநெறிகளை கடைபிடிக்க வேண்டும். அவர் ஒவ்வொருவரும் எப்படி வாழ்ந்து நித்திய தெய்வீக சந்தோசத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எழுதி தந்த வேத வசனங்களின் படியும் கிறிஸ்துவின் வாழ்வின் படியும் அவைகளை பின்பற்றி வாழ்ந்தால் என்றும் நாம் பக்கியவான்களே! கணவன் மனைவி உறவு, பெற்றோர் பிள்ளைகள் உறவு, தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, சபை மக்கள் உறவு, சமுதாய உறவு, விலங்குகளின் உறவு, கடவுளின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று Bible சத்திய வசனங்களை எடுத்து நன்றாக போதிக்கின்றது. அவைகளை மீறுவதே அறநெறி கேடு அதை பாவம் என்கிறோம். சத்திய வார்த்தை மூலம் கர்த்தர் எப்படிப் பட்டவர் என்பதை நன்றாக அறிந்துக் கொள்ளலாம். அவரது வார்த்தைகளை விசுவாசித்து நடக்க வேண்டும்.
C. இது வாழ்வின் மோசமான அனுபவங்களின் முரண்பாடு (It is a confrontation of bad experiences in life)
வாழ்வில் ஏற்படும் ஏமாற்றங்கள், வாழ்வில் பிறரது குறுக்கீடுகள் மூலம் வந்த கேடுகள், கெட்ட அனுபவங்கள், வாழ்வில் பிறர் மூலம் வந்த இனம் புரியாத உணர்வுகள், சின்ன சின்ன ஆறுதல் தரும் செயல்கள் சில வேளை சிலரை சிலருக்கு சிலதுக்கு அடிமைகளாகவே வைத்து இருக்கலாம். அதன் மூலம் தவறான உறவுகளை நியாயப் படுத்த எத்தனை வழி முறைகள் alternative ஆக இருந்தாலும் படைத்தவர் தந்த வழிமுறைகள் ஒரு போதும் மாறாதவைகள் என்பது தான் உண்மை. ஒரு ஆண், எல்லாரால் நான் கைவிடப்பட்ட போது என்னை விட்டு போகாத இந்த அண்ணன் தான் எனக்கு எல்லாம் அதினால் அவரையே நான் திருமணம் செய்கின்றேன் என்றால் அவரோடு இந்த ஆண் குடும்பம் நடத்த முடியாதே? அது அந்த நபருக்கு விருப்பமாக இருந்தாலும் அது பைத்தியம் அல்லவா? ஏனெனில் அந்த ஆண் அதற்கு என்று உருவாக்கப்பட வில்லையே. அவரது அவயவங்கள் மற்றும் செயல்பாடுகள் ஒன்றை ஒன்று முரணாக அல்லவோ உள்ளது. அதுவே மிருக உணர்வுகளுக்கும் பொருந்தும். தவறான அனுபவம் நமக்கு நேர்ந்ததால் தவறான உறவுகளை நியாயப் படுத்த ஒரு போதும் முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பரிகாரம்
வாழ்வின் நோக்கம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த உலகத்தோடு நம் வாழ்வு முடிந்து போவதில்லை. நமது வாழ்வின் கடைசி நிமிடங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு ஏற்ற துணையை கண்டுபிடிக்க பல வழிகளை மனித குலத்தில் மனிதனுக்கு மனுசியாகவும், மனுசிக்கி மனுசனாகவும் கொடுத்து இருக்கிறது. எனவே தான் விவாகம் கனம் பெறுகின்றது. அதற்குள் இருக்கும் உறவு அதாவது செக்ஸ் மிகவும் புனிதம். இந்த உறவின் தாம்பத்திய சந்தோசம் தான் குடும்ப உறவின் bliss ஐ கொடுக்கிறது. இது தவறான உறவில் வரும் வெற்று இணைப்பில் கிடைக்காது. விவாகம் அல்லது திருமணம் என்பதே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடப்பது. அதற்குரிய வயது குறிப்பிட்டு காலம் காலம் செயல்பட்டு வரும் இந்த அற்புதமான உறவின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வில் பாடுகள், தியாகம், அர்ப்பணிப்பு, ஏமாற்றம், அவமானம் போன்றவற்றை அனுபவிக்க வேண்டும் ஆனால் அவைகள் முடிவில் தீமையாக அல்ல நன்மையாகவே மாறுகின்றது.
D. இது பொல்லாத ஆவி மண்டலங்களின் செயல்பாடு (It is an attack of evil spirit -world)
சத்தியத்திர்க்கும் உண்மைக்கும் எதிராக அல்லது எதிர்மறையாக எப்பொழுதும் ஒரு counterfeit ஆவி கிரியை செய்துக் கொண்டு இருக்கும் இந்த உலகில் அந்த எதிர்மறையாக இருக்கும் அந்த energy தெரிந்தோ தெரியாமலோ நம்மில் உருவாக சிந்தையில் உள்ளத்தில் இடம் கொடுத்தால் அது நமது சிந்தையை ஆட்கொண்டு அதை போலவே நம்மை மாற்றி விடும். அதினால் தான் இப்படிப் பட்ட சிந்தைகள் அல்லது ஆவிகள் கிரியை செய்து நம்மை கைப்பற்றி அழிப்பதற்கு முன் நாம் அவைகளை மேற்கொள்ள வேண்டும். தவறான ஆராதனை முறை, தவறான கடவுள் கதைகள், தவறான கடவுள் போதனை, தவறான கடவுள் பிணைப்பு போன்றவை இப்படிபட்ட ஆவிகளை நம்மில் புகுத்தி விட்டு நம்மை சீரழிக்கின்றன.
பரிகாரம்
சத்தியத்தை அறிய வேண்டும் ஏனெனில் சத்தியம் தான் ஒரு மனிதனை விடுதலையாக்கும். பொய்யான கட்டுக் கதைகளை செவிக்கு இனிமையாக இருந்தாலும் புறம் தள்ள வேண்டும். கணவன் மனைவி என்கிற உண்மையான உறவு அல்லது அதன் தற்கால எதிர்கால வலிமையை உணர வேண்டும். இயேசு கிறிஸ்து நானே வழியும் சத்தியமும் ஜீவனும் என்று சொன்ன வார்த்தையின் உண்மையை தேடி ஆராய வேண்டும். வாழ்வின் எதார்த்தம் புரிய வேண்டும். வித்தியாசமான அணுகுமுறை என்று விகற்பமாக எதையும் செய்யாமல் இருக்க வேண்டும். ஆவிகளை பகுத்தறிய பரிசுத்த ஆவியின் நிறைவை பெற்ற வாழ்வை தேட வேண்டும். வசனத்தையும் கர்த்தரின் இரத்தத்தையும் அவரது நாமத்தையும் வேலியாக கொள்ள வேண்டும்.
E. இது தவறான சூழல்களின் மூலம் வரும் தாக்கம் (It is an effect of negative environment)
நண்பர்களை சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்பது பழமொழி. தவறான கலாச்சார வாழ்க்கை முறை, தவறான கதைப்படங்கள், தவறான சீரியல்ஸ் மற்றும் documenteries போன்றவற்றில் அதீத ஈடுபாடு போன்றவை இவைகளில் அடங்கும். தவறான வழிகளில் கலாச்சாரத்தை காரணமாக கொண்டு தவறான உணர்வுகளை தவறான நபர்களிடம் வெளிப்படுத்தி ரகசிய அறைகளில் அல்லது இடங்களில் தங்கள் சுய இன்பங்களை அனுபவித்து, செய்த தவறுகளை நியாயப்படுத்தி திருட்டுத்தனமாக அந்தரங்க சுகத்தை அனுபவித்து வெளியரங்கமாக நாங்களும் மனிதர்கள் தான், எங்களது உறவுக்கும் மரியாதை தர வேண்டும் என்று போர்க் கொடி தூக்கும் மானம் கெட்ட பிழைப்பை தேடும் எந்த சூழலும் இதற்கு ஒரு காரணமுமாகும்.
பரிகாரம்
நாம் யாரோடு பழகிறோம் என்பதில் நல்ல அறிவு வேண்டும். தவறான ஈர்ப்புகளை தவறு சென்று கடிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் சரி என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நன்மை எது? தீமை எது என்று அறியும் பகுத்தறிவு வேண்டும். பிள்ளைகளின் ரகிசிய வாழ்வை கண்காணிக்க வேண்டும். ஒரே பாலினத்தவர் தங்கி வேலை செய்யும் இடங்கள் தங்கி படிக்கின்ற இடங்களில் உள்ள நிறைகுறைகளை செய்வனவென்று கருத்தில் கொள்ள வேண்டும். வெட்கமான அந்தரங்க காரியங்களை வெறுத்துத்தள்ள வேண்டும். அந்நிய நுகத்தில் பினைக்கப் படக்கூடாது. தவறான கலாச்சார போதனைகள், தவறான கதைகள், இரட்டை அர்த்தக் பேச்சுக்களுக்கு விலகி இருக்க வேண்டும். எல்லாவற்றையும் அனுபவிக்க நமக்கு முடியும் ஆனால் எல்லாம் நமக்குத் தகுதியாக இராது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அற்ப சந்தோஷத்திற்காக நல்ல எதிர் காலத்தை இழந்து போக கூடாது.
F. இது ஜென்ம வழிகளின் வரும் குறைபாடு (It is an hereditary defect)
சிலர் இயற்கையாகவே அண்ணகற்களாக பிறப்பது உண்டு. சிலர் பண்டைய நாட்களில் அரண்மனை பாதுகாப்பு விசயங்களுக்காக அண்ணகர்களாக மாற்றப்பட்டதும் உண்டு. ஒவ்வொரு கணவன் மனைவி தாம்பத்தியத்திலும் ஒரு ஆணின் X Y chromatin package இல் உள்ள 23 chromosome பெண்ணின் X ஐ ஒரு ஆணின் X சந்திக்கும் போது பெண் குழந்தை அல்லது பெண்ணின் X ஐ ஒரு ஆணின் Y சந்திக்கும் போது ஆண் குழந்தை பிறக்கும். இந்த சந்திப்பில் குளறுபடி ஏற்படும் போது தான் இவ்விதமான foetus defects ஏற்படுகின்றது. இது தவிர்க்க முடியாதது அல்ல. ஆனால் தவிர்க்க முடியாமல் போகும் போது தான் அது பிறப்பின் பிழையாகவே மாறி விடுகின்றது. ஆனால் சிலர் அரசியல் மற்றும் ராஜரீக காரணம் கொண்டு அவ்வாறு ஆகி விடுவதும் உண்டு. இதை தானியேல் போன்றவர்களின் வாழ்வில் நாம் பார்க்க முடியும். சிலர் அண்ணகற்களாக பிறக்கவும் முடியும் என்று வேதம் சொல்கிறது.
பரிகாரம்
பிள்ளைகள் கர்த்தர் அருளும் ஈவு. எனவே கர்ப்பம் தருகின்ற போதும் அதற்கு முன் தெய்வீக பயத்தோடு செயல்பட்டு ஜென்ம கேடுகள் வராதபடி கர்த்தர் காத்துக் கொள்ள அதிக ஜாக்கிரதை கொள்ள வேண்டும். சரீரத்தில் அவ்விதமான எதிர்மறையான உணர்வுகள் வரும் போது அவைகளை உபவாசத்தில் ஜெபத்தில் அப்படிப்பட்ட கிரியைகளை கடிந்துகொண்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வெற்றிக் கொள்ள அர்ப்பணிக்க வேண்டும். பிள்ளைகளிடம் உணர்வுகளை புரிந்து நடந்துக் கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும். எண்ணங்களில் மனரீதியாக உள்ள குறைபாடுகளால் அப்படிப் பட்ட உணர்வுகள் வந்தால் அவற்றை கடிந்து கொள்ள வேண்டும். இன்றைய அறிவியல் துறையில் அவற்றை DNA மூலம் சரி செய்ய முடியுமா என்கிற கோணத்தில் ஆராச்சிகள் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றது. மருத்துவ முறையில் சரி செய்ய முடியுமா என்பதை அறிந்து செயல்பட வேண்டும் அதையும் தாண்டி அப்படிப்பட்ட சரீர அமைப்புகளில் உணர்வுகளில் மாற்றம் வந்தால் தேவ சித்தத்திர்க்கு விட்டுக் கொடுத்து திறமைகளை வளர்த்துக் கொள்ள உற்சாகம் செய்ய வேண்டும் ஏனெனில் தானியேல் போன்ற அவரது நண்பர்களையும் கர்த்தர் அந்த நாட்களில் உயர்த்தி வைத்தார் என்பதை நாம் அறிகின்றோம். ஊழியத்தில் அரசாங்க வேலையில் பரிசுத்த ஜீவியம் செய்து திருமணம் செய்யாமல் கர்த்தர் தங்களுக்கு கொடுத்த தோற்றத்தில் பயன்பட முடியும். அதே நேரத்தில் பெண்மைக்குரிய சரீர அமைப்பு இல்லாமல் பெண்களுக்குரிய உணர்வு இருந்தால் கடிந்து கொள்ள வேண்டியது பெண்மைக்கு உரிய உணர்வுகளை தான். அதே போல ஆண்மைக்கு உரிய உடல்வாகு இல்லாமல் பெண்மைக்கு உரிய உடலமைப்பை கொண்டு ஆண் போன்ற உணர்வு கொண்டாலும் மாற்ற வேண்டியது சரீர அமைப்பை அல்ல உள்ளுக்குள் இருக்கும் தவறான உணர்வை தான். இன்று அநேகர் உணர்வின் அடிப்படையில் சரீர அமைப்புகளை அறுவை சிகிட்ச்சை மூலம் மாற்றுவது அவர்களின் உணர்வுகளில் உள்ள குழப்பத்தை காட்டுகிறது. இது ஏற்கனவே நாம் பார்த்த evil spirit இன் தாக்கமாகத்தான் பார்க்க வேண்டும். அவைகள் கடிந்து கொள்ளப் பட்டு வெற்றிப் பெற வேண்டும்.
G. இது கடைசி நாட்களின் அடையாளம் (It is a sign of end Times)
தெய்வீக சிருஸ்டிப்பின் மகத்துவத்தை தாண்டி தங்கள் மனம் போன உணர்வுகளின் அடிப்படையில் தங்களுக்கு பிரியமான வழிகளில் தங்கள் உணர்வுகளையே கெடுத்து வாழ்ந்தவர்கள் இந்த சோதோமியர்கள். தவறான புணர்ச்சிகளில் பிடிப்பட்டு, விகற்பமான உறவுகளில் தங்களை கெடுத்து அவைகளை ஒரு நாள் இன்பம் என்று எண்ணி தங்களை படைத்தவரை மறந்த இந்த சோதோம் பட்டனத்தார் அழிக்கப்பட்டார்கள் என்று வசனத்தில் பார்க்கிறோம். கிறிஸ்துவின் வருகையில் நடக்கும் அடையாளமாக இவைகள் சம்பவிக்கும் என்று வசனம் கூறுகின்றது. எனவே இந்த பொல்லாத கடைசி நாட்களில் இப்படிபட்ட உணர்வு பெருகும். பாவம் பெருகும். அக்கிரமம் பெருகும். மனிதன் அவனவன் சுய வழிகளில் நடந்து தனது ஆனந்தத்தை அனுபவித்து முடிவில் அழிந்து போகின்றான். இதை தவறு சென்று சொன்னால் பரியாசம் செய்வான். சரியாக குடும்பம் நடத்துகிறவர்களை இளக்காரமாக பார்ப்பான். அறம் கெட்ட வாழ்வு அவனுக்கு இன்பமாக இருக்கும். அறம் கெட்ட உறவு அவனுக்கு கௌரவமாக தோன்றும். தன் சரீரத்தை கண்டமானிக்கு மாற்றுவான். படைத்த தெய்வத்தை குற்றம் கண்டுபிடித்து தனக்கு அழகு என்று அருவருப்பானதை நடப்பிப்பான். எனவே!
பரிகாரம்
தலைகளை உயர்த்தி பாருங்கள் ஏனெனில் கர்த்தர் தமது வாசற்படியில் நிற்கிறார். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகி பரிசுத்தம் ஆகக்கடவோம். அசுத்தம் செய்கின்றவன் இன்னும் அசுத்தம் செய்யட்டும். விழித்து இருந்து ஜெபிப்போம். ஏனெனில் கறையற்ற மணவாட்டி சபையை சேர்த்துக் கொள்ள கர்த்தர் சீக்கிரம் வருகின்றார்.
நம்மில் யாராவது இப்படிப்பட்ட விகற்பமான பாவ உணர்வுகளில் சிக்கி இருந்தால் நம்மை உருவாக்கினரும் படைத்தவருமாகிய தெய்வத்தை நோக்கி ஓடி வருவோம். ஏனெனில் அவனவன் கிரியைக்கு தக்க பலன் அவரிடம் இருக்கிறது. அவர் உண்மையாக நியாயம் தீர்க்கின்ற கர்த்தர் அவரே. அழைத்தவரின் சாயல், படைத்தவரின் சுபாவம், கிறிஸ்துவின் மாதிரி மற்றும் வசனத்தின் சத்தியத்தை மீறி எதை செய்தாலும் அதில் கர்த்தர் பிரியமாக இருக்கமாட்டார். எனவே மனந்திரும்பி அவரது சத்தம் கேட்டு அந்தரங்க வெட்கரமான காரியங்களை விட்டு விலகி அவரது இரத்தத்தால் கழுவப்பட்டு அவர் சித்தம் செய்ய விட்டுக் கொடுப்போம் ஏனெனில் அவர் நியமித்த வழிகளை விட்டு எந்த இன்பம் அனுபவித்தாலும் அதன் முடிவு துன்பமே. அவரது வழிகளில் உள்ள இன்பம் நம்மை துன்பத்திற்கு அல்ல நித்திய மகிழ்ச்சி மற்றும் புகழ்ச்சிக்கு நேராக நம்மை வழி நடத்தும். அவர் வருகிறார். பூமியை நீதியோடும், பூலோகத்தை நிதானத்தோடும் நியாயம் தீர்க்க வருகிறார். கர்த்தர் கிருபை கூட இருப்பதாக!
செலின்